Home
News

மார்க்கு வகை வகையா இறக்குறானே.. Voice மற்றும் Video Call-ல் புதிய அம்சம்.. WhatsApp யூசர்கள் குஷி!

மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் (WhatsApp) தளத்தில் "அடுத்தடுத்து" சில சுவாரசியமான புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. முன்னதாக வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனில் - வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாதவர்கள் வாட்ஸ்அப் வழியாக மெசேஜ் அனுப்பும் வசதி வெளியானது. அதை தொடர்ந்து இப்போது வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களுக்கான ஒரு புதிய அம்சமும் வெளியாகி உள்ளது.

அது என்ன அம்சம்? வாட்ஸ்அப்பில் சோதனை செய்யப்படும் புதிய அம்சங்களை கண்டறிந்து அறிக்கைகளை வெளியிடுவதில் பிரபலமான WABetaInfo-வின் சமீபத்திய அறிக்கையின்படி, ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா ஆப்பின் 2.26.11.8 வெர்ஷனில் - வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களுக்கான பில்ட்-இன் நாய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம் (Built-in noise cancellation system) காணப்பட்டுள்ளது.

Voice மற்றும் Video Call-ல் புதிய அம்சம்.. WhatsApp யூசர்கள் குஷி!

WABetaInfo-வின்விளக்கத்தின் படி, இந்த அம்சம் - வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களின் போது போக்குவரத்து இரைச்சல், காற்று அல்லது சுற்றியுள்ள பேச்சு போன்ற தேவையற்ற பின்னணி ஒலிகளை தானாகவே பில்டர் செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பயனரின் குரலை நிகழ்நேரத்தில் தனிமைப்படுத்துவதன் மூலம் தெளிவையும் மேம்படுத்துவதாகவும், இரைச்சலான சூழல்களிலும் கூட உரையாடல்கள் அதிக போகஸ் உடன் இருப்பதை உறுதி செய்வதாகவும் கூறப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் ஆனது, ஒரு காலின் போது டீபால்ட் ஆகவே செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த அம்சம் ஆக்டிவ் ஆக உள்ளது என்பதை குறிக்கும் ஒரு அறிவிப்பையும் பயனர்கள் ஸ்க்ரீனில் காண்பார்கள். தானாகவே செயல்படுத்தப்பட்டாலும், இந்த அம்சம் விருப்பத்தேர்வாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தேவைப்பட்டால் ஒரு காலின் போது, அதன் வழியாக கிடைக்கும் மெனுவிலிருந்து இதை ஆப் செய்யவும் முடியும்.

இந்த அம்சம், ஆடியோவை என்க்ரிப்ட் செய்து அனுப்புவதற்கு முன்பு, டிவைஸிலேயே ஆடியோவை லோக்கல் ஆக ப்ராசஸ் செய்யும் என்றும் WABetaInfo-வின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம், வாட்ஸ்அப்பின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதிக்கப்படாமல் இருக்கலாம், மேலும் வாய்ஸ் பில்டர் செயல்முறை ஆனது வெளிப்புற சர்வர்களில் நடைபெறாமல், மைக்ரோஃபோன் மட்டத்திலேயே நடைபெறும்.

இந்த அம்சம் இன்னும் உருவாக்கத்தில் இருப்பதால், இது எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. எதிர்கால அப்டேட்டில் பரவலாக வெளியிடுவதற்கு முன்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனர்களுடன் இது சோதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீட்டா அம்சங்கள் பொதுவாக படிப்படியான வெளியீட்டு செயல்முறையை பின்பற்றும். அதாவது இது எடுத்த வேகத்திலேயே எல்லா பயனர்களுக்கும் உடனடியாக கிடைக்காமல் போகலாம்.

வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கு கூட வாட்ஸ்அப் வழியாக மெசேஜ் அனுப்ப அனுமதிக்கும் அம்சம்: இது கெஸ்ட் சாட்ஸ் (Guest Chats) என அழைக்கப்படுகிறது. இந்த அம்சம் - வாட்ஸ்அப்பில் இல்லாத பயனர்கள், ஒரு பாதுகாப்பான வெப் லிங்க் (Secure web link) வழியாக சாட்டில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இதன் மூலம் வாட்ஸ்அப் வழியாக சாட் செய்ய ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டிய அவசியம் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய கெஸ்ட் சாட்கள் ஒரு என்க்ரிப்ஷன் கீயை (encryption key) உருவாக்குவதற்கான தனித்துவமான அடையாளங்காட்டியை (Unique identifier) பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இது வாட்ஸ்அப் தளத்தில் நடக்கும் சாதாரண உரையாடல்களுக்கு பயன்படுத்தும் அதே எண்ட்-டு-எண்ட் குறியாக்கத்தை (End-to-end encryption) செயல்படுத்துகிறது.

WABetaInfo-வின் சமீபத்திய அறிக்கையானது, இந்த புதிய அம்சம் (கெஸ்ட் சாட்) பல ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்கு அணுக கிடைப்பதாகவும், இது அந்தந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம்களுக்கான லேட்டஸ்ட் வாட்ஸ்அப் பீட்டா அப்டேட் (Latest WhatsApp Beta Update) உடன் கிடைப்பதாகவும் கூறுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp to launch Built in noise cancellation feature to improve voice and video calls quality
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X