வாட்ஸ்அப் இல் கிரிப்டோகரன்சி அனுப்ப புது அம்சமா? யாருக்கெல்லாம் இது பயன்படுத்தக் கிடைக்கும்?

|

வாட்ஸ்அப் பயன்பாட்டை உலகம் முழுக்க சுமார் 2 பில்லியன் அளவிற்கும் மேலான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சிறப்பான மொபைல் பயன்பாட்டு ஆப்ஸில் ஏராளமான அம்சங்கள் இருக்கிறது. இருப்பினும் வாட்ஸ்அப் நிறுவனம் இன்னும் தொடர்ந்து பல புதிய அம்சங்களைத் தொடர்ந்து சோதனை செய்து, அதை அதன் வாட்ஸ்அப் பயனர்களுக்காக மேம்படுத்தி அறிமுகம் செய்துகொண்டே தான் இருக்கிறது. வாட்ஸ்அப் பயனர்களின் அனுபவத்தை மேன்மேலும் மேம்படுத்த மெட்டா நிறுவனம் தொடர்ந்து பல விஷயங்களைச் செய்துகொண்டிருக்கிறது.

வாட்ஸ்அப் இல் கிரிப்டோகரன்சி அனுப்ப புது அம்சமா?

வாட்ஸ்அப் இல் கிரிப்டோகரன்சி அனுப்ப புது அம்சமா?

சமீபத்திய அறிக்கையின்படி, வாட்ஸ்அப் அதன் பயனர்களை கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் அரட்டைகளுக்குள் பணப் பரிமாற்றம் செய்ய விரைவில் அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. சமூக செய்தி தளமான வாட்ஸ்அப், தற்போது அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுடன் இந்த புதிய கட்டண அம்சத்தில் வேலை செய்து வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்திய அறிக்கைகளின் படி,இந்த புதிய அம்சம் சில வாரங்களுக்கு முன்பு தளத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Novi உடன் கூட்டுச் சேர்ந்துள்ள WhatsApp

Novi உடன் கூட்டுச் சேர்ந்துள்ள WhatsApp

அமெரிக்காவில் உள்ள தனது பயனர்களுக்கு இந்த கட்டண அம்சத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த, WhatsApp ஆனது டிஜிட்டல் வாலட் செயலியான Novi உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. வாட்ஸ்அப் தனது பயனர் சேவையை மேலும் மேம்படுத்த ஏராளமான முயற்சிகளை இடைவிடாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. Paxos Trust Money மூலம் உருவாக்கப்பட்ட பயனர்களால் Pax Dollars (USDP) பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

DOT திடீர் அதிரடி அறிவிப்பு: உங்ககிட்ட எத்தனை சிம் உள்ளது.. இதற்கு மேல் 'சிம்' இருந்தால் இணைப்பு துண்டிப்பு..DOT திடீர் அதிரடி அறிவிப்பு: உங்ககிட்ட எத்தனை சிம் உள்ளது.. இதற்கு மேல் 'சிம்' இருந்தால் இணைப்பு துண்டிப்பு..

இந்த அம்சம் எப்படி செயல்படுகிறது? இதை வாட்ஸ்அப் பயனர்கள் எவ்வாறு பயன்படுத்துவது?

இந்த அம்சம் எப்படி செயல்படுகிறது? இதை வாட்ஸ்அப் பயனர்கள் எவ்வாறு பயன்படுத்துவது?

Novi இன் CEO, Stephane Kraisel சமீபத்திய ட்வீட்டில், WhatsApp இல் உள்ள புதிய Novi அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் இப்போது WhatsApp அரட்டையில் பாதுகாப்பாகவும் தன்னிச்சையாகவும் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும் என்று கூறியுள்ளது. டிஜிட்டல் வாலட்டை முயற்சிக்க புதிய வழி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நோவி மூலம் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பவும் பெறவும் முடியும் என்றும் அவர் கூறினார்.

வாட்ஸ்ஆப் இல் இருந்து பணம் அனுப்புவது எப்படி? எளிய வழிமுறை இதோ

வாட்ஸ்ஆப் இல் இருந்து பணம் அனுப்புவது எப்படி? எளிய வழிமுறை இதோ

இது ஒரு செய்தியை அனுப்புவது போல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குப் பணம் அனுப்புவதை எளிதாக்கும். வாட்ஸ்அப்பில் நோவி மூலம் பணத்தை அனுப்ப, பயனர்கள் மிக எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முதலில், அவர்கள் பணத்தை அனுப்ப விரும்பும் தொடர்பின் அரட்டையைத் திறக்க வேண்டும். ஆண்ட்ராய்டு பயனர்கள், உரையாடல் பெட்டியில் கிடைக்கும் அட்டாச் ஐகானைத் தட்ட வேண்டும், ஐபோன் பயனர்கள் சாட்பாக்ஸில் உள்ள பிளஸ் ஐகானைத் தட்ட வேண்டும்.

PF விதி மாற்றம்: உங்கள் EPF கணக்கில் கிடைக்கும் ரூ. 7 லட்சம் இலவச பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?PF விதி மாற்றம்: உங்கள் EPF கணக்கில் கிடைக்கும் ரூ. 7 லட்சம் இலவச பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கட்டண விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்

கட்டண விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்

பின்னர் பயனர்கள் கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கடைசியாக, கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​​​பயனர்கள் தாங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடுவதற்கான விருப்பத்துடன் கேட்கப்படுவார்கள். எந்தவொரு பரிவர்த்தனை தொகைக்கும் வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்குக் கட்டணம் வசூலிக்காது என்றும் நோவி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயனர்கள் எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும், அடிக்கடி கூட பணத்தை அனுப்பலாம். இதற்கு வரம்பு கிடையாது.

வாட்ஸ்அப் கட்டண முறை பாதுகாப்பானதா? வாட்ஸ்அப் என்ன சொல்கிறது?

வாட்ஸ்அப் கட்டண முறை பாதுகாப்பானதா? வாட்ஸ்அப் என்ன சொல்கிறது?

பயனர் தரவு பாதுகாக்கப்படுவதையும், அரட்டைகள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படுவதால் தனியுரிமை அமைப்புகள் பாதிக்கப்பட்டது என்பதையும் Novi உறுதி செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, WhatsApp Payments அம்சம் இந்தியா மற்றும் பிரேசிலில் மட்டுமே பயன்படுத்தக் கிடைக்கிறது. மேலும் இந்த அம்சத்தைக் கொண்ட மூன்றாவது நாடாக அமெரிக்கா மாறும். இருப்பினும், இந்தியா அல்லது பிரேசிலில் உள்ள பயனர்கள் அமெரிக்காவில் உள்ள பயனர்களைப் போல கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி பணம் அனுப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp to Introduce a Feature Which Will Allow Cryptocurrency Transactions : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X