Home
News

வாட்ஸ்அப்-ல் ஆறு புதிய அம்சம்: மொத்தமும் வாய்ஸ் மெசேஜில் தான்- வேகம், இடைநிறுத்தம், ப்ளேபேக், ப்ரிவியூ எல்லாம்

பிரபலமான உடனடி செய்தியிடம் தளமான வாட்ஸ்அப் சில புதிய வாய்ஸ் மெசேஜ் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்-ல் பயன்படுத்தப்படும் பிரதான அம்சங்களில் ஒன்றாக இருப்பது வாய்ஸ் மெசேஜ். வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அம்சமானது பிரதான பயன்பாடாக இருக்கிறது. வாட்ஸ்அப் தளமானது பயனர்களின் தேவை அறிந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப்-ன் தற்போதைய இந்த புதிய அம்சமானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வாய்ஸ் மெசேஜ் அம்சங்களானது வரும் வாரங்களில் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சங்கள் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜிங் அம்சங்கள்

வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜிங் அம்சங்கள்

வாட்ஸ்அப் புதிய அம்சங்கள் தொகுப்பில் முதலாவதாக இருப்பது அவுட் ஆஃப் தி சாட் ப்ளே பேக் ஆகும். இது பயனர்களை சேட்டிங் சாளரத்திற்கு வெளியேயும் வாய்ஸ் மெசேஜை கேட்க அனுமதிக்கிறது. அதாவது பயனர்கள் இந்த அம்சத்தின் மூலம் வாய்ஸ் மெசேஜை கேட்டப்படியே பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம். அதாவது வாய்ஸ் மெசேஜை ப்ளே செய்துவிட்டு பிற மெசேஜ்களை படிக்கலாம் மற்றும் பதிலளிக்கலாம்.

இடைநிறுத்தம் மற்றும் ரெஸ்யூம் அம்சம்

இடைநிறுத்தம் மற்றும் ரெஸ்யூம் அம்சம்

வாட்ஸ்அப் தளத்தில் இருக்கும் அடுத்த அம்சமானது வாய்ஸ் மெசேஜ்-ன் போது இடைநிறுத்தம் மற்றும் ரெஸ்யூம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் வாய்ஸ் மெசேஜ் பதிவு செய்யும் போது குரல் பதிவை இடைநிறுத்தி மீண்டும் அதை தொடங்க அனுமதிக்கிறது. ரெக்கார்டிங் செய்து கொண்டிருக்கும் போது உங்களுக்கு ஏதாவது வேலை இருந்தாலோ அல்லது தகவலை செக் செய்ய வேண்டும் என்றாலோ இதை இடைநிறுத்தம் செய்துவிட்டு மீண்டும் தொடங்கலாம். இது மிகவும் பயனுள்ள அம்சமாக இருக்கும்.

அலைவடிவ காட்சிப்படுத்தல் அம்சம்

அலைவடிவ காட்சிப்படுத்தல் அம்சம்

மூன்றாவது அம்சமாக இருப்பது அலைவடிவ காட்சிப்படுத்தல் ஆகும். அலைவடிவ காட்சிப்படுத்தல் (Waveform Visualisation) என்பது பட்டியலில் இருக்கும் மூன்றாவது அம்சமாகும். அலைவடிவ காட்சிப்படுத்தல் என்பது குரல் செய்தியை அனுப்பும் போது ஒலியின் அளவை காட்சிப்படுத்தும் அம்சமாகும். வாய்ஸ் மெசேஜை கேட்கும் போது இந்த அம்சத்தை காணலாம். இந்த அம்சம் முன்னதாகவே பல்வேறு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கிறது.

டிராஃப்ட் ப்ரிவியூ அம்சம்

வாட்ஸ்அப்-ல் அடுத்ததாக இருக்கும் அம்சம் ஒரு பிரதான அம்சமாகும். ஒரு வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்துவிட்ட பிறகு கேட்க முடியாது. அதை அனுப்பிவிட்டு கேட்டப்பின் தவறு இருந்தால் அதை டெலிட் செய்துவிட்டு மீண்டும் அனுப்பவேண்டும். ஆனால் இந்த அம்சத்தின் மூலம் அந்த சிக்கல் இருக்காது. வாட்ஸ்அப்-ன் இந்த அம்சமானது டிராஃப்ட் ப்ரிவியூ ஆகும். டிராஃப்ட் ப்ரிவியூ (Draft Preview) அம்சத்தின் மூலம் பயனர்கள் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்துவிட்டு அதை கேட்டப்பின் அனுப்பலாம். அனுப்புவதற்கு முன் டிராஃப்ட்-ல் சேமித்துவிட்டு கேட்டப்பின் அனுப்பலாம்.

நினைவு பின்னணி இயக்க அம்சம்

நினைவு பின்னணி இயக்க அம்சம்

வாட்ஸ்அப்-ன் மற்றொரு பயனுள்ள அம்சம் நினைவு பின்னணி இயக்க அம்சமாகும். இந்த நினைவு பின்னணி இயக்க (Remember Playback) அம்சமானது நீங்கள் வாய்ஸ் மெசேஜ் கேட்பதை நிறுத்திவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ரிமெம்பர் மெமரி ப்ளேபேக் விருப்பமானது, நீங்கள் நிறுத்திய இடத்தில் இருந்து பிறகும் கேட்க இந்த அம்சம் அனுமதிக்கும்.

வேகமான ப்ளேபேக் அம்சம்

வேகமான ப்ளேபேக் அம்சம்

வாட்ஸ்அப் அடுத்த வாய்ஸ் மெசேஜ் அம்சமானது வேகமான ப்ளேபேக் அம்சமாகும். வேகமான ப்ளேபேக் (Fast Playback on Forwarded Messages) அம்சத்தின் மூலம் நீங்கள் எத்தனை பெரிய வாய்ஸ் மெசேஜாக இருந்தாலும் அதை வேகமாக ப்ளே செய்ய அனுமதிக்கிறது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் 1.5x அல்லது 2x வேகத்தில் வாய்ஸ்மெசேஜை இயக்கி வேகமாக கேட்கலாம். இந்த அம்சமானது அனைத்து வாய்ஸ் மெசேஜ் அம்சங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Whatsapp Voice Messages Gets 6 New Features: Out of Chat Playback, Waveform Visualisation and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X