மிரண்டு போவீங்க.. WhatsApp யூஸ் பண்ணுறீங்களா? இனி இதை உங்களால் செய்யவே முடியாது.. புது அப்டேட்..
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இனி யார் நினைத்தாலும் வாட்ஸ்அப் ப்ரொஃபைல் பிக்ச்சர்களை (Profile picture) ஸ்கிரீன்ஷாட் (Screenshot) எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. காரனம், நிறுவனம் இப்போது சைலெண்டாக ஒரு புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது.
WhatsApp: வாட்ஸ்அப் பயனர்களின் பாதுகாப்பை பலப்படுத்த நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து சோதனை செய்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இப்போது வாட்ஸ்அப் நிறுவனம் சைலெண்டாக ஒரு புதிய அம்சத்தில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த புதிய அம்சம் இனி பயனர்களின் ப்ரொபைல் பிக்ச்சர்களை பாதுகாக்க உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் (WhatsApp): நிறுவனம் இப்போது அதன் வாட்ஸ்அப் மெசேஜ் (WhatsApp) தளத்தில் ஒன் டைம் வியூ பிக்ச்சர் மற்றும் வீடியோக்களை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை துடுகிறது. இந்த அம்சம் WhatsApp-ல் ஏற்கனவே உள்ளது. ஆனால், இது பயனர் ப்ரொபைல் பிக்ச்சர்களை பாதுகாக்காமல் இருந்தது. ஆகையால், பயனர் பாதுகாப்பை கருதில்கொண்டு, வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் உங்கள் சுயவிவரப் படங்களை பாதுகாக்க உதவும் அம்சத்தை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் அப்டேட் (WhatsApp Update): வரவிருக்கும் புதிய வாட்ஸ்அப் அப்டேட் (WhatsApp Update) அம்சம் இப்போது ஆண்ட்ராய்டு (Android) தளத்தில் பீட்டா வெர்ஷன் 2.24.4.25 இல் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் சோதனை அடுத்த சில வாரங்களில் வெற்றியடைந்த பிறகு, அணைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு பொதுவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் விரும்பிய படங்களை ப்ரொபைல் பிக்ச்சராக வைத்திருக்க அனுமதிக்கிறது.
ப்ரொபைல் பிக்ச்சர்: ஆனால், யாரேனும் ஒருவர் தங்கள் ப்ரொபைல் பிக்ச்சர் புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட் செய்ய முயற்சித்தால், அது பயனர்களுக்கு தெரியப்படாமல் இருப்பது பயனர் பாதுகாப்பை அலட்சியப்படுத்துவதாக இருக்கிறது என்று வாட்ஸ்அப் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தனியுரிமைக் குறைபாட்டை வலுப்படுத்திக்கிறது என்றும், இது தவறான நோக்கங்களுடன் பயன்படுத்தப்படலாம் என்றும் புகைரளிக்கப்பட்டது.

ப்ரொபைல் பிக்ச்சர் ஸ்கிரீன் ஷாட்: இதை கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப் இப்போது ப்ரொபைல் பிக்ச்சர்களை ஸ்கிரீன் ஷாட் எடுக்க அனுமதிக்கும் வழியை தடுக்கிறது. இனி உங்கள் ப்ரொபைல் பிக்ச்சரை யாராவது ஸ்கிரீன் ஷாட் எடுக்க முயற்சி செய்தால் அந்த வாட்ஸ்அப் நபருக்கு எச்சரிக்கை நோட்டிபிகேஷன் அனுப்பப்படும். மீறி ஸ்க்ரீன் ஷாட் செய்ய முயன்றாலும், அதில் வெறும் கருப்பு நிற பிளாங்க் ஸ்கிரீன் மட்டுமே காண்பிக்கப்படும் படி, வாட்ஸ்அப் தனது புதிய அம்சத்தை உருவாக்கியுள்ளது.
எச்சரிக்கை: வாட்ஸ்அப் மெசேஜிங் ஆப்ஸ் முதலில் புகைப்படத்தை எடுப்பதற்குப் பதிலாக கருப்புத் திரையை வழங்கும், மேலும் "ஆப்ஸ் கட்டுப்பாடுகள் காரணமாக ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது" என்று ஸ்கிரீன் ஷாட் எடுக்க முயன்ற நபருக்கு நோட்டிபிகேஷன் செய்தியை காண்பிக்கும். வாட்ஸ்அப் இந்த தனியுரிமை அம்சத்தை விருப்பத்தேர்வில் கொண்டிருக்கப் போவதில்லை என்று தெரிகிறது. அதாவது தனியுரிமை அமைப்புகளை கைமுறையாக மாற்ற முடியாது.
Facebook : இந்த அம்சத்தை ஆதரிக்கும் மெட்டாவுக்குச் சொந்தமான ஒரே தளம் WhatsApp அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இதே போன்ற அம்சத்தை, Facebook வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. பேஸ்புக் தளத்தில் பயனர்களின் ப்ரொபைல் பிக்ச்சர் பாதுகாக்கப்படுகிறது. இதேபோன்ற, அம்சத்தை வாட்ஸ்அப் தளத்திலும் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளாது.


Click it and Unblock the Notifications