வாட்ஸ்அப் இல் வீடியோ கால் செய்கிறீர்களா? இந்த புது விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!
வாட்ஸ்அப் (WhatsApp) கடந்த ஆண்டு 32 பேர் வரை குரூப் வீடியோ கால் செய்யும் வசதியை அறிவித்தது. ஆனால், புதிய குரூப் வீடியோ அழைப்பைத் தொடங்கும் போது, 7 பயனர்களை மட்டுமே சேர்க்க அனுமதிக்கிறது. இப்போது இந்த எண்ணிக்கையை நிறுவனம் அதிகரித்துள்ளது.
சமீபத்தில், வெளியான புதிய தகவலின் படி, இனி வாட்ஸ்அப் பயனர்கள் 15 நபர்கள் வரை குரூப் வீடியோ கால் துவங்கும் போது இணைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பின், மொத்தமாக 32 பேர் வரை ஒரே வீடியோ காலில் சேர்க்கலாம். ஆனால், அழைப்பு ஏற்கனவே தொடங்கிய பிறகு தான் பயனர்களால் மற்றவர்களை அழைப்புடன் இணைக்க முடியும்.

வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள புதிய குரூப் வீடியோ அழைப்பு அம்சம் தொடங்கும் போதே 15 பேர் வரை சேர்க்கும் வாய்ப்பை இப்போது வழங்குகிறது. இந்த அம்சத்தை WhatsApp இப்போது தனது பயனர்களுக்காக தொடங்கியுள்ளது. WABetaInfo படி, இந்த அம்சம் Android இல் WhatsApp பீட்டா பயனர்களுக்கு வெளிவரத் தொடங்கியுள்ளது.
இந்த அம்சம் ஆண்ட்ராய்டு வெர்ஷன்களான 2.23.15.14, 2.23.15.10, 2.23.15.11 மற்றும் 2.23.15.13 ஆகியவற்றில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டில் உள்ள வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் சமீபத்திய அம்சத்தைப் பெற இந்த பதிப்புகளுக்கு பயன்பாட்டைப் அப்டேட் செய்யலாம். இது பீட்டாவில் இருப்பதால், வெளியீடு படிப்படியாக இருக்கும்.
மேலும் இது அனைத்து பயனர்களுக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காமல் போகலாம். வாட்ஸ்அப்பில் இந்த புதிய குரூப் வீடியோ கால்ஸ் அழைப்புகளைத் தொடங்குவதற்கான செயல்முறை மிகவும் எளிதானது. நீங்கள் வாட்ஸ்அப்பில் கால்ஸ் டேப் சென்று, மேலே உள்ள அழைப்பை உருவாக்கு பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
புதிய குரூப் வீடியோ அழைப்பைத் தொடங்குவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் தொடர்பு பட்டியலில் இருந்து பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவும். தற்போது, குரூப் வீடியோ அழைப்பிற்கு ஏழு பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். அழைப்பு தொடங்கியதும், அழைப்பில் 32 பேர் வரை அதிகமான பங்கேற்பாளர்களைச் சேர்க்கலாம்.
சமீபத்திய அப்டேட் உடன், வீடியோ கால் அழைப்பின் துவக்க வரம்பு 15 பங்கேற்பாளர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய புதுப்பிப்பாக இல்லாவிட்டாலும், பெரிய குழு வீடியோ அழைப்புகளை ஹோஸ்ட் செய்ய விரும்புவோருக்கு இது உதவியாக இருக்கும். மேலும், அழைப்பு தொடங்கிய பிறகு பங்கேற்பாளர்களைச் ஒவ்வொருவராக சேர்ப்பது சிரமமாக இருக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த அம்சம் பீட்டா மற்றும் ஆண்ட்ராய்டில் உள்ள WhatsApp பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இது இன்னும் iOS இல் கிடைக்கவில்லை. சமீபத்திய அப்டேட்டைப் பெற, ஆண்ட்ராய்டு பயனர்கள் வாட்ஸ்அப்பின் பீட்டா திட்டத்தைத் தேர்வுசெய்யலாம். அதிகாரப்பூர்வ வெளியீட்டைப் பொறுத்தவரை, WhatsApp இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், இது இன்னும் சில மாதங்களில் பொது பயன்பாட்டிற்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








