வாட்ஸ்அப் சேவை நிறுத்தம்: 2021 முதல் வாட்ஸ்அப் இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது!

|

2020 ஆம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் பழைய ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் சாதனங்களின் குறிப்பிட்ட வெர்ஷன்களில் சேவையை நிறுத்தப்போகிறது. சேவை நிறுத்தப்படும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்கள் குறித்து பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்கள்

ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்கள்

பல ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாமல் இருக்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. பல ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் புதிய அப்டேட்கள் செயல்படாது என்பதனால் 2021 ஆண்டில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை முற்றிலுமாக வேலை செய்யாது.

எந்தெந்த வெர்ஷன்களில் இயங்காது

எந்தெந்த வெர்ஷன்களில் இயங்காது

ஆண்ட்ராய்டு 4.0.3 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் iOS 9 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள வெர்ஷன் கொண்ட ஐபோன்களில் அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ்அப் சேவை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் உங்கள் வாட்ஸ்அப் சாட்களை சேவ் செய்துகொள்ள இதுவே சரியான நேரம்.

புதிய வாட்ஸ்அப் கணக்குகள்

புதிய வாட்ஸ்அப் கணக்குகள்

இந்த அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளத்தில் இயங்கும் போன்களில், வாட்ஸ்அப் சேவை பயன்படுத்தி வரும் பயனர்களின் பழைய அக்கௌன்ட் அடுத்த ஆண்டு செயல்படாது. அதேபோல் இனி இவர்களால் அந்த சாதனங்களில் புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கவோ அல்லது பழைய அக்கௌன்ட்டை பயன்படுத்தவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள்

ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள்

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை 4.0.3 ஐ விட முந்தைய ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது. எச்.டி.சி டிசையர், எல்ஜி ஆப்டிமஸ் பிளாக், மோட்டோரோலா டிராய்டு ரேஸர் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 2 உள்ளிட்ட பழைய ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் இதில் இடம்பெறலாம்.

வேறு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும்

வேறு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும்

மேலும் சில சாதன பயனர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. காரணம் அந்த சாதனங்களின் இயக்க முறைமைகள் புதுப்பித்தலோடு கூடுதல் இணைப்பை பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. பிற பயனர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த வேறு ஸ்மார்ட்போன் வாங்குவதே சிறந்தது.

Source: news18.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
WhatsApp Will No Longer Working on These Android Phones and Iphones in 2021

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X