Home
News

அடிச்சான் பாரு மார்க்.. WhatsApp-க்கு வந்த புதிய Shortcut.. இப்படி ஒரு ஆப்ஷனுக்கு தானே வெயிட் பண்ணோம்!

WhatsApp New Shortcut: இப்படி ஒரு ஷார்ட்கட்டுக்கு தானே அம்புட்டு ஆண்ட்ராய்டு யூசர்களும் காத்திருந்தோம் என்று கூறும்படியான ஒரு புதிய அம்சம் வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ளது. அது "மார்க் ஆல் சாட்ஸ் அஸ் ரீட் அட் ஒன்ஸ்" (Mark All Chats As Read At Once) என்கிற ஆப்ஷனுக்கான ஷார்ட்கட் ஆகும். இந்த புதிய ஷார்ட்கட்டின் பயன் என்ன? இது எப்படி வேலை செய்யும்? வாட்ஸ்அப்பில் இந்த ஷார்ட்கட்டை அணுகுவது எப்படி? தற்போது இது வாட்ஸ்அப்பின் எந்த வெர்ஷனில் அணுக கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

வாட்ஸ்அப் குறித்த மிகவும் நம்பகமான தகவல்களை வழங்கும் 'சோர்ஸ்' ஆன டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, வாட்ஸ்அப் ஒரு புதிய ஷார்ட்கட்டை சோதனை செய்து வருகிறது. இதன் மூலம் அனைத்து சாட்களிலும் உள்ள மெசேஜ்களையும் ஒரே நேரத்தில்
படித்ததாக 'மார்க்' முடியும்.

அடிச்சான் பாரு மார்க்.. WhatsApp-க்கு வந்த புதிய Shortcut!

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ பகிர்ந்துள்ள ஸ்க்ரீன்ஷாட் வழியாக, இந்த புதிய ஷார்ட்கட் ஓவர்ஃப்ளோ மெனுவில் தோன்றும். இதை ஸ்டார் மெசேஜஸ் விருப்பத்திற்கு கீழே, ஸ்க்ரீனின் மேல் வலது மூலையில் அணுகலாம். அனைத்து மெசேஜ்களையும் படித்ததாக குறிக்கும் விருப்பம் ஏற்கனவே ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப்பில் உள்ள நிலையில், அதற்கு பல படிகள் தேவைப்படும் காரணத்தினால்.. அதை விரைவாக அணுகவே இந்த ஷார்ட்கட் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சம் ஐஓஎஸ் வெர்ஷனில் உள்ள 'மார்க் ரீட்' அம்சத்தை போலவே செயல்படும் என்று ஊகிக்கப்படுகிறது. ஐஓஎஸ்-ல் உள்ள அம்சமானது, வாட்ஸ்அப் மெசேஜ்களை அன்ரீட் என்பதில் இருந்து ரீட் என்கிற ஸ்டேட்டஸ்-க்கு மாற்றுகிறது. ஆண்ட்ராய்டுக்கு வரும் புதிய ஷார்ட்கட்டும் கூட இதேபோலத்தான் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வரை இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனில் காணப்பட்டுள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால்.. இது ஆண்ட்ராய்டு பதிப்பு 2.24.18.11 க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் அணுக கிடைக்கிறது. அதாவது இந்த புதிய அம்சம், தற்போதைக்கு அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்காது என்றாலும் கூட, விரைவில் அனைவர்க்கும் வந்து சேரும்.

இது கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் மூலம் தங்களை பதிவுசெய்த பீட்டா டெஸ்டர் டெஸ்டர்களுக்கு கூட கிடைக்காமல் போகலாம். இந்த புதிய ஷார்ட்கட் எதிர்கால அப்டேட் வழியாக அறிமுகப்படுத்தப்படலாம். இருப்பினும், பீட்டா வெர்ஷன்கள் வழியாக டெவலப்பர்கள் பல வகையான அம்சங்களை சோதிப்பதும், அவைகளில் சில மட்டுமே பப்ளிக் ரோல்அவுட் ஸ்டேஜ்- க்கு வரும் என்பதை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஷார்ட்கட் என்று பேசும்போது கூகுள் நிறுவனம் அதன் ஜெமினி ஏஐ சாட் பாட்-ஐ இன்னும் எளிமையான முறையில் அணுகக்கூடியதாக இருக்க உதவும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். அது சாட் வித் ஜெமினி என்கிற ஷார்ட்கட் (Chat with Gemini shortcut) ஆகும்.

முன்னதாக, நீங்கள் ஜெமினி ஏஐ-ஐ பயன்படுத்த விரும்பினால், ஜெமினி ஏஐ-க்கான பிரத்யேக ஆப் அல்லது இணையதளத்தை அணுக வேண்டி இருக்கும். ஆனால் இனிமேல் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் க்ரோம் சேர்ச் பார் வழியாக ஜெமினி ஏஐ-ஐ நேரடியாக அணுக முடியும். இதற்காக கூகுள் நிறுவனம் அதன் ஜெமினி ஏஐ-ஐ க்ரோம் சேர்ச் பார் உடன் ஒருங்கிணைத்துள்ளது.

அதாவது இப்போது ஜெமினி ஏஐ-ஐ அணுக உங்களுக்கு தனி ஆப் அல்லது பிரத்யேக வெப் பேஜ் தேவையில்லை. வெறுமனே கூகுள் க்ரோம் சேர்ச் பாரில் "@" என்று டைப் செய்யவும். உடனே கீழ்தோன்றும் மெனுவிலில்.. முதலாவதாகவே @gemini - Chat with Gemini என்கிற விருப்பம் இடம்பெறும். அதை தேர்வு செய்து ஜெமினி ஏஐ-யிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை (அதே சேர்ச் பாரில்) டைப் செய்யவும். அவ்வளவு தான்!

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Testing New Shortcut To Mark All Chats As Read At Once For Android Users Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X