இனி 256 இல்ல 512: டபுளாக்கி பயனர்களை குஷி படுத்திய வாட்ஸ்அப்- அனைவரும் இனி ஒரே கூட்டில்!

|

வாட்ஸ்அப் குரூப் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது 512 உறுப்பினர்கள் வரை வாட்ஸ்அப் குழுவில் இணைக்க அனுமதிக்கிறது. உலகின் பல பகுதிகளில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களுக்கு இந்த புதுப்பிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் அப்டேட் தற்போது வரை கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கண்டிப்பாக கிடைக்கும். வாட்ஸ்அப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த புதுப்பிப்பை அறிவித்தது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது இது அனைவருக்குமானதாக மாற்றப்பட்டுள்ளது.

512 உறுப்பினர்கள் வரை இணைக்கலாம்

512 உறுப்பினர்கள் வரை இணைக்கலாம்

தற்போதைய புதுப்பிப்பின் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் குழுவில் 512 உறுப்பினர்கள் வரை இணைக்கலாம். இந்த புதுப்பிப்பு அம்சமான பெரும்பாலான பயனர்களுக்கு தற்போதே கிடைக்கிறது. புதுப்பிப்பு கிடைத்த பயனர்களால் வாட்ஸ்அப் குழுவில் 512 உறுப்பினர்கள் வரை இணைக்க முடியும். இன்னும் இந்த அம்சத்தைப் பெறாதவர்கள் நிச்சயமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் இதற்கான புதுப்பிப்பைப் பெறுவார்கள்.

அம்சம் கிடைக்கிறதா என்பதை எப்படி சோதிப்பது?

அம்சம் கிடைக்கிறதா என்பதை எப்படி சோதிப்பது?

வாட்ஸ்அப் வழங்கும் இந்த அம்சம் உங்களுக்கு கிடைக்கிறதா என்பதை சோதிக்க, வாட்ஸ்அப் ஓபன் செய்து திரையின் மேல் வலது புறத்தில் காட்டப்படும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும். அதில் New Group என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து அதில் காட்டப்படும் ஏதாவது ஒரு தொலைபேசி எண்ணை கிளிக் செய்தால், மேலே எத்தனை பங்கேற்பாளர்கள் வரை இணைக்கலாம் என்ற எண்ணிக்கை காட்டப்படும். இதன்மூலம் இந்த அப்டேட் கிடைக்கிறதா என்பதை சரி பார்க்கலாம்.

512 உறுப்பினர்கள் வரை இணைக்கலாம்

512 உறுப்பினர்கள் வரை இணைக்கலாம்

இதில் 512 உறுப்பினர்கள் வரை இணைக்கலாம் என்று காண்பித்தால் நீங்கள் இந்த புதுப்பிப்பை பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம், இல்லையெனில் ப்ளே ஸ்டோருக்கு சென்று வாட்ஸ்அப் பயன்பாட்டை அப்டேட் செய்யவும்.

2 ஜிபி வரையிலான கோப்புகளை பகிரலாம்

2 ஜிபி வரையிலான கோப்புகளை பகிரலாம்

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தேவை அறிந்து புதுப்புது அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் பயன்பாட்டில் 100 எம்பி வரையிலான கோப்புகள் மட்டுமே பகிர முடியும் என்று இருந்த நிலையில் வாட்ஸ்அப் அதை 2ஜிபி ஆக உயர்த்தியது. இதன்மூலம் பயனர்கள் 2 ஜிபி வரையிலான கோப்புகளை வாட்ஸ்அப்பில் பகிர முடியும்.

'Undo' என்ற பட்டன்

'Undo' என்ற பட்டன்

WABetaInfo அறிக்கையின்படி, பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்படாத எண்களுக்கு கூட மெசேஜ்களை அனுப்பும் புதிய அம்சத்தில் நிறுவனம் மும்முரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது வரை நமது ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்படாத எண்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்ப WhatsApp அனுமதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் WhatsApp அதன் பயனர்களுக்கு 'Undo' என்ற பட்டனைக் கொண்டு வரக்கூடும் என WABetaInfo அறிக்கை தெரிவிக்கிறது. இதன்மூலம் பயனர்கள் தவறுதலாக டெலிட் செய்யும் மெசேஜை மீட்டெடுக்க முடியும்.

பிரத்யேக எடிட் பட்டன்

பிரத்யேக எடிட் பட்டன்

அதேபோல் வாட்ஸ்அப் தளத்தில் தற்போது வரை பிரத்யேக எடிட் பட்டன் என்று ஏதும் இல்லாத நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பீட்டா பதிப்பில் எடிட் ஆப்ஷன் அம்சத்தை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எடிட் ஆப்ஷன் அம்சத்தின் மூலம் பிறருக்கு அனுப்பிய செய்திகளை திருத்தலாம். டுவிட்டர் நிறுவனத்தை விட வாட்ஸ்அப் விரைவாக எடிட் ஆப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப்பில் தவறாக மெசேஜ் அனுப்பும்பட்சத்தில் அதை டெலிட் செய்யலாம் ஆனால் திருத்தம் செய்ய முடியாது. இந்த சிக்கலை சரி செய்ய வாட்ஸ்அப் எடிட் பட்டன் அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

Best Mobiles in India

English summary
Whatsapp Update: Now Add up to 512 Participants in Whatsapp Group

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X