வாட்ஸ்ஆப் பற்றிய இந்த 8 தகவல்கள் தெரியுமா உங்களுக்கு.?

சமீபத்தில் 8வது பிறந்தநாள் கண்ட முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்றான வாட்ஸ்ஆப் குறித்து நாம் அறிந்திடாத 8 தகவல்கள்.

By Ilamparidi
|

உலகு முழுமைக்கும் அதிகப்படியான பயனாளர்களைக் கொண்டிருக்கக்கூடிய முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான வாட்ஸ்ஆப் ஆனது குறுகிய காலத்தில் அதிகப்படியான பயனாளர்களையும் அவர்கள் வாயிலாக அதிகப்படியான வளர்ச்சியையும் அடைந்திட்ட நிறுவனமாகும்.இதற்கான காரணம் தனது வலைத்தளத்தின் வழியாக பயனாளர்களுக்கு வழங்கிய பல்வேறு அம்சங்களே ஆகும்.

புகைப்படம்,வீடியோ உள்ளிட்டவற்றை எளிதாக பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் விரைவாக தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுதல் உள்ளிட்ட வசதிகளினை இது தனது பயனாளர்களுக்காக வழங்குகிறது.மேலும்,இப்போது பல புதிய அம்சங்களையும் தனது பயனாளர்களுக்கு வழங்கத் துவங்கியிருக்கிறது.

இத்தகைய வாட்ஸ்ஆப் குறித்தது நாம் அறிந்திடாத தகவல்கள் கீழே.

1.2 பில்லியன் பயனாளர்கள்:

1.2 பில்லியன் பயனாளர்கள்:

கடந்த 2009 ஆம் ஆண்டு பிரையன் ஆக்டன்,ஜேன் கோம் ஆகிய இருவரால் நிறுவப்பட்டதே இந்த வாட்ஸ்ஆப் ஆகும்.அன்றைய காலக்கட்டத்தில் 55 பணியாளர்களைகளைக்கொண்டு துவக்கப்பட்டது இந்நிறுவனம் இப்போதைய கணக்கிட்டீன்படி 1.2 பில்லியன் ஆக்ட்டிவ் பயனாளர்களைக் கொண்டுள்ளது.மேலும் இதன் மெசேஜிங் ஆப்பினை ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.பில்லியன் அளவில் பயனாளர்களைக் கொண்டுள்ள சில சமூகவலைத்தளங்களில் இதுவும் ஒன்றாகும்.

50 பில்லியனுக்கும் அதிகமான மெசேஜ்கள்:

50 பில்லியனுக்கும் அதிகமான மெசேஜ்கள்:

நாள் ஒன்றுக்கு வாட்ஸ்ஆப் பயனாளர்கள் உலகு முழுவதும் 50 பில்லியனுக்கும் அதிகமான மெசேஜ்களை வாட்ஸ்ஆப் வழியாக பகிர்ந்துகொள்கின்றனர்.மேலும் புத்தாண்டின் மாலை வேளையில் இந்தியாவில் மட்டும் 14 பில்லியனுக்கும் அதிகமான மெசேஜ்கள் வாட்ஸ்ஆப் வழியாக பகிர்ந்துகொள்ளப்பட்டதாகவும்,அவற்றுள் 3.1 பில்லியன் இமேஜ்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

80 மில்லியன் கிப்ட்ஸ்:

80 மில்லியன் கிப்ட்ஸ்:

கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் முதல் இந்தியாவில் தனது பயனாளர்கள் கிபிட்ஸ்களை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினை வழங்கியது வாட்ஸ்ஆப்.அதுமுதல் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 80 மில்லியன் கிப்ட்ஸ்கள் வாட்ஸ்ஆப் பயனாளர்களால் பகிர்ந்துகொள்ளப்படுவதாகவும்,விழாக்காலங்களின் பொது இந்த எண்ணிக்கையானது அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

போட்டோஸ்:

போட்டோஸ்:

வாட்ஸ்ஆப் வழியாக உலகு முழுமைக்கும் நாள் ஒன்றினுக்கு 3.3 பில்லியன் புகைப்படங்கள் வாட்ஸ்ஆப் பயனாளர்களால் பகிர்ந்துகொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது.இது சென்ற ஆண்டினை விட இரண்டு மடங்கு ஆகும்.

வீடியோஸ்:

வீடியோஸ்:

முன்னணி சமூகவலைத்தளமான வாட்ஸ்ஆப் வழியாக நாள் ஒன்றுக்கு 760 மில்லியன் வீடியோக்கள் பகிர்ந்துகொள்ளப்படுவதாகவும்,முந்தைய காலங்களை விட இதன் அளவானது அதிகரித்துவருவதாகவும் வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

பயனாளர்கள்:

பயனாளர்கள்:

வாட்ஸ்ஆப் இந்தியாவில் 160 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளது.மேலும் பெரிய சந்தை மதிப்பினையும் இந்தியாவில் இது கொண்டுள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.எளிதாகவும் விரைவாகவும் தகவல்களை பகிர்ந்துகொள்ளலாம் என்பது இதன் பயனாளர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு முக்கியமான காரணமாகும்.

வீடியோ கால்:

வீடியோ கால்:

இப்போது எல்லா சமூகவலைத்தளங்களும் தனது பயனாளர்களுக்கு தனது வலைத்தளத்தின் வழியே இலவசமாக வீடியோ கால் மேற்கொள்கிற வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளன.இதனை காரணமாக பயனாளர்களுக்கு பொருட்செலவு குறையுமென்பது குறிப்பிடத்தக்கது.வாட்ஸ்ஆப் வழியாக 100 மில்லியன் வீடியோ கால்ஸ் நாள் ஒன்றினுக்கு மேற்கொள்ளப்படுகிறது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

வாய்ஸ் மெசேஜ்:

வாய்ஸ் மெசேஜ்:

வாட்ஸ் ஆப் வழியாக 200 மில்லியன் வாய்ஸ் மெசேஜ்கள் நாள் ஒன்றுக்கு அதன் பயனாளர்களால் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வாட்ஸ்ஆப்பில் ரீவேம்ப் அம்சம் - இனி உங்கள் ஸ்டைலே மாறும்.!

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp Turns 8: Here Are 8 Incredible WhatsApp Stats You Don't Know.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X