Home
News

சில நோக்கியா மொபைல்களில் இனிமேல் வாட்ஸ்ஆப் வேலை செய்யாது.!

மேலும் பழைய மாடல் நோக்கியா மொபைலையே பயன்படுத்த நினைக்கும் வாடிக்கையாளர்கள் நோக்கியா 8110 4ஜி அல்லது ஜியோபோனை பயன்படுத்தலானம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை (அப்டேட்) சேர்த்த வண்ணம் உள்ளது, அதன்படி புதிய அப்டேட்களுக்கு ஒத்துவராத சில மொபைல்களில் இனிமேல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நோக்கியா மொபைல்களில் இனிமேல் வாட்ஸ்ஆப் வேலை செய்யாது.!

இந்த செயலி ஸ்டிக்கர்ஸ் வசதி, குரூப் வீடியோ கால் வசதி போன்ற பல்வேறு அப்டேட் வந்துவிட்டன, பின்பு பொய்யான செய்திகளை தடுக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டிருக்கிறு வாட்ஸ்ஆப் நிறுவனம்.

எந்தெந்த நோக்கியா மொபைல்?

எந்தெந்த நோக்கியா மொபைல்?

வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்போது தெரிவித்த அறிவிப்பில் நோக்கியா எஸ்40 சீரிஸ் மொபைல்களில் வரும் ஜனவரி 1-ம்
தேதி முதல் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. பின்பு நோக்கியாவின் எஸ்40 சீரிஸ் மொபைல்கள் சமீபத்திய
அப்டேட்டகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வசதி இல்லாதவை என்பதால் தான் டிசம்பர் 31-ம் தேதிக்கு பின்பு வாட்ஸ்ஆப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா எஸ்40 சீரிஸ்

நோக்கியா எஸ்40 சீரிஸ்

இந்தியாவில் நோக்கியா எஸ்40 சீரிஸ் மாடல்கள் 1.4 பில்லியன் விற்றிருப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது, இந்நிலையில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது என்பது மிகவும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.

 நோக்கியா 8110

நோக்கியா 8110

மேலும் பழைய மாடல் நோக்கியா மொபைலையே பயன்படுத்த நினைக்கும் வாடிக்கையாளர்கள் நோக்கியா 8110 4ஜி அல்லது ஜியோபோனை பயன்படுத்தலானம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்சர் இன் பிக்சர் மோடு

பிக்சர் இன் பிக்சர் மோடு

வாட்ஸ் ஆப் செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோடு(பி.ஐ.பி) இன் புதிய ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய சேவை வாட்ஸ் ஆப் செயலியில் இருந்தபடியே வீடியோக்களை பார்த்தபடி சாட்டிங் செய்ய அனுமதிக்கிறது. இந்தப் புத்தி சேவையுடன் கூடிய அப்டேட் தற்பொழுது அனைவருக்கும் கிடைக்கிறது. பி.ஐ.பி மோடு மூலம் யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இருக்கும் வீடியோக்களை வாட்ஸ் ஆப் செயலியில் பார்க்க முடியும்.

சாட் பாக்ஸ் இல் வீடியோ

சாட் பாக்ஸ் இல் வீடியோ

உங்களுக்கு வாட்ஸ் ஆப் இல் வரும் வீடியோவை கிளிக் செய்தால் மட்டும் போதும். உங்களின் சாட் பாக்ஸ் இல் வீடியோ பிளே செய்யப்படும். இதனால் வீடியோ பார்த்துக்கொண்டே உங்கள் நண்பருடன் வாட்ஸ் ஆப் செயலியில் சாட்டிங் செய்தபடி விடீயோக்களை காணலாம். வீடியோ தளத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2.18.380 அப்டேட் வெர்ஷன்

2.18.380 அப்டேட் வெர்ஷன்

கடந்த சில மாதங்களாகச் சோதனை செய்யப்பட்டு வந்த பி.ஐ.பி. சேவை இன்று முதல் அனைவருக்கும் 2.18.380 அப்டேட் வெர்ஷனில் கிடைக்கிறது. இத்துடன் அடுத்து வரவிருக்கும் வாட்ஸ் ஆப் அப்டேட் இல் மேலும் பல புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கவுள்ளதாக அறிவிப்பும் வந்துள்ளது

Best Mobiles in India

English summary
WhatsApp will not work on these smartphones after December 31: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X