Home
News

15 நிமிட லிமிட்.. புதிய Setting.. ப்ளூ டிக்கை OFF பண்ணாலும் வேலை செய்யும்.. WhatsApp வரலாற்றில் பெரிய மாற்றம்!

வாட்ஸ்அப் (WhatsApp) ஆனது பல புதிய மற்றும் சுவாரசியமான அம்சங்களால் நிரம்பி வழிய உள்ளது போல் தெரிகிறது. சமீபத்தில் வாட்ஸ்அப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களுக்கான பில்ட்-இன் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் (Built-in Noise Cancellation) குறித்த தகவல் வெளியாகி இருந்தது.

அதற்கும் முன்பாக (கடந்த வாரம்) வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாதவர்கள் வாட்ஸ்அப் வழியாக மெசேஜ் அனுப்ப அனுமதிக்கும் செக்யூர் வெப் லிங்க் (Secure web link) குறித்த தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்போது மூன்றாவதாக.. வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கான ஒரு புதிய ப்ரைவஸி அம்சம், கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

15 நிமிட லிமிட்.. புதிய Setting.. WhatsApp மாற்றம்!

என்ன அம்சம்? இது ஆஃப்டர் ரீடிங் (After Reading) என்று அழைக்கப்படுகிறது. இதுஉங்களுக்கு வந்த மெசேஜ்களை நீங்கள் படித்த சிறிது நேரத்திலேயே அவற்றை தானாகவே நீக்கி (Delete) விடும். WABetaInfo-வின் கூற்றுப்படி இந்த புதிய அம்சம் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் (Latest Android Beta Version) கண்டறியப்பட்டு உள்ளது.

ஆஃப்டர் ரீடிங் அம்சம் எப்படி வேலை செய்யும்? இந்த அம்சத்தின் பின்னணியில் உள்ள வாட்ஸ்அப் நிறுவனத்தின் யோசனை மிகவும் எளிமையானது. இந்த அம்சத்தை ஒருமுறை செயல்படுத்த் விட்டால் (ஆக்டிவேட் செய்து விட்டால்), ஒவ்வொரு முறையும் பெறுநர் ஒரு மெசேஜை படித்த பிறகு அது தானாகவே மறைந்துவிடும்.

WABetaInfo-வின் அறிக்கையின்படி, ஒரு மெசேஜ் ஓப்பன் செய்யப்ப பிறகு 15 நிமிட நேரக் கணக்கீடு தொடங்கும்.15 நிமிடங்கள் என்கிற டைமர் முடிந்தவுடன், அனுப்புநர் மற்றும் பெறுநர் ஆகிய இருவரின் உரையாடல்களிலிருந்தும் அந்த மெசேஜ் நீக்கப்படும். ஒருவேளை அந்த மெசேஜ் ஓப்பன் செய்யப்படவே இல்லை என்றால், அது 24 மணிநேரம் வரை பயன்பாட்டில் இருக்கும், அதன் பிறகு அது தானாகவே காலாவதியாகிவிடும்.

வாட்ஸ்அப்பின் புதிய ஆஃப்டர் ரீடிங் அம்சம் ஆனது ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.26.12.2 இல் காணப்பட்டு உள்ளது. இருப்பினும் இது இன்னுமும் உருவாக்கத்தில் உள்ளது மற்றும் பீட்டா டெஸ்ட்களுக்கு (Beta Testers) கூட இன்னும் கிடைக்கவில்லை. ஆக இது அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்ட, பொது பயன்பாட்டிற்கு வர இன்னும் சில வாரங்களாவது ஆகலாம்.

OPINION - இந்த ஆஃப்டர் ரீடிங் அம்சம் பயனுள்ளதாக இருக்குமா? ஒடிபிக்கள் (OTP), பாஸ்வேர்ட் (Password), முகவரிகள் (Address) அல்லது சரிபார்ப்பு குறியீடுகள் (Verification codes) போன்ற ரகசிய தகவல்களை அடிக்கடி பகிரும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு இந்த புதிய அம்சம் உண்மையிலேயே மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

இப்போதைக்கு ​​வாட்ஸ்அப்பில் உள்ள மெசேஜ்கள் அந்த "கைமுறையாக" நீக்கப்படும் வரை அல்லது டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் (Disappearing messages) மூலம் அனுப்பப்படும் வரை பொதுவாக சாட்டிலேயே தான் இருக்கும். ஆஃப்டர் ரீடிங் அம்சத்தின் அறிமுகமானது பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜ்கள் பார்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே தானாகவே நீங்கிவிடும் என்பதால், தனிப்பட்ட விவரங்கள் சாட் ஹிஸ்டரியில்(chat history) அப்படியே தங்கிவிடுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

இந்த அம்சத்தில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ரீட் ரெசிப்ட்ஸ் (Read receipts) அம்சம் முடக்கப்பட்டு இருந்தாலும் கூட ஆஃப்டர் ரீடிங் அம்சம் செயல்படும் என்று WABetaInfo குறிப்பிடுகிறது. பொதுவாக, ஒரு மெசேஜ் படிக்கப்படும்போது / படிக்கப்பட்ட பின்னர் அது ப்ளூ கலர் டிக்கை காட்டும்; ஆனால் சில பயனர்கள் ப்ரைவஸிக்காக ப்ளூ டிக்கை முடக்கிவிடுவார்கள்.

அப்படி ப்ளூ டிக்கை ஆப் (Blue Tick OFF ) செய்து வைத்து இருந்தாலும் கூட, புதிய ஆஃப்டர் ரீடிங் அம்சத்தால் ஒரு மெசேஜ் எப்போது ஓப்பன் செய்யப்பட்டது (பார்க்கப்பட்டது அல்லது படிக்கப்பட்டது) என்பதை கண்டறிய முடியும். அந்த நேரத்தில் இருந்து 15 நிமிட கெடு தொடங்கும். ஆக இந்த அம்சம் ரீட் ரெசிப்ட்ஸ் பசெட்டிங்கை சார்ந்து இல்லாமல், 100% ப்ரைவஸியில் கவனம் செலுத்துகிறது. உண்மையிலேயே இது வரவேற்கத்தக்க அம்சம் தான்!

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Testing New After Read Feature Automatically delete messages after 15 Minutes How it Works
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X