Home
News

புதிய வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஏற்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

ரத்து செய்துள்ளது

இந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தனியுரிமை தொடர்பான புதிய கொள்கைகளை மே 15-ம் தேதிக்குள் ஏற்க வேண்டும்என்ற கால அவகாசத்தை ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தனியுரிமைக்

குறிப்பாக வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை அறிவித்த உடனே பல்வேறு மக்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளை பயன்படுத்த துவங்கி விட்டனர். அதிலும் டெலிகிராம் செயலியை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். ஆனாலும் பெரும்பலான மக்கள் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

செயலி ஆனது அண்மையில்

அதாவது வாட்ஸ்அப் செயலி ஆனது அண்மையில் தனது கொள்கைகளில் மாற்றங்களை புகுத்தியது. அதன்படி இந்த வாட்ஸ்அப் செயலி பயன்படுத்துவோரின் தகவல்களை திரட்டி அவற்றை பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கி விற்பதும் புதிய கொள்கைகளில் ஒன்றாக கூறப்பட்டது.

கொள்கைகளை மே 15-ம்

எனவே இந்த புதிய கொள்கைகளை மே 15-ம் தேதிக்குள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து செயலியை பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டது. ஆனால் வாட்ஸ்அப் புதிய கொள்கைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. பின்பு இதை தொடர்ந்து புதிய கொள்கைகளின் அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாகவாட்ஸ்அப் தெரிவித்தது.

வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர்

இந்நிலையில் வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், புதிய கொள்கைகளை ஏற்பதற்கு மே 15-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அந்த அவகாசத்திற்கு பிறகும் புதிய கொள்கைகளை ஏற்காதவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்படாது என்று கூறியுள்ளார்.

என்று அவர்

குறிப்பாக புதிய கொள்கைகளை ஏற்கவில்லை என்றாலும் கூட வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும், பின்புஅதிக பயனாளர்கள் புதிய கொள்கைகளை ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதவிர சில பயனாளர்களே
இந்த கொள்கைகளை ஏற்கவில்லை. அவர்களுக்கு புதிய கொள்கைகள் தொடர்பான தகவல்கள் விரைவில் அனுப்பப்படும் என்றுகூறியுள்ளார் வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர்.

வாட்ஸ்அப் புதிய

இருந்தபோதிலும் வாட்ஸ்அப் புதிய கொள்கைகளை ஏற்பதற்கான காலஅவகாசத்தை ரத்து செய்ததற்ககான காரணத்தை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. பின்பு இதுவரை எத்தனை பேர் புதிய கொள்கைகளை எற்றுக் கொண்டுள்ளனர் என்பது தொடர்பான தகவலையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp will not delete your account even if you do not accept the Privacy Policy: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X