Home
News

Photo-க்கும் Video-க்கும் நடுவுல நிற்கும்.. WhatsApp-ல் அறிமுகமான புதிய Video Note Mode.. என்ன யூஸ்?

கொஞ்சம் கூட கேப்பு விடாமல்.. தொடர்ச்சியான முறையில் புதுப்புது அம்சங்களாக / அப்டேட்களாக அறிமுகம் செய்து வந்த வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம், கடந்த 2 வாரங்களாக சைலன்ட்மோட்டிற்கு சென்றது. தற்போது இந்நிறுவனம் வீடியோ நோட் மோட் (Video Note Mode) என்கிற புதிய அம்சத்துடன் மீண்டும் ஆக்டிவ் மோட்டிற்கு வந்துள்ளது. வீடியோ நோட் மோட் என்றால் என்ன? இந்த அம்சம் எங்கே அணுக கிடைக்கும்? இதனால் என்ன பயன்? தற்போது வரையிலாக இது யாருக்கெல்லாம் அணுக கிடைக்கிறது?இதோ விவரங்கள்:

வாட்ஸ்அப்பின் புதிய அம்சங்களை பற்றி துல்லியமான அறிக்கைகளை வெளியிடுவதற்கு பெயர்போன டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படின்படி, வாட்ஸ்அப் நிறுவனமானது அதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (Android and iOS) இயங்குதளங்களில், கேமராவிற்கான ஒரு புதிய மற்றும் பிரத்யேகமான - வீடியோ நோட் மோட் என்கிற அம்சத்தை சோதித்து வருகிறது.

WhatsApp-ல் அறிமுகமான புதிய Video Note Mode.. என்ன யூஸ்?

இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்கள் கேமரா இன்டர்பேஸில் இருந்து நேரடியாக வீடியோ நோட்களை ரெக்கார்ட் செய்து ஷேர் செய்ய அனுமதிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் இது வீடியோ நோட்களுக்கான புதிய ஷார்ட்கட் பட்டனை உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோவின் கூற்றுப்படி, வீடியோ நோட்களை பதிவு செய்வதற்கான இந்த பிரத்யேக மோட் ஆனது வாட்ஸ்அப் கேமரா இன்டர்பேஸில் ஏற்கனவே உள்ள வீடியோ மற்றும் போட்டோ ஆப்ஷன்களுக்கு இடையே தோன்றக்கூடும்.
தற்போது வரையிலாக இந்த புதிய வீடியோ நோட் மோட் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான பீட்டர் வெர்ஷனில் காணப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பயனர்கள், கூகுள் பிளே பீட்டா புரோகிராமின் கீழ் கிடைக்கும் வாட்ஸ்அப்பின் 2.24.14.14 வெர்ஷனின் கீழ் இந்த புதிய வீடியோ நோட் மோட் அம்சத்தை அணுகலாம். ஐஓஎஸ் பயனர்கள் ஐஓஎஸ் 24.13.10.76 வெர்ஷனில் இதை பார்க்கலாம். அதாவது இது டெஸ்ட்பிளைட் (TestFlight) திட்டத்தின் கீழ் கிடைக்கும்.

முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்டில் போட்டோ குவாலிட்டி தொடர்பான ஒரு முக்கியமான அம்சமும் சேர்க்கப்பட்டு இருந்தது. அது வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-ல் உள்ள மீடியா அப்லோட் குவாலிட்டி ஆப்ஷனில் (Media Upload Quality Option) எச்டி குவாலிட்டி (HD Quality) என்கிற ஆப்ஷனே ஆகும்.

இதுவொரு டீபால்ட் (Default) அம்சம் ஆகும். அதாவது இந்த விருப்பத்தை ஒருமுறை தேர்வு செய்துவிட்டால், ஒவ்வொரு முறையும் வாட்ஸ்அப் வழியாக போட்டோக்களை அனுப்பும் போது எச்டி என்கிற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. மாறாக நீங்கள் அனுப்பும் எல்லா போட்டோக்களுமே டீபால்ட் ஆகவே எச்டி தரத்தின் கீழ் அனுப்பப்படும்.

இதற்கு முன்னதாக வாட்ஸ்அப்பிற்கு 3 புதிய க்ரூப் கால் மற்றும் வீடியோ கால் அம்சங்கள் வரும் என்பதையும் வாட்ஸ்அப் உறுதிப்படுத்தி இருந்தது. இதன் கீழ் ஆடியோவுடன் ஸ்கிரீன் ஷேரிங் (Video Sharing With Audio), வீடியோ காலில் அதிக பங்கேற்பாளர்களை (More Participants in a Video Call) சேர்க்கும் ஆதரவு மற்றும் ஸ்பீக்கர் ஸ்பாட்லைட் (Speaker Spotlight) போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன.

இதேபோல வாய்ஸ் நோட்களை (Voice Notes) அப்படியே டெக்ஸ்ட் (Text) ஆக மாற்ற அனுமதிக்கும் புதிய அம்சத்தையும் கூட வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம் வாய்ஸ் மெசேஜ்களை கேட்பதை விட அதை டெக்ஸ்ட் ஆக படிக்க விரும்பும் பயனர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும். வாட்ஸ்அப்பின் இந்த புதிய வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சமானது ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், போர்த்துகீசியம் (பிரேசில்) மற்றும் இந்தி என மொத்தம் 5 மொழிகளில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Testing New Video Note Mode Feature in Both Androis and iOS How it Works What is the Use
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X