WhatsApp இல் இனி தப்பா டைப் செய்யவே முடியாது.! செஞ்சா? புது அம்சம் உங்கல காட்டிக்கொடும்.!

|

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் இப்போது அதன் இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் தளத்தில் எடிட் பட்டனை சோதிக்கத் தொடங்கியுள்ளது. இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டின் சமீபத்திய பீட்டா எடிஷனில் (WhatsApp Beta) காணப்பட்டது. இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் பயனர்கள் அனுப்பும் மெசேஜ்களை ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் எடிட் செய்ய அனுமதிக்கிறது.

இந்த புதிய எடிட் மெசேஜ் அம்சம் மிக விரைவில் அனைவருக்கும் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி, இந்த அம்சம் எப்படி செயல்படும் என்று தெரிந்துகொள்ளலாம்.

இனி வாட்ஸ்அப் இல் தப்பா டைப் செய்யவே முடியாது.!

இனி வாட்ஸ்அப் இல் தப்பா டைப் செய்யவே முடியாது.!

வாட்ஸ்அப் இயங்குதளமானது இந்த புதிய எடிட் மெசேஜ் அம்சத்தை (New WhatsApp Edit Message Feature) இப்போது சோதனை செய்து வருகிறது.

இந்த அம்சம் நிறுவனம் விரும்பும் விதத்தில் செயல்பட்டால், அதை ஸ்டாண்டர்ட் பதிப்பிற்காக விரைவில் வெளியிடும் என்று கூறப்படுகிறது.

WaBetaInfo சமீபத்தில் இந்த அம்சத்தின் ஸ்கிரீன் ஷாட் விபரங்களைப் பகிர்ந்துள்ளது. இந்த ஸ்க்ரீன்ஷாட்டில் எடிட் செய்யப்பட்ட மெசேஜ்கள் அருகில் "Edited" என்ற லேபிளை வாட்ஸ்அப் காண்பிக்கிறது.

மெசேஜ்களை எடிட் செய்தால் வாட்ஸ்அப் இனி காட்டிக்கொடுக்குமா?

மெசேஜ்களை எடிட் செய்தால் வாட்ஸ்அப் இனி காட்டிக்கொடுக்குமா?

அனுப்புனர் அனுப்பிய மெசேஜ்ஜில் எதோ ஒன்றை எடிட் செய்து, திருத்தம் செய்துள்ளார் என்பதை இந்த லேபிள் சுட்டிக்காட்டுகிறது.

நீங்கள் எத்தனை மெசேஜ்களை எடிட் செய்தாலும், அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதைப் பெறுநருக்குத் தெரிவிக்கும் விதமாக, ஒவ்வொரு மெசேஜ் பாக்சிலும் வாட்ஸ்அப் Edited என்ற லேபிளைக் (WhatsApp Edit Label) காண்பிக்கும் என்பதை WaBetaInfo வெளியிட்ட ஸ்க்ரீன்ஷாட் காட்டுகிறது.

WhatsApp பயனர்களே ஜாக்கிரதை.! அசல் போல போலி வாட்ஸ்அப்.! உங்க போன்ல WhatsApp பயனர்களே ஜாக்கிரதை.! அசல் போல போலி வாட்ஸ்அப்.! உங்க போன்ல "இது" இருக்கா?

எவ்வளவு குறுகிய காலத்திற்குள் நாம் அனுப்பிய மெசேஜ்ஜை Edit செய்யாலாம்?

எவ்வளவு குறுகிய காலத்திற்குள் நாம் அனுப்பிய மெசேஜ்ஜை Edit செய்யாலாம்?

ஆனால், இப்படி ஒரு மெசேஜ்ஜை நாம் எடிட் செய்தால், வாட்ஸ்அப் எச்சரிக்கை நோட்டிபிகேஷனை அனுப்புமா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

அதேபோல், எடிட் செய்யப்பட்ட மெசேஜ்ஜின் நேரம் அல்லது தேதியை வாட்ஸ்அப் காட்டுமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

WaBetaInfo-வில் காட்டப்பட்ட ஆதாரம் ஒரு மெசேஜ்ஜை எடிட் செய்ய ஒரு பயனருக்கு 15 நிமிட நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது.

முழு வாட்ஸ்அப் மெசேஜ்ஜையும் எடிட் செய்யலாமா?

முழு வாட்ஸ்அப் மெசேஜ்ஜையும் எடிட் செய்யலாமா?

இந்த விருப்பம் பயனர்களுக்கு வாட்ஸ்அப் இல் தெரியாமல் அனுப்பிய மெசேஜ்களில் உள்ள பிழைகளைச் சரிசெய்வதற்கும், முழு மெசேஜ்ஜை மாற்றுவதற்கும் அனுமதிக்கிறது (WhatsApp Message Edit) என்பது சிறப்பானது.

உண்மையில், இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்களுக்குத் தேவையான முக்கியமான அம்சம் தான் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், எடிட் பட்டனின் அறிமுகம் நம்பகத்தன்மை சிக்கல்களை எழுப்பும் என்பதால் இது எப்படி முடிவடையும் என்பது நமக்குத் தெரியவில்லை.

இனி 3G / 4G போன் தயாரிக்க கூடாது.! ஒன்லி 5G போன் மட்டும் தானா? அரசு போட்ட கண்டிஷன்.!இனி 3G / 4G போன் தயாரிக்க கூடாது.! ஒன்லி 5G போன் மட்டும் தானா? அரசு போட்ட கண்டிஷன்.!

இந்த அம்சம் இப்போது எந்த வெர்ஷனில் கிடைக்கிறது?

இந்த அம்சம் இப்போது எந்த வெர்ஷனில் கிடைக்கிறது?

வாட்ஸ்அப் மெசேஜ்ஜில் திருத்தப்பட்ட பதிப்புகளையும் சரிபார்க்கப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் ஒரு விருப்பத்தைச் சேர்க்குமா இல்லையா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.

இந்த அம்சம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், இந்த அம்சம் நிலையான பதிப்பில் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

ஆனால், இந்த அம்சம் இப்போது ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.22.22.14 பீட்டா அப்டேட் பதிப்பில் காணப்படுகிறது.

இப்போது வாட்ஸ்அப் இல் இருக்கும் பிரச்சனை என்ன?

இப்போது வாட்ஸ்அப் இல் இருக்கும் பிரச்சனை என்ன?

இப்போது வாட்ஸ்அப் இல் இருக்கும் அம்சமானது, நாம் அனுப்பிய மெசேஜ்ஜில் ​​ஏதேனும் பிழை இருந்தால், ஒட்டுமொத்தமாக அந்த மெசேஜ்ஜை டெலீட் செய்துவிட்டு, மீண்டும் சரியான மெசேஜ்ஜை டைப் செய்து அனுப்ப அனுமதிக்கிறது.

ஆனால், பிரச்சனை என்னவென்றால், மெசேஜ்ஜை டெலீட் செய்தவுடன் வாட்ஸ்அப் deleted என்ற லேபிளை காட்டுகிறது.

டெலீட் செய்யப்பட்ட மெசேஜ் என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள மற்றொரு நபர் எப்போது ஆர்வமாக உள்ளார் என்பது சிக்கலாகிறது.

ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?

வாட்ஸ்அப் போல டிவிட்டர் கூட எடிட் அம்சத்தை சோதிக்கிறதா?

வாட்ஸ்அப் போல டிவிட்டர் கூட எடிட் அம்சத்தை சோதிக்கிறதா?

இதை திருத்தவே வாட்ஸ்அப் இப்போது எடிட் பட்டனை சோதனை செய்து வருகிறது. உண்மையை சொல்லப் போனால், வாட்ஸ்அப் தவிர, டிவிட்டர் போன்ற பிற சமூக ஊடக தளங்களும் இது போன்ற அம்சத்தைக் கொண்டு வந்துள்ளன.

குறிப்பாக, சமீபத்தில், டிவிட்டர் கூட எடிட் பட்டனை சோதனை செய்தது. இதன் படி, ஒரு ட்வீட்டைத் திருத்த ஐந்து வாய்ப்புகளை மட்டுமே தருவதாகத் தளம் சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp Testing New Edit Button For Android User To Edit Messages With In 15 Minutes

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X