விண்டோஸ் போன்களுக்கு விரைவில் வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் அறிமுகம்
வாட்ஸ்ஆப் வாய்ஸ் காலிங் சேவை விண்டோஸ் போன்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் ஆரம்பகட்ட பணிகளில் இருக்கும் இந்த அம்சம் மிக விரைவில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
தற்சமயம் வாட்ஸ்ஆப் வாய்ஸ்காலிங் விண்டோஸ் போன்களுக்கு எப்பொழுது வழங்கப்படும் என்ற தகவல் மர்மமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் விண்டோஸ் போன்களுக்கான வாய்ஸ்கால் அப்டேட் வழங்குவதில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வருகின்றது.

தற்சமயம் ஆன்டிராய்டு இயங்குதளத்தில் மட்டும் வாட்ஸ்ஆப் வாய்ஸ்கால் சேவை வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ப்ரியான் ஆக்டன் கூறும் போது ஐஓஎஸ் இயங்குதளங்களில் வாய்ஸ்கால் அப்டேட் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆனால் ஆன்டிராய்டு இயங்குதளத்திற்கு அடுத்த படியாக விண்டோஸ் அல்லது ஐஓஎஸ் என எந்த இயங்குதளத்திற்கு அப்டேட் முதலில் வழங்கப்படும் என்பதில் தொடர்ந்து மவுனம் காக்கப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications