இந்த 5 நம்பர்களில் இருந்து WhatsApp கால் வந்தா தூக்கத்தில் கூட எடுக்காதீங்க!
இந்திய வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு இன்டர்நேஷனல் நம்பர்களில் (International Numbers) இருந்து ஒரு மோசடி கும்பல் கால் (Call) செய்தும், மெசேஜ் (Messages) அனுப்பியும் பண மோசடியில் ஈடுபட்டுவருகிறது. இந்த வாட்ஸ்அப் ஃபேக் இன்டர்நேஷனல் கால்கள் ( WhatsApp Fake International Calls) குறிப்பிட்ட சில நாட்டு நம்பர்களில் இருந்து வருகிறது. அதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
நாடு முழுவதும் சைபர் கிரைம் (Cyber Crime) கும்பல்கள் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறது. வாட்ஸ்அப் பயனர்களின் வங்கி தகவல்களை (Bank Details) திருடுவது, அவர்களின் தனிப்பட்ட ஆடியோக்கள் (Audios), வீடியோக்கள் (Videos), போட்டோக்களை (Photos) திருடி அதை வைத்து மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட செயல்களை செய்து வருகிறது.

அண்மைகாலமாக, இந்த சைபர் கிரைம் கும்பல், அடையாளம் தெரியாத வாட்ஸ்அப் நம்பரில் இருந்து ஒருவருக்கு கால் செய்தோ, மெசேஜ் செய்தோ பார்ட் டைம் ஜாப் (Part Time Jobs) வாய்ப்பு உள்ளது, யூடியூப் வீடியோவுக்கு லைக் போட்டால் போதும், பிடிஎஃப் பைல்களை பார்த்து டைப் செய்து கொடுத்தால் போதும், உங்களுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறத் தொடங்கிவிட்டது.
இதையும் மக்கள் நம்பி ஏமாற தொடங்கியிருக்கிறார்கள். இதுகுறித்து நாள்தோறும் வெளியாகும் செய்திகளை பார்த்து மக்கள் உஷார் அடைந்திருக்கும் வேலையில், புதுவிதமான டெக்னிக்கை சைபர் கிரைம் கும்பல் கையில் எடுத்துள்ளது. அதுவும், இன்டர்நேஷனல் நம்பர்களை பயன்படுத்தி கொள்ளை திட்டத்தை தீட்டியிருக்கிறது.
இதுபோன்ற இன்டர்நேஷனல் நம்பர்களில் இருந்து கால்கள் வந்தால், வாட்ஸ்அப் பயனர்கள் (WhatsApp Users) கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும். இந்த 5 நாட்டு நம்பகளையே மோசடி கும்பல் அதிகம் பயன்படுத்துவது புகார்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. அண்மையில் வட மாநிலத்தை சேர்ந்த பலருக்கு எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84), பெரு (+51) உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வாட்ஸ்அப் நம்பர்களில் இருந்து கால் மற்றும் மெசேஜ் வந்துள்ளது.

இதற்கு பதிலளித்த சிலரிடம் மோசடி கும்பல் பார்ட் டைம் ஜாப் இருக்கிறது என்று சொல்லி, சுலபமான வேலைகளை கொடுத்து அதற்கு பணத்தையும் கொடுத்துள்ளது. இதனை நம்பிய வாட்ஸ்அப் பயனர்கள் அதிகமான வேலைகளை செய்து முடித்து ரூ.30 முதல் ரூ.50 ஆயிரம் வரையில் வேலை செய்து அந்த பணத்தை கேட்கும்போது, இன்டர்நேஷனல் விதிகளின்படி முதலில் நீங்கள் ரூ.10 ஆயிரம் அனுப்பினால் மட்டுமே எங்களால் உங்களது சம்பளத்தை அனுப்பி வைக்க முடியும் என்று கராராக பதிலளிக்கிறது.
இதை உண்மையென நம்பி பயனர்களும் பணத்தை அனுப்பி ஏமாந்து போகின்றனர். இதுவொரு பக்கம் இருக்க, உங்களுக்கு லாட்டரியில் பணம் அல்லது பரிசு விழுந்துள்ளது. உங்களது பெயர், பிறந்த தேதி, இமெயில் ஐடி, முகவரி ஆகியவற்றுடன் வங்கி தகவல்களை அனுப்புங்கள் என்று வாட்ஸ்அப் மெசேஜ் வருகிறது. இதை நம்பி தகவல்களை அனுப்பினால், அவர்களின் வங்கியில் இருந்து பணம் கொள்ளை போகிறது.
ஆகவே, வாட்ஸ்அப் பயனர்கள் எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84), பெரு (+51) ஆகிய நாடுகள் மட்டுமல்லாமல், எந்த இன்டர்நேஷனல் நம்பர்களில் இருந்தும் கால்களோ மெசேஜ்களோ வந்தால், அதை கட்டாயம் எடுக்க வேண்டாம். அதேபோல, உங்களது உறவினர்கள் யாரேனும் வெளிநாட்டில் இருந்தால், அவர்களுக்கு நீங்களே கால் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதன்பின் பேசுங்கள்.


Click it and Unblock the Notifications








