Home
News

iPhone யூசர்களுக்கு WhatsApp அடிச்ச அப்டேட்.. வாய்ஸ் கால், டெக்ஸ்ட் மெசேஜ்ல வருது.. இனிமே இதை பண்ணுங்க!

ஐபோன் (iPhone) யூசர்களுக்கு அசத்தலான அப்டேட்டை வாட்ஸ்அப் (WhatsApp) கொடுத்திருக்கிறது. இனிமேல் வாய்ஸ் காலிங் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கான டீபால்ட் ஆப்-ஆக வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்த முடியும். இந்த அப்டேட் மூலமாக ஒரே ஆப் மூலம் பல்வேறு சேவைகளை அணுக முடியும். இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஐஓஎஸ் (iOS) மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்தும் யூசர்களுக்கு மெட்டா நிறுவனம் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (WhatsApp Beta Version) மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, அனைத்து யூசர்களுக்கும் கிடைக்காது. பீட்டா வெர்ஷனுக்கு பிறகு ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் கிடைக்க இருக்கிறது.

iPhone யூசர்களுக்கு WhatsApp அடிச்ச அப்டேட்.. வாய்ஸ் கால், டெக்ஸ்ட்!

வாட்ஸ்அப் டீபால்ட் ஆப் ஐபோன் (WhatsApp Default App Iphone): ஐபோன் யூசர்கள் வழக்கமாக பயன்படுத்திவரும் வாய்ஸ் கால் மற்றும் டெக்ஸ்ட் ஆப்களுக்கு பதிலாக இனிமேல் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்த முடியும். ஆகவே, வாட்ஸ்அப் மட்டுமல்லாமல், உங்களது மொபைல் நம்பருக்கு வரும் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களையும் வாட்ஸ்அப் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

ஆகவே, ஒரேவொரு ஆப் மூலம் ஒட்டுமொத்த வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களின் சேவைகளை அணுக முடியும். வெவ்வேறு ஆப்களுக்கு சென்று பார்க்க வேண்டியது கிடையாது. அதே நேரத்தில் வாட்ஸ்அப்-ஐ டீபால்ட் ஆப்-ஆக மாற்றிய பிறகு, உங்களது நம்பருக்கு எந்த ஆப்களில் இருந்தும் கால்கள், மெசேஜ் அனுப்பினாலும் அது நேரடியாக வாட்ஸ்அப்-க்கு மட்டுமே வரப்போகிறது.

வாட்ஸ்அப்-ஐ டீபால்ட்டாக எப்படி மாற்றுவது? ஐபோன் யூசர்கள் செட்டிங்ஸ் சென்று கொள்ளுங்கள். அதில் ஆப்கள் (Apps) டேப்-ஐ ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இப்போது, டீபால்ட் ஆப்கள் (Default Apps) டேப்-க்கு செல்லுங்கள். அதில் மெசேஜிங் (Messaging) மற்றும் காலிங் (Calling) ஆப்கள் காண்பிக்கப்படும். இதை கிளிக் செய்தால், வாட்ஸ்அப் ஆப்ஷன் தோன்றும்.

அதை கிளிக் செய்துவிட்டால், அவ்வளவுதான். மெசேஜிங் மற்றும் காலிங் சேவைகளுக்கு வாட்ஸ்அப் டீபால்ட் ஆப்-ஆக மாறிவிடும். இந்த ஒரே ஆப் மூலம் வாட்ஸ்அப் மட்டுமல்லாமல், வாட்ஸ்அப் வைத்திருக்காத யூசர்களுக்கும் மெசேஜ் மற்றும் கால் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், புதிய நம்பர்களுக்கு கால் செய்யும் விதமாக டயல் பேட் கொடுக்கப்படும்.

ஐபோன்களில் செக்யூரிட்டி அதிகமாக பார்க்கப்படுவதால், இந்த அப்டேட்களுக்கு அதிக பிரைவசி கிடைக்கும் என்பதில் சந்தேமில்லை. ஆகவே, யூசர்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம் என்பது தெரிகிறது. இதேபோல வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு புதிய பீச்சர்களை பீட்டா வெர்ஷனில் கொடுத்து வருகிறது. இதற்கு முன்னதாக பல்வேறு பீச்சர்கள் கிடைத்தன.

இதில் இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் லிங்கை (Instagram Profile Link) வாட்ஸ்அப் ஆப்-இன் புரொபைலில் ஆட் செய்து கொள்ளும்படியான பீச்சர் அப்டேட் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் ஒருவரது வாட்ஸ்அப் மூலம் இன்ஸ்டாகிராம் ஐடியை தெரிந்து கொள்ள முடியும். இதேபோல பேஸ்புக் லிங்க்கை சேர்க்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

அதேபோல வாட்ஸ்அப் குரூப் சாட்டில் மட்டுமே கிடைத்து வந்த ஸ்கெடுள் ஈவெண்ட் பீச்சரானது, ஒன்-டூ-ஒன் சாட்டிலும் (One-to-One Chat) கொடுக்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் லிங்க்டு டிவைஸ்களுக்கு வியூ ஒன்ஸ் மீடியா விசிபிள் ஆப்ஷன் கொடுக்கப்பட்டது. ஒரே வாட்ஸ்அப் மூலம் மல்டிபிள் அக்கவுண்ட்களை பயன்படுத்தும் பீச்சரும் வந்திருக்கிறது.

இப்படி ஏகப்பட்ட பீச்சர்களை மெட்டா (Meta) நிறுவனம் வாட்ஸ்அப் யூசர்களுக்கு கொடுத்து இருக்கிறது. இவை பீட்டா வெர்ஷனில் மட்டுமே கிடைக்கின்றன. அதேபோல பல்வேறு பீச்சர்கள் ஐஓஎஸ் யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. வரும் நாட்களில் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கும் (Android Users) கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Update iPhone Users Can Now Set WhatsApp as Default Calling and Texting App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X