நிறைய WhatsApp குரூப் இருக்குதா? வருகிறது புத்தம் புதிய அம்சம்: முழு விவரம்.!
வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து தனித்துவமான அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய ஒரு அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
வாட்ஸ்அப் குரூப்
அதாவது வாட்ஸ்அப் தளத்தில் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத குழுக்களை ( வாட்ஸ்அப் குரூப்) எளிமையாக நீக்க ஒரு புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த அம்சம் மூலம் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் மெமரியை சேமிக்கலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக வாட்ஸ்அப் செயலி ஆனது டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதேபோல் இந்த தளத்தில் பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் பல்வேறு குழுக்களை உருவாக்கி தகவல்களைப் பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் Expiring குரூப்ஸ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தகவலை Wabetainfo தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் மூலம் தான் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத வாட்ஸ்அப் குழுக்களை அடையாளம் கண்டு நீக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிறந்தநாள், திருமணம், ட்ரீட் போன்றவற்றை நண்பர்கள், உறவினர்களுக்கு மத்தியில் நினைவுபடுத்தும் விதமாக வாட்ஸ்அப் செயலியில் நாம் குழுக்கள் உருவாக்குவது உண்டு. அதன் தேவை முடிந்து பின்னர் அந்த குரூப் அப்படியே பயன்படுத்தப்படாமல் ஆக்டிவாக இருக்கும். ஆனால் அதில் எந்தவொரு மெசேஜும் இருக்காது. ஆனால் போனின் ஆப் ஸ்பேஸ் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும். அதை நீக்க தான் இந்த புதிய அம்சம் உதவும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் எந்த தேதியில் அந்த குழுவை தாங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கலாம் என்பதை முன்கூட்டியே திட்டமிட முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதனை நாள், வாரம், மாத கணக்கில் நிர்ணயிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குழு காலாவதியாகும் தேதி வந்ததும் பயனர்களுக்கு நோட்டிபிகேஷன் வரும். குறிப்பாக இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரியாத எண்களில் வரும் அழைப்பு?
அதேபோல் வாட்ஸ்அப் செயலியில் தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வருவது தொந்தரவாக இருக்கிறதா? இந்த தொந்தரவைச் சரி செய்யும் வகையில் தான் வாட்ஸ்அப் புதிய அப்டேட் ஒன்றை கொண்டுவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் உங்களது வாட்ஸ்அப் காண்டாக்ட்-ல் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யும் அம்சம் வழங்கப்பட உள்ளது. வாட்ஸ்அப் "Silence Unknown Callers" எனும் பெயரில் புதிய அம்சத்தை வழங்க இருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். குறிப்பாக இந்த புதிய அப்டேட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.
அதேபோல் பயனர்கள் தெரியாத அல்லது மொபைலில் சேமிக்காத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எளிமையாக மியூட் செய்யலாம். மேலும் இதுதொடர்பாக wabetainfo வெளியிட்டுள்ள தகவல் என்னவென்றால், இந்த புதிய அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த அம்சம் விரைவில் டெஸ்டிங்-கிற்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த அம்சம் வெளியானால் பயனர்கள் தங்களுக்கு அறிமுகமில்லா எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்து அவற்றைத் தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








