Home
News

இனி மொபைல் நம்பர் தேவை இல்லை.. @username போதும்.. WhatsApp-க்கு வரும் வரலாற்று மாற்றம்.. எப்போது முதல்?

வாட்ஸ்அப் (WhatsApp) சேவையில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நடைமுறைக்கு வரவுள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அப்டேட்டை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் தயாராகி வருகிறது. அது @யூசர்நேம்களை (@username) உருவாக்க அனுமதிக்கும் அப்டேட் ஆகும். இதன் மூலம் நீண்டகாலமாக மொபைல் நம்பர்களை நம்பியிருப்பதை விட்டு விலகி வாட்ஸ்அப் உள்ளது!

கடந்த 2009 இல் தொடங்கப்பட்டதில் இருந்து, மெட்டாவுக்கு சொந்தமான இந்த மெசேஜிங் பிளாட்ஃபார்ம் ஆனது மொபைல் நம்பர்கள் மூலம் மட்டுமே ரிஜிஸ்டர் (வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை திறப்பது) மற்றும் மற்ற காண்டாக்ட்களை கண்டுபிடிப்பதை (மற்ற வாட்ஸ்அப் பயனர்களை கண்டுபிடிப்பதை) செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு - பல ஆண்டுகளாக யூஸர்நேம்ர்களை வழங்கி வரும் டெலிகிராம் (Telegram) போன்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது மிகவும் பழைய அமைப்பாக உள்ளது.

WhatsApp: இனி மொபைல் நம்பர் தேவை இல்லை.. @username போதும்!

இதற்கிடையில் தான் வாட்ஸ்அப் நிறுவனம் யூசர்நேம்களை வெளியிட தயாராகிறது. WABetaInfo வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி - யூசர்நேம்கள் மற்றும் அவற்றின் விதிகள் பற்றிய குறிப்புகள் ஆனது வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் டெஸ்ட் பில்ட்களில் (Test Build) காணப்பட்டுள்ளது. அதன்படி யூசர்நேம்களில் குறைந்தது ஒரு எழுத்தாவது இருக்க வேண்டும் மற்றும் சிறிய எழுத்துக்கள் (Small Letters), எண்கள் (Numbers), முற்றுப்புள்ளிகள் (Fullstops) மற்றும் அடிக்கோடுகளை (underscores) மட்டுமே சேர்க்க முடியும்.

மேலும் வெப் லிங்க்ஸ் (Web Links) அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் (Official Websites) உடனான குழப்பத்தை தடுக்க, "www." உடன் தொடங்கும் யூசர்நேம்களை பதிவு செய்வதற்கான முயற்சிகள் தடுக்கப்படும். எண்கள் அல்லது சின்னங்களால் (Symbols) மட்டுமே உருவாக்கப்பட்ட யூசர்நேம்களும் அனுமதிக்கப்படாது.

இதோடு வாட்ஸ்அப் இப்போது ஒரு முன்பதிவு முறையையும் (Reservation system) முயற்சி செய்து வருகிறது. வாட்ஸ்அப்பின் செட்டிங்ஸ்களுக்குள் ஒரு புதிய விருப்பம் உள்ளது, இந்த யூசர்நேம் அம்சம் ஆனது அனைவருக்கும் கிடைப்பதற்கு முன்பே, பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ஹேண்டில்களை முன்கூட்டியே கோர அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. இது ஆள்மாறாட்ட அபாயங்களை குறைக்கவும், முன்கூட்டியே இந்த அப்டேட்டை ஏற்றுக்கொள்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய அடையாளத்தை பாதுகாப்பதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கவும் உதவலாம்.

வாட்ஸ்அப்பில் யூசர்நேம் அப்டேட் எப்போது ரிலீஸ் ஆகும்? இந்த அம்சத்திற்கான பப்ளிக் ரிலீஸ்க்கான காலக்கெடுவை மெட்டா நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், முன்பதிவு முறையை சேர்ப்பதன் மூலம், நீண்டகாலமாக கோரப்பட்ட இந்த அம்சம் கூடிய விரைவில் வரக்கூடும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அறிமுகமானதும் - இது உலகின் மிகவும் பிரபலமான மெசேஜிங் சேவையான வாட்ஸ்அப்பில் - ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சமீபத்தில் - கூகுளில் கிடைக்கும் இன்காக்னிட்டோ மோட்-ஐ போலவே, சஃபாரியில் (Safari) தளத்தில் பிரைவேட் ப்ரவுஸிங்கை (Private Browsing) போலவே, வாட்ஸ்அப்பிலும் ஒரு சீக்ரெட் சாட் அம்சம் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.25.28.1 க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் காணப்பட்டுள்ளது. அதாவது இதுவும் டெஸ்டிங் ஸ்டேஜில் உள்ளது.

இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்கள், மெட்டா ஏஐ சாட்பாட்டுடன் (Meta AI Chatbot) தனிப்பட்ட முறையில் உரையாட அனுமதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் ரகசியத்தன்மையை (Confidentiality) பராமரிக்க பயனர்கள் கேட்கும் கேள்விகளை பற்றிய விவரங்களையும் (History of their queries) பதிவு செய்யாது என்றும் கூறப்படுகிறது

இந்த இன்காக்னிட்டோ மோட் அம்சம் ஆனது சோதனை கட்டத்தை தாண்டிய பின்னர், வாட்ஸ்அப்பிற்கு வரும் எதிர்கால அப்டேட் வழியாக அனைவருக்கும் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு நீங்கள் ​​மெட்டா ஏஐ சாட்போட்டுடன் உரையாடும் போது, ​​எதிர்கால குறிப்புக்காக அது உங்களுடைய கேள்விகள் குறித்த தரவை பதிவு செய்யலாம் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Username Handles Launching Soon No More Reliance on Mobile Number All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X