Home
News

பணம் கட்டினால் கிடைக்கும் ஸ்பெஷல் WhatsApp அம்சங்கள்.. FREE-ஆ யூஸ் பண்றவங்க நிலைமை இனி என்ன ஆகும்?

வாட்ஸ்அப் (WhatsApp) சேவையில் கூடிய விரைவில் சந்தா அடிப்படையிலான அம்சங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்களை அல்லது எக்ஸ்ட்ரா அம்சங்களை (Extra Features) அணுக விரும்பும் பயனர்கள் பணம் செலுத்துவதன் மூலம் அவைகளை அணுகலாம்.

WABetaInfo வழியாக வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, வாட்ஸ்அப் நிறுவனம் ஆனது கூடுதல் கட்டுப்பாடு (more control) மற்றும் தனிப்பயனாக்கத்தை (customisation) விரும்பும் பயனர்களை இலக்காக கொண்ட கூடுதல் அம்சங்களின் தொகுப்பை வழங்கும் ஒரு விருப்ப கட்டண சந்தாவில் (optional paid subscription) செயல்பட்டு வருகிறது.

பணம் கட்டினால் கிடைக்கும் ஸ்பெஷல் WhatsApp அம்சங்கள்?

சுவாரசியமாக இந்த எக்ஸ்ட்ரா அம்சங்கள் ஆனது மற்ற அனைத்து வாட்ஸ்அப் பயணர்களுக்கும் எதையும் மாற்றாமல், முற்றிலும் புதிய அம்சங்களை மட்டுமே கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த சந்தா அடிப்படையிலான அம்சங்கள் இன்னும் செயல்பாட்டில் மட்டுமே உள்ளன மற்றும் வாட்ஸ்அப் இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இப்போதைக்கு ​​வாட்ஸ்அப் நிறுவனம் பீட்டா கட்டமைப்புகள் மூலம் இந்த யோசனையை சோதித்து வருவதாக தெரிகிறது. சில பயனர்கள் வரவிருக்கும் திட்டத்திற்கான காத்திருப்பு பட்டியலையும் பார்க்கிறார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால், இது இலவச பதிப்பை ஒன்றும் செய்யாது; அதில் எந்த மாற்றங்களையும் கொண்டுவராது. அதாவது உங்களுக்கு ஏற்கனவே கிடைக்கும் எந்த அம்சங்களும் சந்தா திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படாது.

சரி பணம் செலுத்துவதன் மூலம் அப்படி என்ன ஸ்பெஷல் அம்சங்கள் கிடைக்கும்? இதுவரை வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், பிரீமியம் அம்சங்களின் ஆரம்ப தொகுப்பானது - முக்கிய செயல்பாட்டு மேம்படுத்தல்களை விட வசதி மற்றும் தனிப்பயனாக்கம் ஆகிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்தும்

இதன்கீழ் சேரும் சந்தாதாரர்களுக்கு - பிரத்தியேக ஸ்டிக்கர் பேக்குகள், புதிய தீம்கள் மற்றும் கூடுதல் சாட் ரிங்டோன்களுக்கான அணுகல்கள் வழங்கப்படலாம். கஸ்டம் அப் ஐகான் அம்சமும் செயல்பாட்டில் உள்ளது, இது பயனர்கள் தங்கள் ஹாம் ஸ்க்ரீனில் வாட்ஸ்அப் ஆப் ஆனது எவ்வாறு தோன்றும் என்பதை மாற்ற அனுமதிக்கும்.

மேலும், இந்த சந்தா திட்டத்தின் கீழ் விரிவாக்கப்பட்ட சாட் பின்னிங் (Chat Pinning) ஆதரவும் கிடைக்கலாம். வாட்ஸ்அப் தற்போது மூன்று சாட்களை மட்டுமே 'பின்' செய்ய அனுமதிக்கிறது. ஆனால் கட்டண திட்டத்தின் கீழ் இந்த கட்டுப்பாடு நீக்கப்படலாம் இது பிரீமியம் அம்சங்களின் First Wave என்று வாட்ஸ்அப் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக கருத்துகளின் அடிப்படையில் காலப்போக்கில் மேலும் பல அம்சங்கள் சேர்க்கப்படலாம்.

என்ன விலை? வாட்ஸ்அப் கொண்டுவரலாம் என்று கூறப்படும் இந்த சந்தா அடிப்படையிலான அம்சங்களின் விலை நிர்ணயம் குறித்து எந்த விவரங்களும் இல்லை. இதுகுறித்து வாட்ஸ்அப்பும் கூட எந்த விவரங்களையும் பகிரவில்லை. ஆனால் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இதன் விலை நாடு வாரியாக மாறுபடும் என்பதில் மட்டும் சந்தேகமே வேண்டாம்.

ஸ்பெஷல் அம்சங்களை உள்ளடக்கிய சந்தா சோதனையுடன் சேர்த்து வாட்ஸ்அப் நிறுவனம் தன மெசேஜிங் தளத்தில் இன்னும் பல அப்டேட்களையும் பரிசோதித்து வருகிறது. இதில் மெட்டா ஏஐ-க்கான (Meta AI) புதிய "சிந்தனை முறையும்" (Thinking mode) அடங்கும். இதோடு சேனல்களுக்கான தற்காலிக ஸ்டேட்டஸ்-ஸ்டைல் அப்டேட்கள் மற்றும் ஸ்பான்சர் செய்யப்பட்ட சேனல் போஸ்ட்களுக்கான தெளிவான கட்டண கூட்டாண்மை லேபிள்களும் சோதனையில் உள்ளன

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகள் எல்லாமே, பேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) உட்பட அதன் ஆப்களில் சந்தாக்களை ஆராயும் மெட்டாவின் முயற்சியுடன் ஒத்துப்போகிறது. பெரும்பாலான மக்களுக்கு, வாட்ஸ்அப்பின் இலவச பதிப்பு போதுமானதை விட அதிகமாக இருக்கும். ஆனால் ஆப்பில் இன்னும் அதிக நேரம் செலவழித்து கூடுதல் நெகிழ்வுத்தன்மையை விரும்பும் பயனர்களுக்கு, கட்டண திட்டம் தயாரானதும் ஒரு நியாயமான ஆட்-ஆன் ஆக மாறக்கூடும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp to offers extra features under optional paid subscription report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X