Home
News

ஒரே நேரத்தில் இனி 4 சாதனத்தில் WhatsApp! இது ஆபத்தானதா அல்ல பாதுகாப்பானதா?

வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு ஒரு அற்புதமான புது அம்சம் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் வாட்ஸ்அப் அக்கௌன்ட்டை இனி ஒரே நேரத்தில் 4 சாதனங்கள் வரை சிங்க் (Sync) செய்து இயக்க முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது பாதுகாப்பானதா? கெட்டதா?

WhatsApp சேவையை இப்போது மக்கள் அவர்களின் ஸ்மார்ட்போனில் பாதுகாப்பாக பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் சிங்க் செய்தும் இயக்கி வருகின்றனர். இப்போது வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்காக பல சாதனத்தை ஒரே நேரத்தில், ஒரே அக்கௌன்ட் உடன் இணைக்கும் ஒரு புதிய செயல்முறையை அறிமுகம் செய்துள்ளது.

ஒரே நேரத்தில் இனி 4 சாதனத்தில் WhatsApp! இது ஆபத்தா அல்ல பாதுகாப்பா?

மெட்டாவுக்குச் சொந்தமான WhatsApp இயங்குதளம், விண்டோஸுக்காகவே வடிவமைக்கப்பட்ட புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தது. விண்டோஸ் டெஸ்க்டாப்பிற்கான புதிய வாட்ஸ்அப் செயலியானது மொபைல் பயன்பாட்டைப் போலவே உள்ளது. அதேபோல், பல சாதனங்களில் WhatsApp பயன்பாட்டைப் பயன்படுத்துவதற்கான வேகமான மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்கும் படி இது உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

WhatsApp பயனர்கள் இப்போது தங்கள் வாட்ஸ்அப் கணக்கை நான்கு சாதனங்களுடன் இணைக்க முடியும். அவர்களின் சாட்கள் சிங்க் செய்யப்பட்டு, என்கிரிப்ட் செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது என்று WhatsApp தெரிவித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், பயனரின் மொபைல் ஆஃப்லைனில் இருந்தாலும் கூட, மற்ற டிவைஸ்களில் WhatsApp-ஐ இனி பயனர்கள் அணுக முடியும்.

Windows டெஸ்க்டாப்பில் WhatsApp பயன்பாட்டை அப்டேட் செய்த பிறகு, பயனர்கள் வீடியோ மற்றும் குரல் அழைப்பு விருப்பங்கள் மற்றும் கிட்டத்தட்ட எல்லா சாதனங்களுக்கும் சாதனத்தை இணைப்பது உள்ளிட்ட புதிய அம்சங்களை அணுகலாம். வாட்ஸ்அப் தனது சமீபத்திய ட்வீட்டில், "சார்ஜர் இல்லையா, இனி பிரச்சனை இல்லை", இனி உங்கள் வாட்ஸ்அப்பை நான்கு சாதனங்களுடன் இணைக்க முடியும்.

ஒரே நேரத்தில் இனி 4 சாதனத்தில் WhatsApp! இது ஆபத்தா அல்ல பாதுகாப்பா?

உங்கள் ஃபோன் ஆஃப்லைனில் இருந்தாலும் கூட, இனி உங்கள் WhatsApp கணக்கை அணுக முடியும் என்று கூறியுள்ளது. பல சாதனங்களில் உங்கள் WhatsApp கணக்கைப் பயன்படுத்த விரும்பினால், உங்கள் கணக்கை உங்கள் முதன்மை மொபைல் சாதனத்துடன் இணைக்க இந்த செயல்முறையைப் பின்பற்றவும்.

உங்கள் WhatsApp கணக்கை ஒரே நேரத்தில் எப்படி 4 சாதனங்களில் இணைப்பது?
உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்கள் முதன்மை சாதனத்தில் WhatsApp ஐத் திறக்கவும்.
Settings சென்று, Linked Devices என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Link a New Device என்பதை கிளிக் செய்யவும்.
பின் டிஸ்பிளேயில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

விண்டோஸ் டெஸ்க்டாப்பில் உள்ள இரண்டாவது சாதனத்தை இணைக்க, உங்கள் பிரௌசரில் web.whatsapp.com என்ற இணையப் பக்கத்தைத் திறக்கவும்.
உங்கள் இரண்டாவது சாதனம் மூலம் இணையப் பக்கத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
உங்கள் டிவைஸ் சிங்க் ஆகும் வரை காத்திருக்கவும்.
உங்கள் சாட்கள் இரண்டாவது சாதனத்தில் தோன்றும்.

ஒரே நேரத்தில் இனி 4 சாதனத்தில் WhatsApp! இது ஆபத்தா அல்ல பாதுகாப்பா?

கூடுதல் சாதனங்களை இணைக்க இதே செயல்முறையை மீண்டும் மற்றொரு சாதனத்தில் செய்யவும்.
இதன்படி நீங்கள் 4 சாதனங்களை ஒன்றாக இணைக்கலாம்.
இணைக்கப்பட்ட சாதனங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் வரை உங்கள் WhatsApp கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும்.
WhatsApp பயன்பாட்டிலிருந்து வெளியேறுவதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் சாதனத்தின் இணைப்பை நீக்கலாம்.

நீங்கள் ஒரே நேரத்தில் நான்கு இணைக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் ஒரு ஃபோனைப் பயன்படுத்தலாம். உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள், மீடியா மற்றும் கால்ஸ் அனைத்தும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளன. இணைக்கப்பட்ட ஒவ்வொரு சாதனமும் வாட்ஸ்அப்பில் சுயாதீனமாக இணைக்கப்படும், பாதுகாப்பாக இருக்குமென்று நிறுவனம் கூறுகிறது.

லவ் டுடே படத்தில் வருவது போல, உங்கள் போன் உங்கள் கையில் இருக்கும் வரை தான் பாதுகாப்பு. ஒரு சாதனத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தவே இங்கு சிலருக்குத் திகில் நிமிடங்களாக இருக்கிறது. இதில் 4 சாதனத்தில் ஒரே அக்கௌன்ட்டை பயன்படுத்தினால், டென்ஷன் தலைக்கேறாமல் கூலாக இருக்க முடியுமா என்பது சந்தேகமே. உங்கள் வாட்ஸ்அப் இல் பிரைவேட் சாட் எதுவும் இல்லை என்றால், தாராளமாக கூலாக 4 சாதனங்களில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Users Can Use 4 Devices At The Same Time Is it dangerous or safe
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X