இனி இதுவுமா?- தேவையில்லாத நபர்களிடம் இருந்து அதையும் மறைக்கலாம்., வாட்ஸ்அப்பில் அட்டகாச புது அம்சம்!

|

WABetaInfo அறிக்கையின்படி மெட்டாவுக்கு சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் குறிப்பிட்ட தொடர்புகளுக்கு கடைசியாக பார்த்த (லாஸ்ட் சீன்) நிலையை மறைக்கக்கூடிய வசதியை செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் தேவை மற்றும் அவர்களின் பாதுகாப்பு

பயனர்களின் தேவை மற்றும் அவர்களின் பாதுகாப்பு

வாட்ஸ்அப் நிறுவனம் சமீப காலமாக பல்வேறு அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. ஒவ்வொரு அப்டேட்டிலும் பல அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. பயனர்களின் தேவை மற்றும் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. WABetaInfo அறிக்கையின்படி மெட்டாவுக்கு சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் குறிப்பிட்ட தொடர்புகளுக்கு கடைசியாக பார்த்த (லாஸ்ட் சீன்) நிலையை மறைக்கக்கூடிய வசதியை செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா வெளியீட்டில் ஐஓஎ்ஸ பயனர்களுக்கு என இந்த அம்சம் சோதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் லாஸ்ட் சீன் வசதி

வாட்ஸ்அப் லாஸ்ட் சீன் வசதி

வாட்ஸ்அப் லாஸ்ட் சீன் என்பது நாம் எப்போது கடைசியாக வாட்ஸ்அப் பயன்பாட்டை அனுகினோம் என்பதை பிறருக்கு காண்பிக்க பயன்படும் அம்சமாகும். இந்த அம்சம் இதுநாள் வரை ஒன்று அனைவருக்கும் காண்பிக்கும்படியாகவும் அல்லது யாருக்கும் காண்பிக்கும்படியாகவும் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே காண்பிக்கும் வகையிலும் தேவையில்லாத பயனர்களிடம் இருந்து லாஸ்ட் சீன் அம்சத்தை மறைக்கும் படியாகவும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருக்கிறது.

வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு சோதனை

வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு சோதனை

இந்த அம்சமானது தற்போது ஐஓஎஸ் 22.9.0.70 பயன்படுத்தும் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வசதி விரைவில் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த வசதியை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம். வாட்ஸ்அப் பயன்பாட்டை ஓபன் செய்து செட்டிங்க்ஸ் என்ற தேர்வுக்குள் சென்று பிரைவேசி என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் இந்நாள் வரை Everyone, My Contacts மற்றும் Nobody என்ற விருப்பம் மட்டுமே காண்பிக்கப்பட்டது. இனி வரும் நாட்களில் இதில் My Contacts Except என்ற தேர்வு காண்பிக்கப்படும், இதில் யாருக்கெல்லாம் லாஸ்ட் சீன் காட்ட வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கலாம்.

எப்படி செயல்படுத்துவது?

எப்படி செயல்படுத்துவது?

பிரைவசி என்ற தேர்வுக்குள் இந்த வசதி இருக்கிறது. இதில் கடைசியாக பார்த்தது (லாஸ்ட் சீன்) என்ற விருப்பத்துக்குள் சென்று இந்த வசதியை தேர்ந்தெடுக்கலாம். லாஸ்ட் சீன் பயன்பாடு போன்றே புரொஃபைல் இமேஜ், about மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆகியவற்றையும் குறிப்பிட்ட சிலரை மட்டுமே காணும் வகையில் இந்த அப்டேட் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்து போகும் மெசேஜ் அம்சம்

மறைந்து போகும் மெசேஜ் அம்சம்

அதேபோல் மறைந்து போகும் மெசேஜை நீங்கள் அனுப்பும் போது, அந்த மெசேஜ் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருக்காது. வாட்ஸ்அப் தற்போது புதிய சோதனையில் ஈடுபட்டிருக்கிறது. அது காணாமல் போகும் செய்தியை தக்க வைக்கும் அம்சமாகும். மறைந்து வரும் மெசேஜ் அம்சத்தை பயனுள்ளதாக மாற்றும் புதிய வழிகளை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது. மெசேஜிங் செயலி மறைந்து வரும் மெசேஜ்களை வைத்திருக்கும் திறனை சோதித்து வருகிறது. வாட்ஸ்அப் அம்சம் இந்த வளர்ச்சியில் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.

காணாமல் போகும் மெசேஜை வைத்திருங்கள் என்ற விருப்பம்

காணாமல் போகும் மெசேஜை வைத்திருங்கள் என்ற விருப்பம்

டிஸ்அப்பியரிங் அதாவது மறைந்து வரும் மெசேஜ்களை பயனுள்ளதாக மாற்றும் புதிய வழிமுறைகளை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது. மறைந்து போகும் செய்திகளை நீங்கள் அனுப்பும் போது அந்த மெசேஜ் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட சமயங்களில் நீங்கள் அனுப்பப்பட்டிருக்கும் அம்சம் இயக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நீங்கள் அனுப்பும் மெசேஜ் மறைந்துவிடும். இதை தவிர்ககும் விதமாக வாட்ஸ்அப்பில் விரைவில் அறிவிக்கப்படும் இந்த அம்சமானது "காணாமல் போகும் மெசேஜை வைத்திருங்கள்" என அழைக்கப்படும் அம்சம் ஆகும்.

வாட்ஸ்அப் POLL அம்சம்

வாட்ஸ்அப் POLL அம்சம்

அதேபோல் வாட்ஸ்அப் மற்றொரு அம்சத்திலும் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை வெளியிட தயாராகி வருகிறது. வாட்ஸ்அப் புதிய போல் (POLL) அம்சத்தை கொண்டுவர இருக்கிறது. இந்த அம்சம் சோதனையில் இருக்கிறது. WABetaInfo தளத்தின் தகவலும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த அம்சமானது ஐஓஎஸ் பயனர்களுக்கு முதற்கட்டாக அறிமுகப்டுத்தப்பட இருக்கிறது. இந்த அம்சமானது v2.22.6.70 என்ற பீட்டா பதிப்பு எண் உடன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Whatsapp Testing New Privacy Option: Hide Last Seen Status From Specific Contacts

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X