இந்தியா : வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்ப புதிய திட்டம்.!
தற்போது யுபிஐ சேவை பொருத்தவரை ஒரே இடத்தில் பணம் செலுத்தும் அப்ளிகேஷனில் மாறுதலைக் கொண்டுவருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.!
இந்தியாவில் 200மில்லியனுக்கும் அதிக மக்கள் வாட்ஸ்அப் பயன்படுகளை உபயோகம் செய்கின்றனர், மேலும் இவற்றில் பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ள புதிய திட்டம் என்னவென்றால் நெட் பேங்க்கிங், மொபைல் பேங்க்கிங் போன்று வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதியை மிக விரைவில் இந்தியாவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது, அந்நிறுவனம்.

வாட்ஸ்அப் பொதுவாக சேட், ஆடியோ கால், வீடியோ கால், போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுகிறது. தற்போது கொண்டுவர இருக்கும் பணம் அனுப்பும் வசதி பொருத்தவரை மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனத்தை சேர்ந்த பிரையான் ஆக்டன் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார், அப்போது மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்துப்பேசும் போது வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் திட்டத்தைப் பற்றி எடுத்துறைத்தார்.
தற்போது யுபிஐ சேவை பொருத்தவரை ஒரே இடத்தில் பணம் செலுத்தும் அப்ளிகேஷனில் மாறுதலைக் கொண்டுவருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. அதன்பின் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இதற்க்கான ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளது.

மிக எளிமையாக வங்கிகணக்கு மற்றும் மொபைல் எண் போன்றவற்றின் மூலம் யுபிஐ-பயன்படுத்தி பணம் அனுப்பலாம் தற்போது வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் திட்டத்தின் மூலம் பல நண்மைகள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications