Home
News

அச்சச்சோ.. இனிமேல் இந்த பழைய போன்களில் WhatsApp வேலை செய்யாது.. உங்க போன் லிஸ்டில் இருக்கா?

வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை இந்தியா முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் இந்த செயலியில் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. இதுதவிர அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் இந்த செயலியில் சேர்க்கப்பட்டு வருகிறது. எனவே தான் அதிக மக்கள் இப்போதும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகிறன்றனர்.

சரி இப்போது விஷயத்து வருவோம். அதாவது சிலர் புதிய போன்களுக்கு பதிலாக பழைய அல்லது யூஸ்டு போன்களை வாங்க தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அப்படி பழைய போன்களை வாங்கும் முன் சில முக்கிய விஷயங்களை கவனிக்காமல் விட்டால் பிறகு அதிர்ச்சி அடைய வேண்டிய நிலைமை வரும். அதாவது பழைய போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யுமா என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக மிகவும் பழைய ஓஎஸ் கொண்ட போன் என்றால் அதில் வாட்ஸ்அப் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

அச்சச்சோ.. இனிமேல் இந்த பழைய போன்களில் WhatsApp வேலை செய்யாது..

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ FAQ பக்கத்தின் படி, Android 5.0-க்குக் கீழே அல்லது iOS 15.1-க்குக் கீழே இருந்தால், வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய போன்களில் இந்த ஓஎஸ் இருந்தால் வாட்ஸ்அப் வேலை செய்யாது. எனவே இது போன்ற பழைய போன்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

குறிப்பாக வாட்ஸ்அப் செயலி ஆனது Android 5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகள், iOS 15.1 மற்றும் அதற்கு மேல் iPhone-களிலுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் பழைய போன் இருந்தால் அது எந்த ஓஎஸ் கொண்டிருக்கிறது என்பதை எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.

அதாவது உங்களிடம் ஆண்ட்ராய்டு போன் இருந்தால் செட்டிங்ஸ் (settings) பகுதிக்கு சென்று About ஆப்ஷனை தேர்வு செய்தால் ஓஎஸ் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். உங்களிடம் ஐபோன் இருந்தால் Settings> General> About பகுதிக்கு சென்று ஓஎஸ் விவரங்களை பார்க்க முடியும்.

ஏன் பழைய போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது?
பழைய இயங்குதளங்கள்(OS) கொண்ட போன்கள் முறையாக பாதுகாப்பு அப்டேட்களைப் பெறுவதில்லை. அதனால் WhatsApp பழைய பதிப்பு போன்களில் சேவையை நிறுத்துகிறது. குறிப்பாக புதிய போன்களுக்கு அவ்வப்போது செயல்திறன் மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. எனவே யூஸ்டு போன் வாங்கும் முன், அது வாட்ஸ்அப் ஆதரவு உள்ளதா என்பதை கட்டாயம் சரி பார்க்கவும்.

பாஸ்கீ (Passkey)

அதேபோல் சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது உங்களது வாட்ஸ்அப் சாட் பேக்கப்களை பாஸ்கீ (Passkey) மூலம் பாதுகாப்பதற்கான ஒரு புதிய வழியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எனவே நீங்கள் இனி நீங்கள் பாஸ்வேர்டு அல்லது 64 இலக்க என்கிரிப்ஷன் கீகளை ஞாபகம் வைத்துக்கொள்ள அவசியம் இருக்காது.

அச்சச்சோ.. இனிமேல் இந்த பழைய போன்களில் WhatsApp வேலை செய்யாது..

வாட்ஸ்அப்-ன் இந்த புதிய அப்டேட் மூலம் யூசர்கள் தங்களது கைரேகை, முகம், ஸ்கிரீன் லாக் மூலம் என்கிரிபட் செய்யப்பட் சாட்களை ரீஸ்டோர் செய்துகொள்ள முடியும். பாஸ்வேர்டு போல அல்லாமல் பாஸ்கீ என்பது பாஸ்வோர்ட் மேனேஜரில் சேமிக்கப்பட்டு, அனைத்து சாதனங்களிலும் பாதுகாப்பான முறையில் லாகின் செய்வதற்கு அனுமதிக்கிறது.

ஆனால் தற்போது இந்த புதிய அம்சம் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் உலக அளவில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp will no longer work on these smartphones: This is the reason
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X