Home
News

வாயை மூடி பேசவும்.. WhatsApp க்ரூப்களுக்கு வந்த புதிய அம்சம்.. Settings சென்று ON செய்தால் தொல்லை ஒழிஞ்சது!

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு ஆப்பில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இது வாட்ஸ்அப் க்ரூப்கள் (WhatsApp Groups) தொடர்பான புதிய அம்சம் ஆகும். அது என்ன அம்சம்? செட்டிங்ஸ் சென்று இதை 'ஆன்' செய்தால் என்ன ஆகும்? இதோ விவரங்கள்:

வாட்ஸ்அப்பில் டெஸ்ட் செய்யப்படும் அம்சங்களை கண்காணித்து, அதைப்பற்றி முன்கூட்டியே 'ரிப்போர்ட்' செய்வதில் கில்லாடி ஆன WABetaInfo வழியாக கிடைத்த தகவலின் படி, வாட்ஸ்அப் க்ரூப்களில் ம்யூட் @எவ்ரிஒன் (Mute @Everyone) என்கிற புதிய ஆப்ஷன் டெஸ்ட் செய்யப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே இது @எவ்ரிஒன் என்கிற மென்ஷன்களை (@Everyone Mentions) ம்யூட் செய்யும்.

வாயை மூடி பேசவும்.. WhatsApp க்ரூப்களுக்கு வந்த புதிய அம்சம்!

அறியாதோர்களுக்கு @எவ்ரிஒன் என்பது ஒரு க்ரூப்பில் உள்ள அனைவரையும் மென்ஷன் செய்து மெசேஜ் அனுப்ப உதவுகிறது. அதையும் ம்யூட் செய்ய உதாஹவும் புதிய அம்சம் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.25.27.1 க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் காணப்பட்டுள்ளது. டெஸ்டிங் நல்லபடியாக முடிந்தால், அனைவருக்கும் அறிமுகம் செய்யப்படும்.

இதுகுறித்து WABetaInfo ஷேர் செய்துள்ள ஸ்க்ரீன்ஷாட்டில், ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப்பில் உள்ள நோட்டிஃபிகேஷன் செட்டிங்ஸ் (Notification Settings) ம்யூட் டாகிலுக்கு கீழே ஒரு புதிய மியூட் @எவ்ரிஒன் விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது, இருப்பினும், இது டீபால்ட் ஆகவே முடக்கப்பட்டுள்ளது; அதாவது விருப்பம் உள்ளவர்கள் இதை கைமுறையாக 'ஆன்; செய்ய வேண்டும்.

அட்மின்ளுக்கு மட்டுமல்ல, அனைத்து மெம்பர்களுக்கும் வேலை செய்யும் @எவ்ரிஒன் மென்ஷனுக்கு எதிராக வரும் ம்யூட் @எவ்ரிஒன் ஆப்ஷன் ஆனது தவறான பயன்பாடு மற்றும் க்ரூப்பில் சீர்குலைவை ஏற்படுத்தும் ஒரு அம்சமாகவும் இருக்கிறது. ஏனென்றால் @எவ்ரிஒன் மென்ஷனை க்ரூப் அட்மின்கள் மட்டுமின்றி அட்மின் ஆக இல்லாத க்ரூப் மெம்பர்களாலும் அணுக முடியும்.

ம்யூட் @ எவ்ரிஒன் அம்சம் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டதும், பயனர்கள் க்ரூப் சாட்டை முடக்குவதன் மூலம் வழக்கமாக இந்த மென்ஷன்களால் தூண்டப்படும் நோட்டிபிகேஷன்களையும் கட்டுப்படுத்த முடியும். இதற்கிடையில், ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப்பில் அதன் செட்டிங்ஸ்-ஐ மாற்றுவதன் மூலம், க்ரூப் சாட் முடக்கப்பட்டிருந்தாலும் மேற்கூறிய நோட்டிபிகேஷன்களை தொடர்ந்து பெறுவதற்கான விருப்பமும் அவர்களுக்கு இருக்கும்.

இதற்கு முன்னதாக வாட்ஸ்அப்பில் சேஃப்டி ஓவர்வியூ (Safety Review) என்று அழைக்கப்படும் என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது உங்களுக்கு தெரியாத ஒருவர், அடையாளம் காண முடியாத ஒரு வாட்ஸ்அப் க்ரூப்பில் உங்களை சேர்க்கும்போது இந்த அம்சம் வேலை செய்ய தொடங்கும்.

சேஃப்டி ஓவர்வியூ டூல் ஆனது உங்களை க்ரூப்பில் சேர்த்த நபர், அந்த க்ரூப்பில் உள்ள மொத்த மெம்பர்களின் எண்ணிக்கை, அந்த க்ரூப்பை உருவாக்கியவரின் விவரங்கள் மற்றும் அந்த க்ரூப் உருவாக்கப்பட்ட தேதி ஆகிய அனைத்து தகவல்களை காண்பிக்கும். அந்த தகவல்களை மதிப்பாய்வு செய்து, அந்த க்ரூப்பில் இருக்க விரும்புகிறீர்களா அல்லது வெளியேற விரும்புகிறீர்களா என்பதை பயனர்கள் முடிவு செய்யலாம்.

சேஃப்டி ஓவர்வியூ டூல் வழங்கும் தகவல்களின் வழியாக, குறிப்பிட்ட க்ரூப் உங்களுக்கு பரீட்சியமானதாக இருந்தால், மேலும் விவரங்களுக்கு அந்த க்ரூப்பின் சாட்களை பார்க்கலாம்.ஒருவேளை நீங்கள் வெளியேற விரும்பினால், மெட்டாவின் கூற்றுப்படி படி, அந்த க்ரூப்பில் உள்ள எந்த மெசேஜ்களையுமே பார்க்காமல் க்ரூப்பில் இருந்து வெளியேற வாட்ஸ்அப் உங்களை அனுமதிக்கும்.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், நீங்கள் அந்த வாட்ஸ்அப் க்ரூப்பில் இருக்க விரும்புகிறீர்கள் என்று கூறும் ஒரு சரிபார்ப்பு குறியை டிக் செய்யும் வரை குழுவிலிருந்து வரும் நோட்டிபிகேஷன்கள் ஆனது சைலன்ட் ஆகவே இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Testing New Feature Mute Everyone Option For Group Chat How To Turn On How it Works
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X