வாட்ஸ்அப்-ல் அறிமுகமாகும் புதிய இரண்டு அம்சங்கள்-இனி பயன்படுத்தவே புதுசா இருக்கும்!

|

வாட்ஸ்அப் இரண்டு புதிய அம்சங்களை விரைவில் தொடங்க உள்ளது. அது ஜாயின் மிஸ்டு கால் அம்சம் மற்றும் பயோமெட்ரிக் பேஸ் லாக் அம்சமாகு அதன் முழு விவரங்களை பார்க்கலாம்.

வாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் புது அம்சம்

வாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் புது அம்சம்

சமூகவலைதள பயன்பாடுகளில் பிரதான ஒன்றாக இருப்பது வாட்ஸ்ஆப். வாட்ஸ்அப் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்ஆப் பயன்பாடு என்பது ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவருகிறது.

வாட்ஸ்அப் வெப் பயன்பாடு

வாட்ஸ்அப் வெப் பயன்பாடு

வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் வெப் பயன்பாட்டில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அழைப்பு ஆதரவை அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸ்அப் புதிதாக இரண்டு அம்சங்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த அம்சம் குறித்து பார்க்கலாம்.

Join Missed Call அம்சம்

Join Missed Call அம்சம்

ஜாயின் மிஸ்டு கால் அம்சம் என்று அழைக்கப்படும் அம்சத்தை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த அம்சம் பயனர்களை, அவர்கள் முன்பு தவறவிட்ட குரூப் வீடியோ அல்லது வாய்ஸ் அழைப்பில் மீண்டும் சேர அனுமதிக்கிறது.

அழைப்பு ஆக்டிவில் இருக்க வேண்டும்

அழைப்பு ஆக்டிவில் இருக்க வேண்டும்

ஜாயின் மிஸ்டுகால், அழைப்பு ஆக்டிவில் தொடர்ந்து இருந்தால் மட்டுமே இந்த அம்சத்தை பயனர்கள் பயன்படுத்த முடியும். அழைப்பு முடிந்துவிட்டால், அழைப்பில் சேருவதற்கான விருப்பம் தோன்றாது.

48எம்பி கேமரா, 4000எம்ஏஎச் பேட்டரியுடன் எல்ஜி Q52 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!48எம்பி கேமரா, 4000எம்ஏஎச் பேட்டரியுடன் எல்ஜி Q52 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

கைரேகை லாக்கிங் பாதுகாப்பு

கைரேகை லாக்கிங் பாதுகாப்பு

வளர்ச்சியின் கீழ் உள்ள மற்றொரு அப்டேட் பயோமெட்ரிக் அங்கீகாரம் ஆகும். தற்போது, ​​Android வாட்ஸ்அப்பில், நீங்கள் செக்யூரிட்டி விருப்பத்தை இயக்கியிருந்தால், பயன்பாட்டைத் திறப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாகக் கைரேகை லாக்கிங் பாதுகாப்பு உங்களுக்கு பயன்படுத்தக் கிடைக்கிறது. அதேபோல் இப்போது, ​​இனி கைரேகையுடன் வாட்ஸ்அப்பைத் திறக்க முக அங்கீகாரம் போன்ற பிற பாதுகாப்பு அம்சங்களும் பயன்படுத்தக் கிடைக்கும்.

ஜாயின் என்ற விருப்பம்

ஜாயின் என்ற விருப்பம்

இந்த இரண்டு அம்சங்களும் பீட்டா பதிப்பு 2.20.203.3 புதுப்பிப்பில் காணப்படுகின்றன. பீட்டாஇன்ஃபோ அறிக்கையின்படி புதிய இரண்டு அம்சங்களும் சில மாதங்களாக சோதனைக் கட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் இக்னோர் மற்றும் மிஸ் என இரண்டு விருப்பங்கள் காண்பிக்கும் அதேநேரத்தில் ஜாயின் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து குழு அழைப்பில் சேரலாம்.

கைரேகை பயன்பாடு

கைரேகை பயன்பாடு

அதேபோல் இந்த புதிய அம்சத்தில் பேஸ் ஐடி, கைரேகையை பயன்படுத்தி பயன்பாட்டை திறக்க அனுமதிக்கும். இந்த கைரேகை ஸ்கேன் அம்சம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயோமெட்ரிக் லாக்காக கருதப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Whatsapp Upcoming New Features allow to join Missed Call and Biometric Authentication Improvements

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X