Home
News

WhatsApp கொண்டுவரும் புதிய அப்டேட்: இனி ஸ்டேட்டஸ் வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.!

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்துகிறது. அதாவது மற்ற ஆப்ஸ்களை விட வாட்ஸ்அப் தனிப்பட்ட தகவல் மற்றும் பயனர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. குறிப்பாக அவ்வப்போது புதிய புதிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

வாட்ஸ்அப் ரிப்போர்ட் அப்டேட்

இந்நிலையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் புதிய அம்சத்தைக் கொண்டுவர உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். அதாவது வாட்ஸ்அப் செயலியில் வைக்கப்படும் ஸ்டேடஸ்கள் இனி சென்சிடிவாக இருக்கும்பட்சத்தில் அதனை ரிப்போர்ட் செய்யும் விதமாக புதிய அப்டேட்டை கொண்டுவர உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

இனி WhatsApp ஸ்டேட்டஸ் வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.!

குறிப்பாக வாட்ஸ்அப் கொண்டு வரும் இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் மற்றவர்களால் வைக்கப்டும் ஸ்டேட்டஸ்கள் குறித்து ஆண்ட்ராய்டு பீட்டாவிடம் ரிப்போர்ட் செய்ய முடியும். குறிப்பாக இந்த புகாரானது நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் குழுவிற்கு அனுப்பப்பட்டுச் சரிபார்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் சேவை மற்றும் விதிமுறைகளை மீறக்கூடிய எந்தவொரு ஸ்டேட்டஸ்கள் குறித்து பயனர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும், குறிப்பாக உங்களைப் பற்றிய தகவல்கள் உங்களுக்குத் தெரியாமல் பகிரப்பட்டாலும் புகார் கொடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வாட்ஸ்அப் பீட்டா சோதனையாளர்கள் குழு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் குறித்து அளிக்கப்படும் ரிப்போர்ட்கள் பற்றி வேலை செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி WhatsApp ஸ்டேட்டஸ் வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் மட்டுமல்லாது மெசேஜ்கள், மீடியா, லொகேஷன் ஷேரிங், போன் அழைப்புகள் என அனைத்தும் எண்ட் டூ எண்ட் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் வாட்ஸ்அப், மெட்டா தவிர வேறு யாரும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட செய்திகளைப் படிக்கவோ, அவர்களின் தனிப்பட்ட அழைப்புகளை கேட்டகவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் ரிப்போர்ட் அப்டேட் ஆனது தற்போது பிளே ஸ்டோரில் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்த பிறகு சில பயனர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இந்த புதிய அப்டேட் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் புதிய ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அப்டேட் குறித்து வேலை செய்துவருவதாக வாட்ஸ்அப் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

இனி WhatsApp ஸ்டேட்டஸ் வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.!

வாட்ஸ்அப் குரூப் கால்

இதுதவிர வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் குரூப் கால் வசதியில் புதிய அம்சத்தைக் கொண்டுவர உள்ளது. அதாவது நமது நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் பேச முன்பே குறிப்பிட்ட நேரத்தை schedule செய்து வைத்து அனைவரையும் ஒரு சேர தொடர்பு கொண்டு பேசலாம். குறிப்பாக இது schedule group calls என்று கூறப்படுகிறது.

இந்த புதிய அம்சம் தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் வாட்ஸ்அப் செயலியில் உள்ள கால் பட்டன் கிளிக் செய்யும் போது Schedule Call பட்டன் வசதி கொடுக்கப்பட்டிருக்கும். இதில் சென்று எப்போது குரூப் கால் தொடங்க வேண்டும்? யார் எல்லாம் குரூப் காலில் இருக்க வேண்டும் என்று தேர்வு செய்து கொள்ளலாம்.

இனி WhatsApp ஸ்டேட்டஸ் வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.!

இதுதவிர கூடுதல் அம்சமாக குரூப் கால் வசதிக்குப் பெயர் வைத்துக் கொள்ளும்படி அப்டேட் வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அம்சங்கள் அனைத்தும் சோதனையில் உள்ளதாகவும், விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp to roll out Report Status Updates feature: What are the benefits? : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X