லேப்டாப், கம்ப்யூட்டரில் WhatsApp யூஸ் செய்யுறீங்களா? இந்திய அரசின் நேரடி எச்சரிக்கை.. கவனியுங்க மக்களே..
நீங்கள் ஒரு வாட்ஸ்அப் (WhatsApp) பயனரா? உங்கள் ஸ்மார்ட்போன் (smartphone) மற்றும் மொபைல் (mobile) சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதை தாண்டி, உங்களிடம் இருக்கும் லேப்டாப் (laptop) அல்லது கம்ப்யூட்டர் (computer) போன்ற டெஸ்க்டாப் சாதனங்களில் வாட்ஸ்அப் (WhatsApp on desktop devices) பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் இந்த எச்சரிக்கை செய்தி உங்களுக்கானது தான் மக்களே, கவனம் சிதறாமல் கவனியுங்கள். லேப்டாப் மற்றும் கணினி போன்ற சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபர்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. எதற்காக இந்த எச்சரிக்கை? என்ன காரணம் என்பதை இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
மெட்டாவிற்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் தளமான வாட்ஸ்அப் பயன்பாட்டில் கண்டறியப்பட்ட ஒரு கடுமையான பிழை காரணமாக, மில்லியன் கணக்கான வாட்ஸ்அப் பயனர்களுக்கு இந்திய அரசாங்கம் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனமான இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) இலிருந்து இந்த எச்சரிக்கை தற்போது அணைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

லேப்டாப், கம்ப்யூட்டரில் WhatsApp யூஸ் செய்யுறீங்களா? இந்திய அரசின் நேரடி எச்சரிக்கை.. உடனே கவனியுங்க:
CERT-In இன் கூற்றுப்படி, உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் போன்ற டெஸ்க்டாப் சாதனங்களில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் நபராக நீங்கள் இருந்தால் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று CERT-In எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப் வெப் தளத்தை அணுகும் டெஸ்க்டாப் டிவைஸ் பயனர்களுக்கு இந்த தீவிர எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப்பின் வெப் என்ற டெஸ்க்டாப் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக CERT-In சுட்டிக்காண்பித்துள்ளது.
இந்த தீவிரமான பாதிப்பு அல்லது பிழை காரணமாக, உங்கள் வாட்ஸ்அப் கணக்கு மற்றும் அதில் பகிரப்படும் தகவல்களை ஹேக்கர்கள் அணுக அதிக வாய்ப்பிருப்பதாக CERT-In எச்சரித்துள்ளது. தற்போது, வாட்ஸ்அப் 2.2450.6 வெர்ஷன் மற்றும் அதற்கு முந்தைய வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயன்பாட்டை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த பாதுகாப்பு சிக்கல் எழக்கூடிய அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிழையைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள், உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் உள்ள தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதோடு, உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஒட்டுமொத்தமாக அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாக இந்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
எதனால் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயனர்களுக்கு இந்த பாதிப்பு:
வாட்ஸ்அப்பின் டெஸ்க்டாப் பதிப்பில் பைல்கள் திறக்கப்படும் விதத்தில் உள்ள தொழில்நுட்பக் குறைபாட்டிலிருந்து இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக CERT-In தகவல் குறிப்பிடுகின்றன. MIME வகைக்கும் பைல் எக்ஸ்டென்சன்க்கும் இடையிலான சீரமைப்பு இல்லாததால் இந்தப் பிழை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் இணைப்புகளைத் திறக்கும்போது சிக்கல்கள் ஏற்படுகின்றன.
சில நேரங்களில், வாட்ஸ்அப் சில பைல்களை சரியாக அடையாளம் காணத் தவறிவிடுகிறது. ஹேக்கர்கள், இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி, முறையான பைல்ககள் போல போலி பைல்களை தீங்கு விளைவிக்கும் இணைப்புகளுடன் உருவாக்கி வாட்ஸ்அப் கணக்கை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. சாத்தியமான மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, பயனர்கள் உடனடியாக தங்கள் வாட்ஸ்அப் செயலியைப் அப்டேட் செய்ய வேண்டும் என்று இந்திய அரசாங்கமும், வாட்ஸ்அப் நிறுவனமும் பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக, சமூக ஊடக தளங்கள் ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் பயனர்களை ஏமாற்றுவதற்கான வழிகளாக மாறி வருகின்றன. வாட்ஸ்அப் மூலம் மோசடிகள் நடப்பதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. ஒரு கணம் கவனக்குறைவு ஏற்பட்டால் குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்படக்கூடும், எனவே WhatsApp பயன்படுத்தும் போது விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம். வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட தெரியாத இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் மெசேஜ்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் CERT-In அறிவுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications