நீங்க என்ன பெரிய 'புலி'யா..?

By Meganathan
|

வாட்ஸ்ஆப்பில் 'நாங்க தான் புலி' என்பவர்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆமாங்க உலகத்துல ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் பயன்படுத்தி வரும் குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்ஆப்பில் பலருக்கும் அவைகளில் இருக்கும் அனைத்து வித்தைகளும் தெரிந்திருக்கும் நிலையில், யாருக்கும் தெரிந்திராத சில மந்திரங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

இப்போதைக்கு வாட்ஸ்ஆப்பில் ''வாட்ஸ்ஆப்..!?'' என்று கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்....

ப்ரோஃபைல் போட்டோ

ப்ரோஃபைல் போட்டோ

உங்களது ப்ரோஃபைல் புகைப்படங்களை டெஸ்க்டாப் மூலம் மாற்ற வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்தலாம். இங்கு லாப்டாப் கேமரா அல்லது வெப் கேமரா மூலம் உங்களை புகைப்படம் எடுத்து கொள்ள முடியும்.

ப்ராட்காஸ்ட் மெசேஜ்

ப்ராட்காஸ்ட் மெசேஜ்

ஒரு குருந்தகவலை பலருக்கு அனுப்ப மெனு -- நியு ப்ராட்காஸ்ட் சென்று உங்களுக்கு தேவையான அனைத்து காண்டாக்ட்களையும் க்ளிக் செய்து குறுந்தகவல் அனுப்பலாம்.

லொகேஷன்

லொகேஷன்

வாட்ஸ்ஆப் செயலியில் நீங்கள் இருக்கும் முகவரியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும், இதை செய்ய சென்டு லொகேஷன் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

க்ரூப் சாட்

க்ரூப் சாட்

க்ரூப் சாட் நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்ய க்ரூப் சாட் ஆப்ஷனில் மெனு பட்டன் சென்று ம்யூட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

யார் படித்தது

யார் படித்தது

க்ரூப் சாட்டில் நீங்கள் அனுப்பிய குறுந்தகவலை யார் படித்தது என்பதை அறிந்து கொள்ள நீங்கள் அனுப்பிய குறுந்தகவலை அழுத்தி பிடித்தால் போதுமானது.

ப்ரோஃபைல் போட்டோ

ப்ரோஃபைல் போட்டோ

உங்க நண்பரின் ப்ரோஃபைல் போட்டோவை வாட்ஸ் ஆப்பில் மாற்ற முடியும், ஆனால் அது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதை செய்ய பிடித்தமான போட்டோவை 561*561 அளவில் எடுத்து அதில் உங்க நண்பர் எண்ணை பதிவு செய்து மெமரி கார்டு -- வாட்ஸ் ஆப் -- ப்ரோஃபைல் போட்டோ சென்று ஏற்கனவே இருக்கும் போட்டோவை ரீ ப்ளேஸ் செய்தால் வேலை முடிந்தது.

ஃபைல்

ஃபைல்

போட்டோ மற்றும் பைல்களை பறிமாறி கொள்ள, க்ளவுட்சென்ட் மற்றும் ட்ராப் பாக்ஸ் செயலிகளை பதிவிறக்கம் செய்து, க்ளவுட்சென்ட் மூலம் ட்ராப் பாக்ஸை இனைத்து தேவையான பைல்களை லின்க் செய்து அனுப்பலாம்.

இரு அக்கவுண்டு

இரு அக்கவுண்டு

டூயல் சிம் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் இரு வாட்ஸ் அப் அக்கவுன்டகளை பயன்படுத்தஸ்விட்ச்மீ என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.

குறுந்தகவல்

குறுந்தகவல்

தவறுதலாக டெலீட் செய்த குறுந்தகவல்களை மீட்க உங்களது எஸ்டி கார்டுக்கு சென்று வாட்ஸ் ஆப் - டேட்டாபேஸ் சென்று தவறுதலாக டெலீட் செய்த அனைத்து குறுந்தகவல்களையும் மீட்க முடியும்.

குரல் நோட்டிபிகேஷன்

குரல் நோட்டிபிகேஷன்

வாட்ஸ் ஆப் நோட்டிப்பிக்கேஷன்களை குரல் வடிவில் பெற வாய்ஸ் ஃபார் மோட்டிபிக்கேஷன் மற்றும் டெக்ஸ்ட் டூ ஸ்பீச் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின் செட்டிங்ஸ் - அசெஸ்சபிலிட்டி சென்று வாய்ஸ் நோட்டிபிக்கேஷனை ஆன் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Following are some WhatsApp Tips and Tricks Everyone Should Know. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X