இனி 6 மட்டும் "இல்ல" அனைத்தும் உங்களுக்கு தான்: வாட்ஸ்அப் புது அம்சம்

|

பிரபல செய்தியிடல் தளமாக வாட்ஸ்அப் திகழ்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தேவையறிந்து அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனமானது ஒரு புதிய அம்சத்தில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த அம்சம் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அது என்ன என்பவை விரிவாக பார்க்கலாம்.

6 இமோஜிகள் மட்டுமே அனுமதி

6 இமோஜிகள் மட்டுமே அனுமதி

வாட்ஸ்அப்பில் பெறும் மெசேஜ்களுக்கு குறிப்பிட்ட 6 இமோஜிகள் மட்டுமே ரிப்ளையாக அனுப்ப அனுமதிக்குப்பட்டு வந்த நிலையில் விரைவில் அனைத்து இமோஜிகளும் அனுமதிக்கப்பட இருக்கிறது. எந்தெந்த இமோஜிகள் அனுமதிக்கப்படும் என்ற விவரங்களை பார்க்கலாம்.

அனைத்து இமோஜிகளுக்கும் விரைவில் அனுமதி

அனைத்து இமோஜிகளுக்கும் விரைவில் அனுமதி

இந்நாள் வரை வாட்ஸ்அப்பில் பெறும் மெசேஜ்களுக்கு குறிப்பிட்ட 6 இமோஜிகள் மட்டுமே ரிப்ளையாக அனுப்ப அனுமதிக்குப்பட்டு வந்த நிலையில் விரைவில் அனைத்து இமோஜிகளும் அனுமதிக்கப்பட இருக்கிறது. WABeta தகவலின்படி, Android 2.22.15.7-க்கான பீட்டா பதிப்பு மற்றும் iOS 22.14.0.71-க்கான பீட்டா பதிப்பில் அனைத்து இமோஜிக்கான அம்சமும் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விரைவில் ஒரு புதிய புதுப்பிப்பு

விரைவில் ஒரு புதிய புதுப்பிப்பு

வாட்ஸ்அப் விரைவில் ஒரு புதிய புதுப்பிப்பை வெளியிட இருக்கிறது. இது பயனர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு மெசேஜ்-க்கு இமோஜியை ரிப்ளையாக அனுப்ப அனுமதிக்கிறது. இந்த அம்சம் தற்போது வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு கிடைக்கிறது. ஒரு மெசேஜ்-க்கு ரிப்ளை செய்வதற்கு பதிலாக அதை குறிப்பிட்டு இமோஜி மட்டும் ரிப்ளை செய்யும் அம்சம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

அனைத்து இமோஜிகள் மூலமாகவும் ரிப்ளை

அனைத்து இமோஜிகள் மூலமாகவும் ரிப்ளை

ஆரம்பத்தில் 6 இமோஜிகள் மட்டும் ரிப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து இமோஜிகள் மூலமாகவும் ரிப்ளை செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான சோதனை பீட்டா பதிப்பில் இருக்கிறது.

பீட்டா பதிப்பில் சோதனை

பீட்டா பதிப்பில் சோதனை

WABeta தகவலின்படி, Android 2.22.15.7-க்கான WhatsApp பீட்டா, iOS 22.14.0.71-க்கான WhatsApp பீட்டா பதிப்பில் அனைத்து இமோஜிகளும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. காரணம் ஆரம்பக்கட்டமாக தற்போது 6 இமோஜிகள் மட்டுமே ரிப்ளை செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இது பயனர்கள் பெரிதளவு பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

பிரத்யேமகமாக காட்டப்படும் பட்டன்

பிரத்யேமகமாக காட்டப்படும் பட்டன்

வாட்ஸ்அப் தளத்தில் ஒருவர் அனுப்பப்படும் மெசேஜுக்கு இந்நாள் வரை ஆறு இமோஜிகள் மட்டுமே ரிப்ளையாக அனுப்ப அனுமதிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் மெசேஜ் அருகில் இருக்கும் இமோஜி பட்டனை கிளிக் செய்யும் பட்சத்தில் அதன் அருகில் ஒரு "+" பட்டன் காட்டப்படும் அதை கிளிக் செய்தால் அனைத்து இமோஜிகளும் தோற்றுவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த அம்சமானது தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் எப்போது வெளியாகும் என்ற தேதியை நிறுவனம் தரப்பில் தற்போது வரை வெளியிடவில்லை.

உடனடியாக எதிர்விணையாற்ற எளிய வழிமுறை

உடனடியாக எதிர்விணையாற்ற எளிய வழிமுறை

உடனடியாக எதிர்விணையாற்ற உதவும் இமோஜியாக லைக், லவ், ஸ்மைல், ஆச்சரியம், சோகம் மற்றும் நன்றி என்ற ஆறு இமோஜிகள் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து இமோஜிகளும் விரைவில் அறிமுகமாக இருக்கிறது என்பது பயனர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வாட்ஸ்அப் ரியாக்ஷன் அம்சம் 2018 ஆம் ஆண்டில் இருந்து சோதனையில் இருந்தது. ஆரம்பக்கட்டமாக ஆறு இமோஜிகள் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்து இமோஜிகளும் விரைவில் அனுமதிக்கப்பட இருக்கிறது.

கடைசியாக ஓபன் செய்தது எப்போது?

கடைசியாக ஓபன் செய்தது எப்போது?

அதேபோல் வாட்ஸ்அப் லாஸ்ட் சீன் என்பது நாம் எப்போது கடைசியாக வாட்ஸ்அப் பயன்பாட்டை அனுகினோம் என்பதை பிறருக்கு காண்பிக்க பயன்படும் அம்சமாகும். இந்த அம்சம் இதுநாள் வரை அனைவருக்கும் காண்பிக்கும்படியாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே காண்பிக்கும் வகையிலும் தேவையில்லாத பயனர்களிடம் இருந்து லாஸ்ட் சீன் அம்சத்தை மறைக்கும் படியாகவும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
WhatsApp will soon allow you to react to messages with any emoji

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X