அடி தூள்.. WhatsApp-ல் இனி Telegram, சிக்னல் தளத்தின் மெசேஜ்களை பெறலாமா? அது எப்படி? Meta சொன்ன குட் நியூஸ்..
இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே என்று வியக்கும் அளவிற்கு, வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் ஒரு புதிய தகவலை இப்போது வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, மிக விரைவில் வாட்ஸ்அப் பயனர்கள், அவர்களுடைய வாட்ஸ்அப் கணக்கில் வாட்ஸ்அப் மெசேஜ்கள் (WhatsApp Messages) மட்டுமின்றி, டெலெக்ராம் (Telegram), சிக்னல் (Signal) போன்ற மற்ற மெசேஜ்ஜிங் ஆப்ஸ்களில் இருந்து பெரும் மெசேஜ்களையும் இனி வாட்ஸ்அப் தளத்திலேயே அணுக முடியுமென்று அறிவித்துள்ளது. இதற்கான ஒரு புதிய பிரத்தியேக அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களை சொந்தமாக இயக்கி வரும் மெட்டா நிறுவனம் விரைவில் வாட்ஸ்அப் தளத்தை ஒரு இன்டெரோபேரப்பில் (interoperable) தளமாக மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளது. இன்டெரோபேரப்பில் என்பது மற்ற தளங்களில் இருந்து வரும் தகவலை ஒரே தளத்தில் பார்க்க அனுமதிக்கும் ஒரு வகை சேவையாகும். வரவிருக்கும் அம்சம் வாட்ஸ்அப் மேடையில் மூன்றாம் தரப்பு சாட்களை அனுமதிக்கும்.

அடி தூள்.. WhatsApp-ல் இனி Telegram, சிக்னல் தளத்தின் மெசேஜ்களை பெறலாமா?
எளிமையான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால், WhatsApp பயனர்கள் இனி டெலெக்ராம் (Telegram), சிக்னல் (Signal) போன்ற மற்ற உடனடி செய்தி தளங்களில் இருந்து செய்திகளை அனுப்பவும் பெறவும் முடியும். கடந்த வாரம், வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, வாட்ஸ்அப் விரைவில் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளில் இருக்கும் மெசேஜ்களை வாட்ஸ்அப் இல் அணுகக்கூடியதாக மாற்றும் என்று அறிவித்தது.
கடந்த 2022 இல் ஐரோப்பிய ஒன்றியத்தால் அமல்படுத்தப்பட்ட டிஜிட்டல் சந்தைகள் சட்டத்திற்கு (டிஎம்ஏ) பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மூலம் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனைச் செயல்படுத்துவதில் உள்ள சிரமங்களைக் காரணம் காட்டி, மெட்டா நிறுவனம் இந்த அம்சத்தை அமல்படுத்த கால நீட்டிப்பைக் கோரியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், பயனர்களுக்கு இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் தயாராக இருப்பதாகவும் மெட்டா இப்போது அறிவித்துள்ளது. இந்த அம்சம் பேஸ்புக்குடன் இணைக்கப்பட்ட மெசேஜ்ஜிங் பயன்பாடான மெசஞ்சருடன் (Messenger) ஒருங்கிணைக்கப்படும். மெட்டாவின் கூற்றுப்படி, இந்த புதிய அம்சத்தின் ஒருங்கிணைப்பு முடிந்தவரை பயனர் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் என்று கூறியுள்ளது.
இனி எல்லா மெசேஜ்ஜிங் தளங்களின் மெசேஜ்களும் ஒரே இடத்தில்.. WhatsApp உருமாறப்போகிறது:
மூன்றாம் தரப்பு சாட்கள் குறித்து பயனர்களுக்கு நோடிஃபை செய்ய, வாட்ஸ்அப் புதிய நோட்டிபிகேஷன் அம்சத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மெசேஜிங் ஆப்ஸ்களில் இருந்து பெரும் மெசேஜ்கள் குறித்த தகவலை புதிய நோட்டிபிகேஷன் அம்சத்தின் மூலம் பெறுவார்கள். மூன்றாம் தரப்பு அரட்டைகளை இயக்க பயனர்களுக்கு ஆன்போர்டிங் ஃப்ளோவை இந்த இயங்குதளம் அறிமுகப்படுத்தும்.
பயனர்கள் தாங்கள் செய்திகளைப் பெற விரும்பும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைத் தேர்ந்தெடுக்கவும் மற்றும் அவர்களின் இன்பாக்ஸ் விருப்பங்களை நிர்வகிக்கவும் வாட்ஸ்அப் அனுமதி வழங்கும் என்று கூறியுள்ளது. அதாவது, மூன்றாம் தரப்பு பயன்பாடுகளில் இருந்து மெசேஜ்களை பெரும் பொழுது, அவற்றை நீங்கள் வாட்ஸ்அப் இன்பாக்சில் நேரடியாக பெறலாம், அல்லது நீங்கள் விரும்பினால் தனியாக ஒரு போல்டரை அமைத்து அதில் மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களின் மெசேஜ்களை பெற செய்யலாம் என்று கூறியுள்ளது.
கூடுதலாக, நிறுவனம் 2027 ஆம் ஆண்டில் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் நபர்களுடன் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குவதற்கும் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளைச் செய்வதற்கும் விருப்பங்களை வழங்கும் என்று தெரிவித்துள்ளது. WhatsApp பயனர்களுக்கு பாதுகாப்பான அனுபவத்தை உறுதிசெய்ய மூன்றாம் தரப்பு மெசேஜ்ஜிங் சேவைகளுடன் இணைந்து செயல்படுவதாக மெட்டா அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications