வாட்ஸப் டூ ஸ்டெப் அத்தெண்டிகேஷன் இப்போது ஆண்ட்ராய்டு,ஐபோன்,விண்டோஸிலும்.!

வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது பயனாளர்களுக்காக இந்த முறையினை அறிமுகப்படுத்துகிறது.

By Ilamparidi
|

சமூக வலைத்தளங்களில் மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறவற்றில் வாட்ஸ் ஆப் செயலியானது குறிப்பிடத்தகுந்த ஒன்று.இது தனது பயனாளர்களின் கணக்குகளின் பாதுகாப்பை அதிகரிக்கவேண்டி டூ ஸ்டெப் அத்தெண்டிகேஷன் முறையினை அறிமுகப்படுத்துகிறது.

இன்றைக்கு பெரும்பாலான ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்களால் பயன்படுத்தப்படுகிற இந்த செயலியில் இம்முறை பாதுகாப்பு வழியினை அறிமுகப்படுத்துவதென்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

வாட்ஸ் ஆப்:

வாட்ஸ் ஆப்:

வாட்ஸ் அப்பானது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு ஜேன் கோம்,பிரையன் ஆக்டன் உள்ளிட்டோரால் நிறுவப்பட்ட சமூக வலைத்தளமாகும்.இதில் பயனாளர்களுக்காக வழங்கப்பட வசதிகளைக்கண்டு உலகம் முழுமைக்கும் அதிகப்படியான பயனாளர்கள் உள்ளனர்.மேலும் இந்த செயலியின் வருகைக்குப்பின் குறுஞ்செய்தி அனுப்புகிற முறையானது பெரிது குறைந்துபோனது.

வளர்ச்சி:

வளர்ச்சி:

ஏனெனில் இதன் வாயிலாக இணைய வசதி மட்டுமே கொண்டு அதிகப்படியான வீடியோ ஆடியோ மற்றும் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.மேலும் நண்பர்களுக்கென தனியான குழுக்கள் அமைத்து அதன் வாயிலாகவும் உரையாடுகிறது உள்ளிட்ட வசதிகளை இது பயனாளர்களுக்கு வழங்கியதின் விளைவே இன்றைக்கு இந்த செயலியின் அதிகப்படியான வளர்ச்சிக்கு காரணமாகும்.

முகநூல் கையகப்படுத்துதல்:

முகநூல் கையகப்படுத்துதல்:

இதன் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு முகநூல் நிறுவனத்தார் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து கையகப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2015ஆம் ஆண்டு இந்த செயலியை 90 கோடி அதாவது 900 மில்லியன் மக்கள் பயன்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டூ ஸ்டெப் அத்தெண்டிகேஷன்:

டூ ஸ்டெப் அத்தெண்டிகேஷன்:

கடந்த சில மாதங்களாகவே வாட்டஸ் அப் நிறுவனம் இம்முறையை தனது பயனாளர்களிடத்தில் ஓர் முன்னோட்டம் போலவே வழங்கிக்கொண்டிருந்தது.இப்போது இம்முறையினை ஆண்ட்ராய்டு ஐபோன் மற்றும் விண்டோஸ் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் செயல்படுத்தத் துவங்கியிருக்கிறது.

செயல்படுத்த:

செயல்படுத்த:

இந்த முறையானது கட்டாயமானதொன்றும் அல்ல.பயனாளர்கள் தங்களுக்கு தேவையெனில் உபயோகித்துக்கொள்ளலாம் செட்டிங்ஸ்>அக்கௌன்ட்>டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன்>எனேபிள் என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதன் மூலம் செயல்படுத்தலாம்.

இ-மெயில்:

இ-மெயில்:

மேலும் இம்முறையினை செயல்படுத்ததுவங்குகையில் உங்கள் மொபைல் என்னோடு 6 இலக்க கடவு எண் ஒன்றினை உருவாக்கிட வேண்டும்.மேலும் உங்கள் வாட்ஸாப் கணக்கினோடு இமெயில் ஒன்றினை இணைப்பதன் மூலம் எப்போதாவது உங்கள் கடவு என்னை மறந்தால் உங்கள் அக்கௌன்ட்டினை இந்த இ மெயில் வழியாக மீளவும் உபயோகிக்க துவங்கலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துகிறது ட்விட்டர்.!

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp Two-Step Verification Now Rolling Out to Android, iPhone, Windows Users.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X