அடங்கப்பா, வாட்ஸ்ஆப் வாய்ஸ்காலுக்கு இவ்ளோ செலவாகுமா

Written By:

வாட்ஸ்ஆப் மூலம் உலகம் முழுக்க யாருக்கு அழைப்புகளை மேற்கொண்டாலும் போனில் வைபை அல்லது மொபைல் டேட்டா அவசியமாகும். இவ்வுலகில் எதுவும் இலவசமாக கிடைக்காது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் வாட்ஸ்ஆப் வாய்ஸ்கால். வாடாஸ்ஆப் மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு அதிக செலவாகும் என்கின்றது சமீபத்திய ஆய்வு.

அடங்கப்பா, வாட்ஸ்ஆப் வாய்ஸ்காலுக்கு இவ்ளோ செலவாகுமா

ஆன்டிராய்டுபிட் நடத்திய சோதனையில் எல்டிஈ சேவையில் வாட்ஸ்ஆப் வாய்ஸ்கால் மேற்கொள்ள நிமிடத்திற்கு 1.3 எம்பி டேட்டா செலவாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் 500 எம்பி கொண்ட டேட்டா பேக் 6 மணி நேரத்தில் தீர்ந்து விடும், இது மொபைல்களில் சாதாரணமாக அழைப்புகளை மேற்கொள்வதில் 11 நிமிடங்களுக்கு சமமானதாகும். வாட்ஸ்ஆப் வாய்ஸ்கால் சாதாரண போன் அழைப்புகளை விட அதிக செலவு தருவதாகவே இருக்கின்றது.

பயன்படுத்தும் திட்டத்திற்கு ஏற்ப சாதரணமாக அழைப்புகளை மேற்கொள்ள எப்படி பார்த்தாலும் 50 பைசா வரை ஆகும். மாதத்திற்கு 1 ஜிபி டேட்டா பயன்படுத்தும் போது நாள் ஒன்றுக்கு 40 நிமிடங்கள் வரை வாட்ஸ்ஆப் கால் செய்ய முடியும் என்று மொபைல்டார் தெரிவித்துள்ளது.

 

English summary
WhatsApp voice calling more expensive than you thought. WhatsApp calls could cost you a fortune, says a new research.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot