ஒன்னு இல்ல ஐந்து வருது: அட்டகாச புது அம்சங்களை கொண்டுவரும் வாட்ஸ்அப்- எல்லாமே வேற ரகம்!

|

மெட்டாவுக்கு சொந்தமான செய்திடல் தளமான வாட்ஸஅப், அதன் பயன்பாடு மற்றும் இணைய பதிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி புதுப்பித்து வருகிறது. அதன்படி வாட்அப் தளத்தில் 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகும் புதிய ஐந்து அம்சங்கள் குறித்து பார்க்கலாம். கடந்த ஆண்டு வாட்ஸ்அப் தளத்தில் காணாமல் போகும் மெசேஜ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சத்திலும் மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வாட்ஸ்அப் சோதனை செய்து வருவதாக கூறப்படும் புதிய அம்சம் குறித்த தகவலை பார்க்கலாம்.

செய்தியிடல் தளமான வாட்ஸ்அப்

செய்தியிடல் தளமான வாட்ஸ்அப்

பேஸ்புக்கிற்கு சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலாமான செய்தியிடம் தளமாக இருந்து வருகிறது. வாட்ஸஅப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 பில்லியன் (200 கோடிக்கும்) அதிகமான என கூறப்படுகிறது. தகவல் தொடர்பு, வணிக பயன்பாடு தொடர்பான நடவடிக்கை பலவற்ற தேவைகளுக்கு என தளம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது.

பயனர்களின் தேவை அறிந்து பல நன்மைகள்

பயனர்களின் தேவை அறிந்து பல நன்மைகள்

வாட்ஸ்அப் தளம் பயனர்களின் தேவை அறிந்து பல நன்மைகளை வழங்கி வருகிறது. அதேபோல் பயனர்கள் தேவை அறிந்து புதிய அம்சங்களை புதுப்பித்து வழங்கி வருகிறது. இந்த ஆண்டு வாட்ஸ்அப் தளத்தில் இமேஜ் எடிட்டர், மறைந்த வரும் செய்திகள், குரல் குறிப்புகளின் வேகம் போன்ற மிக தேவையான பல அம்சங்களை அறிமுகம் செய்தது. தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படும் தகவல் குறித்து பார்க்கலாம்.

மறைந்திருக்கும் மெசேஜ்களுக்கான கால வரம்பு

மறைந்திருக்கும் மெசேஜ்களுக்கான கால வரம்பு

வாட்ஸ்அப் கடந்த ஆண்டு மறைந்து போகும் மெசேஜ்களை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் இயக்கப்பட்டால் சேட்டிங் பயன்பாட்டில் இருந்து மெசேஜ் தாமாகவே நீக்கப்படும். இந்த நிலையில் வாட்ஸ் அப் தாமாக மெசேஜ் மறையும் வசதி குறுகிய காலம் மட்டும் இருந்த நிலையில் தற்போது இது 90 நாட்கள் அம்சத்தோடு வழங்கப்போகிறது என தகவல்கள் தெரிவிக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் மட்டும் கடைசியாக பார்த்ததை மறைத்தல்

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் மட்டும் கடைசியாக பார்த்ததை மறைத்தல்

வாட்ஸஅப் பீட்டாவில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய முயற்சித்து வருகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட அம்சமானது மற்றவர்கள் அதாவது குறிப்பிட்ட நபர்களுக்கு மெசேஜ்கள் அனுப்பும் போது அவர்கள் கடைசியாக பார்த்ததை மறைக்க அனுமதிக்கும்.

மொபைல் பயன்பாட்டிற்கான ஸ்டிக்கர் மேக்கர்

மொபைல் பயன்பாட்டிற்கான ஸ்டிக்கர் மேக்கர்

வாட்ஸ்அப் பயனர்களுக்கு சாட்டிங் செய்யும் போது, சாட்டிங்கை சுவாரஸ்யமானதாக மாற்ற ஸ்மைலி மற்றும் ஸ்டிக்கர்களை பயனர்கள் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னாள் வாட்ஸ் அப் ஸ்டிக்கர் சேவையை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து பல விதமான ஸ்டிக்கர் பேக்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பலர் உருவாக்கிய ஸ்டிக்கர் பேக்களும் பதிவிறக்கம் செய்ய கிடைத்தது. இப்போது வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு இப்போது தங்களுக்கு தேவையான ஸ்டிக்கர்களை தாங்களே உருவாக்க அனுமதிக்கிறது.

சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்கும் முறை

சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்கும் முறை

வாட்ஸ்அப் இல் உங்கள் சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்கும் முறையை பற்றி இப்போது பார்க்கலாம். வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப்பிற்கான வாட்ஸ்அப்பின் புதிய கருவி மூலம் தனிப்பயன் ஸ்டிக்கர்களை உருவாக்குவது எளிதாகிறது. இந்தப் புதிய கருவி மூலம் எந்தப் படத்தையும் நீங்கள் எடிட் செய்து, அதை எமோஜிகள் உடன் இணைத்து, டெக்ஸ்ட் உரைகளைச் சேர்த்து, ஸ்டிக்கர்களாக மாற்ற பயனர்களுக்கு இப்போது அனுமதி கிடைக்கிறது.

கம்யூனிட்டிஸ் (சமூகங்கள்)

கம்யூனிட்டிஸ் (சமூகங்கள்)

வாட்ஸ்அப் கம்யூனிட்டிஸ் என்ற அம்சம் அறிமுகம் செய்வதை குறியாக வைத்து செயல்படுகிறது. இந்த அம்சம் சமூகத்தில் உள்ள சிறிய குழுக்களின் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்கும். பகிரக்கூடிய இணைப்பு மூலமாக கம்யூனிட்டியில் இணைய பயனர்களை வாட்ஸ்அப்பில் சேர்க்கலாம். இந்த அம்சம் ஐஓஎஸ் அடிப்படையிலான செயலியில் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெசேஜ் ரியாக்ஷன்

மெசேஜ் ரியாக்ஷன்

இந்த அம்சமானது பெறப்படும் மெசேஜ்களுக்கு ஒவ்வொரு முறையும் டைப் செய்யாமல் இமோஜிகள் மூலம் பதிலளிக்க அனுமதிக்கும். மெட்டாவிற்கு சொந்தமான பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் போன்ற பிற தளங்களில் இந்த அம்சம் முன்னதாகவே கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Whatsapp Upcoming Features: Expect Whatsapp to launch five new features in 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X