Home
News

திடீர் தடை போட்ட அரசு.. WhatsApp-க்கு ஜூலை 9 கடைசி.. UserName குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் நீட்டிப்பு!

இந்தியாவில் யூசர்நேம் (UserName) அம்சத்தை அமல்படுத்த வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனத்துக்கு தடை விதித்த இந்திய அரசு (Indian Government) அதுகுறித்த விளக்கத்தை கொடுக்க ஜூலை 9ஆம் தேதியை கெடுவாக கொடுத்துள்ளது. இந்திய அரசே தடை விதிக்க காரணமாக இருக்கும் யூசர்நேம் அம்சம் எப்படி?

இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology) ஆனது மெட்டா (Meta) நிறுவனம் அதனுடைய வாட்ஸ்அப் (WhatsApp) ஆப்பில் அமல் செய்ய திட்டமிட்ட யூசர்நேம் (Username) அம்சம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த விளக்கத்தை கொடுக்க ஜூலை 9 வரை அவகாசம் கொடுத்துள்ளது.

திடீர் தடை போட்ட அரசு.. WhatsAppக்கு ஜூலை 9 கடைசி.. UserName குறித்து?

இந்த புதிய அம்சம் யூசர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. வாட்ஸ்அப்பில் ஒருவரை தொடர்புகொள்ள அவர்களின் மொபைல் நம்பர் (Mobile Number) கட்டாயமாக தேவைப்படுகிறது.

ஆனால், மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள யூசர்நேம் அம்சம் வழியாக, வாட்ஸ்அப் யூசர்கள் தங்களுக்கென தனிப்பட்ட பயனர்பெயரை (யூசர்நேம்) உருவாக்கி கொள்ள முடியும். இந்த யூசர்நேம் வழியாகவே மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியும். ஆகவே, மேசேஜ், கால்கள் உள்ளிட்டவற்றை செய்து கொள்ள முடியும் என்பது தெரியவருகிறது.

இந்த மாற்றம் யூசர்களுக்கு கூடுதல் தனியுரிமையை வழங்கும் என கூறப்பட்டாலும், இதன் மூலம் போலியாக யூசர்நேம்களை உருவாக்கவும், அதன் மூலமாக மோசடிகளை செய்ய வாய்ப்பும் இருப்பதாக கேள்விகளும் எழுந்துள்ளன. இதன் காரணமாகவே மெட்டா நிறுவனத்திடம் விரிவான விளக்கத்தை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கோரி இருக்கிறது.

இந்த விளக்கத்தை கொடுக்கும் வரையில் யூசர்நேம் அம்சத்தை இந்தியாவில் அமல்படுத்த தடை விதித்துள்ளது. ஆகவே, ஜூலை 9 ஆம் தேதிக்குள் யூசர்நேம் அம்சத்தின் செயல்பாடு, பாதுகாப்பு நடைமுறைகள், பயனர்களின் தகவல் கையாளும் விதம் மற்றும் தவறான பயன்பாட்டை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மெட்டா பதிலளிக்க வேண்டும்.

யூசர்நேம் அம்சத்தை ஏற்கனவே டெலிகிராம் (Telegram), சிக்னல் (Signal) போன்ற ஆப்கள் பயன்படுத்துகின்றன. இந்த அம்சம் வழியாக மொபைல் நம்பரை பகிர வேண்டியது கிடையாது. ஆகவே, யூசர்களை தொடர்பு கொள்வது எளிதாக இருக்கும். இது வணிக சேவைகள் மற்றும் மொபைல் நம்பரை பகிர விரும்பாத யூசர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில், இந்த அம்சத்தை தவறாக பயன்படுத்தி போலி யூசர்நேம்களை உருவாக்க முடியும். அதன் மூலம் மோசடிகளில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகவும் சில கூறப்படுகிறது. இதனால், யூசர்நேம் சரிபார்ப்பு, போலி யூசர்நேம் குறித்து புகார் அளிக்கும் வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவற்றை வலுப்படுத்தப்பட வேண்டியது கட்டாயமாகிறது.

மெட்டா நிறுவனம் வழங்கும் பதிலை பொறுத்தே, இந்த புதிய அம்சம் தொடர்பாக அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. சொல்லப்போனால், வாட்ஸ்அப் நிறுவனமே இதை சோதனை முயற்சியில் வைத்திருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பீட்டா வெர்ஷன் வழியாக கொடுத்து, தனியுரிமைக்கு ஏற்ப அப்டேட்களை கொடுத்தே அமலுக்கு கொண்டுவர வாய்ப்புள்ளது.

மெட்டா நிறுவனம் ஜூலை 9ஆம் தேதிக்குள் அளிக்கும் விளக்கத்திற்கு பிறகே, வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சமானது யூசர்களுக்கு கொடுக்கப்படுமா அல்லது நிறுத்தி வைக்கப்படுமா என்பது குறித்த தெரியவரும். அதுவரையில் வழக்கமாக மொபைல் நம்பரை வைத்தே யூசர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். சொல்லப்போனால், மெட்டா நிறுவனமும் இதை ஆரம்ப கட்ட நிலையிலேயே வைத்துள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp Username Feature July 9 Deadline For Meta To Reply To Indian Government Notice
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X