Home
News

WhatsApp பயனர்கள் ரொம்ப நாள் எதிர்பார்த்த அம்சம் விரைவில்: அப்படியென்ன அம்சம்?

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தொடர்ந்து புதிய அம்சங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

புதிய அம்சம்

புதிய அம்சம்

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் ஒரு புதிய அம்சத்தை கொண்டுவர உள்ளது. அதாவது இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தான் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

அதாவது தற்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை மட்டுமே வாட்ஸ்அப்-இல் ஸ்டேட்டஸாக வைக்க முடியும். ஆனால் விரைவில் வாய்ஸ் நோட்களையும் ஸ்டேட்டஸாக வைக்கும் அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 குரலை பதிவு செய்து அனுப்ப முடியும்

குரலை பதிவு செய்து அனுப்ப முடியும்

நாம் இப்போது வாட்ஸ்அப் செயலியில் குரலை பதிவு செய்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவோம். இனிமேல் இதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் வைக்க முடியும். குறிப்பாக இந்த புதிய அம்சம் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

இன்னொரு சூப்பர் அம்சம்

இன்னொரு சூப்பர் அம்சம்

அதேபோல் இன்னொரு சூப்பர் அம்சமும் வாட்ஸ்அப் செயலில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் செயலியில் பெறும் மெசேஜ்களுக்கு குறிப்பிட்ட 6 ஈமோஜிகள் மட்டுமே ரிப்ளையாக அனுப்ப அனுமதிக்குப்பட்டு வந்த நிலையில் விரைவில் அனைத்து ஈமோஜிகளும்அனுமதிக்கப்பட இருக்கிறது.

 பீட்டா பதிப்பு

பீட்டா பதிப்பு

WABeta தகவலின்படி, Android 2.22.15.7-க்கான பீட்டா பதிப்பு மற்றும் iOS 22.14.0.71-க்கான பீட்டா பதிப்பில் அனைத்து ஈமோஜிக்கான அம்சமும் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனத்தின் சிஇஒ ஓரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

போலி செயலிகள்?

போலி செயலிகள்?

சமீபத்தில் வாட்ஸ்அப் சிஇஒ வில் கேத்கார்ட் தெரிவித்தது என்னவென்றால், வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாமல் போலியான அல்லது வாட்ஸ்அப்பின் மாற்றி அமைக்கப்பட்ட செயலிகளை பயன்படுத்த வேண்டாம்என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் Hey WhatsApp போன்ற செயலிகள் போலியானவை, ஆபத்தானவை என்றும், அவற்றை பதிவிறக்குவதை மக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

அதேபோல் வாட்ஸ்அப் சிஇஒ வில் கேத்கார்ட் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வாட்ஸ்அப் போன்ற சேவைகளை வழங்குவதாக கூறும் சில போலி தீங்கிழைக்கும்செயலிகளை பாதுகாப்பு ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.

Heymods என்ற டெவலப்பரின் Hey WhatsApp போன்ற செயலிகள் மிகவும் ஆபத்தானவை. கண்டிப்பாக இதுபோன்ற செயலிகளை மக்கள் பதிவிற்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தனிப்பட்ட தகவல்கள்

தனிப்பட்ட தகவல்கள்

இணையத்தில் கிடைக்கும் சில போலி செயலிகள் வாட்ஸ்அப்-ஐ விட புத்தம் புதிய அம்சங்களை வழங்குவதாக உறுதியளிக்கின்றன. ஆனால் அதுபோன்ற புதிய வசதிகளை வழங்காமல் பயனர்களின் போன்களில் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக கூறப்படுகிறது.

சிறந்த பாதுகாப்பு வசதி

சிறந்த பாதுகாப்பு வசதி

சில போலி செயலிகள் வாட்ஸ்அப் போன்றே அம்சங்களை வழங்க முடியும் என்றாலும், மெசேஜிங் பயன்பாட்டில் அசல் பதிப்பில் நீங்கள் பெறும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் அம்சத்தை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது வாட்ஸ்அப் மட்டுமே உங்களது தனிப்பட்ட தரவைப்
பாதுகாக்க உதவும்.

 பிளே ஸ்டோர்

பிளே ஸ்டோர்

வாட்ஸ்அப் போன்றே இருக்கும் சில போலி பதிப்புகள் பிளே ஸ்டோரில் கிடைக்காது. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற தளங்களில் இருந்து இதுபோன்ற போலி செயலிகளை பதிவிறக்க முயற்சிக்கும் பயனர்கள் தங்கள் போன்களில் அவற்றை நிறுவும் முன் எச்சரிக்கையாகவும், கவனமாகவும்இருக்க வேண்டும்.

தீங்கு விளைவிக்கும் HeyMods

தீங்கு விளைவிக்கும் HeyMods-க்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொணடு வருகிறோம். எனவே இதுபோன்ற போலி பயன்படுத்தாமல் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வாட்ஸ்அப் சிஇஒ வில் கேத்கார்ட் கூறியுள்ளார்.

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் பயனுள்ள பல அம்சங்களை விரைவில் அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
WhatsApp users will soon be able to set a voice note as 'status': Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X