Home
News

படிக்கப்படாத மெசேஜ்களை ஃபில்டர் செய்யலாம்: வாட்ஸ்அப் சோதனை செய்யும் புது அம்சம்!

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா பதிப்பில் படிக்காத சேட்டிங் ஃபில்டர் எனற் புதிய அம்சத்தில் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது. 2.2221.1 பதிப்பில் வாட்ஸ்அப் சோதனை செய்து வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த புதிய அம்சமானது "படிக்காத செய்திகளை வரிசைப்படுத்தி படிக்க அனுமதிக்கும்" என தெரிவிக்கப்படுகிறது.

புதுப்புது அம்சங்கள் அறிமுகம்

புதுப்புது அம்சங்கள் அறிமுகம்

வாட்ஸ்அப் பயன்பாட்டில் பயனர்களின் தேவையறிந்து தொடர்ந்து புதுப்புது அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் தளத்தில் அறிமுகம் செய்யப்படும் அம்சங்கள் முதற்கட்டமாக அதன் பீட்டா பதிப்பில் சோதிக்கப்படும். இதன்மூலம் அம்சங்களில் குறைநிறைகள் கண்டறியப்பட்டு மேம்படுத்தி அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்படும். அதன்படி தற்போது வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் புது அம்சம் ஒன்று சோதனை செய்வது கண்டறியப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா பதிப்பில் படிக்கப்படாத மெசேஜ் ஃபில்டர் அம்சத்தை சோதனை செய்வது கண்டறியப்பட்டு இருக்கிறது.

ஃபில்டர் அம்சம் இடம்பெறும்

ஃபில்டர் அம்சம் இடம்பெறும்

புதிய அம்சமானது பயனர்கள் படிக்காத மெசேஜ்களை ஒரு வரிசையில் படிக்க அனுமதிக்கும் என கூறப்படுகிறது. தேடல் (Search) அம்சத்துக்கு அடுத்ததாக இந்த ஃபில்டர் அம்சம் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதுகுறித்த XDA டெவலப்பர்கள் வெளியிட்ட தகவலின்படி, டெஸ்க்டாப் பயனர்களுக்கான புதிய சேட்டிங் ஃபில்டரில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா பயனர்களில் புதிய அம்சம் 2.2221.1 பதிப்பில் இணையதளம் கண்டறிந்துள்ளது.

தேடல் தேர்வுக்கு அடுத்ததாக இந்த ஃபில்டர் பட்டன்

தேடல் தேர்வுக்கு அடுத்ததாக இந்த ஃபில்டர் பட்டன்

XDA-ல் பகிர்ந்த ஸ்க்ரீன்ஷாட் படி, தேடல் தேர்வுக்கு அடுத்ததாக இந்த ஃபில்டர் பட்டன் இடம்பெறும் என கூறப்படுகிறது. நீங்கள் இந்த ஃபில்டர் அம்சத்தை தேர்ந்தெடுக்கும் போது வாட்ஸ்அப் நீங்கள் படித்த அனைத்து மெசேஜ்களையும் மறைத்து, நீங்கள் படிக்காத மெசேஜ்களை மட்டும் ஃபில்டர் செய்து காட்டுகிறது. இந்த அம்சமானது தினசரி அடிப்படையில் நிறைய மெசேஜ்களை பெறும் பயனர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் படிக்காத அம்சங்களை கண்டறிய உதவும்.

எடிட் ஆப்ஷன் அம்சம்

எடிட் ஆப்ஷன் அம்சம்

அதேசமயத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் எடிட் ஆப்ஷன் அம்சத்தையும் சோதனை செய்து வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. வாட்ஸ்அப் தளத்தில் தற்போது வரை பிரத்யேக எடிட் பட்டன் ஏதும் இல்லாத நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பீட்டா பதிப்பில் எடிட் ஆப்ஷன் அம்சத்தை சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எடிட் ஆப்ஷன் அம்சத்தின் மூலம் பிறருக்கு அனுப்பிய செய்திகளை திருத்தலாம். டுவிட்டர் நிறுவனத்தை விட வாட்ஸ்அப் விரைவாக எடிட் ஆப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டுவிட்டரில் எடிட் பட்டன் அம்சம்

டுவிட்டரில் எடிட் பட்டன் அம்சம்

டுவிட்டரில் எடிட் பட்டன் அம்சம் தேவை என்பது குறித்த விவாதம் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் இந்த அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் எடிட் பட்டன் அம்சத்தை சோதனை செய்து வருகிறது. வாட்ஸ்அப்பில் ஒருமுறை மெசேஜ் அனுப்பும்பட்சத்தில் அதை திருத்தம் செய்வதற்கான எடிட் ஆப்ஷன் தற்போது வரை இல்லை. தவறாக மெசேஜ் அனுப்பும்பட்சத்தில் அதை டெலிட் செய்யலாம் ஆனால் திருத்தம் செய்ய முடியாது. இந்த சிக்கலை சரி செய்ய வாட்ஸ்அப் எடிட் பட்டன் அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

மேம்பாடுகளை கண்காணிக்கும் தளம்

மேம்பாடுகளை கண்காணிக்கும் தளம்

வாட்ஸ்அப் தொடர்பான அனைத்து மேம்பாடுகளையும் கண்காணிக்கும் தளமான Wabetainfo இந்த அம்சத்தையும் கண்டறிந்து தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இந்த அம்சத்தில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. Wabetainfo வாட்ஸ்அப் உருவாக்கியுள்ள எடிட் அம்சத்தின் ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்திருக்கிறது. இந்த ஸ்க்ரீன்ஷாட்டில் பிரத்யேக திருத்த பட்டன் காட்டப்படுகிறது. மெசேஜ்களை நகலெடுத்து (Copy) செய்யும் அம்சத்தின் கீழ் இந்த திருத்த விருப்பம் காட்டப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் அனுப்பிய மெசேஜில் இருக்கும் எழுத்துப் பிழை மற்றும் சொற்கள் பிழையை திருத்தம் செய்து கொள்ளலாம். வாட்ஸ்அப் தளத்தில் தற்போது வரை மெசேஜ்களில் பிழை ஏற்படும் பட்சத்தில் அதை டெலிட் செய்வது மட்டுமே ஒரே வழி என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
whatsapp testing New Feature: Unread Chat Filter For Desktop Version App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X