Home
News

WhatsApp-க்கு இது வந்தா அவ்ளோதான்.. ஒரே App போதும்.. மல்டிபிள் அக்கவுண்ட்.. கியூஆர் கோட் லிங்கிங்க்!

ஒரே வாட்ஸ்அப் (WhatsApp) மட்டுமே இருக்கு, இன்னொன்னு இருந்தா நல்லா இருக்கும்னு கேட்கும் யூசர்களுக்கு விரைவில் வாட்ஸ்அப் மல்டிபிள் அக்கவுண்ட்கள் (WhatsApp Multiple Accounts) அப்டேட் வர இருக்கிறது. இந்த அப்டேட்டை கொடுப்பதற்கான டெஸ்டிங் நடந்து வருவதாக WABetaInfo உறுதிபடுத்தி இருக்கிறது. இதனால், வாட்ஸ்அப் யூசர்கள் குஷியில் இருக்கின்றனர். இந்த டெஸ்டிங் குறித்த விவரங்கள் இதோ.

வாட்ஸ்அப் வைத்திருக்கும் யூசர்களில் பலருக்கு ஒன்றுக்கும் மேற்பட அக்கவுண்ட்கள் இருக்கும். அதிலும், பர்சனலாக பயன்படுத்த ஒன்று மற்றும் பிசினஸ் தொடர்பாக பயன்படுத்த ஒன்று என்று வைத்திருப்பார்கள். இருப்பினும், இதை தனித்தனியாக பயன்படுத்தும்போது, கூடுதல் கவனம் மற்றும் நேரம் தேவைப்படும். ஆகவே, ஒரே ஆப் மூலம் பல அக்கவுண்ட்களை பயன்படுத்த ஆப்ஷன் இருந்தால், நன்றாக இருக்கும் என்று யூசர்கள் எதிர்பார்த்தனர்.

WhatsApp-க்கு வந்தா போதும்.. ஒரே App போதும்.. மல்டிபிள் அக்கவுண்ட்!

இவர்களுக்காக மல்டிபிள் அக்கவுண்ட்களை ஒரே ஆப் மூலம் பயன்படுத்தும்படியான அப்டேட்டை கொடுக்க வாட்ஸ்அப் இப்போது திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான டெஸ்டிங் நடந்து வருவதாகவும் WABetaInfo உறுதிபடுத்தி இருக்கிறது. இதன் மூலம் பர்சனல் மற்றும் பிசினஸ் அக்கவுண்ட்களின் சாட்கள், கால்கள் ஆகியவற்றை ஒரே ஆப் மூலம் செய்து கொள்ள முடியும். ஆகவே, செகண்டரி மொபைல் நம்பர் இல்லாமலேயே மல்டிபிள் அக்கவுண்ட்களை பயன்படுத்தலாம்.

வெப்பீட்டாஇன்போ (WABetaInfo) சொன்னது என்ன? இந்த மல்டிபிள் அக்கவுண்ட் பீச்சர் ஐஓஎஸ் (iOS) பிளாட்ஃபார்மில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே, ஆப்பிள் பயனர்களுக்கு முதலில் கிடைக்க வாய்ப்புள்ளது. சிங்கிள் ஆப் மூலம் பயன்படுத்த இருப்பதால், ஒரே நேரத்தில் 2 அக்கவுண்ட்களை பயன்படுத்தும்படியான அப்டேட் கொடுக்கப்படும். ஆகவே, வேறு டிவைஸ் மற்றும் வேறு ஆப் இனிமேல் வாட்ஸ்அப் பயனர்களுக்கு தேவைப்படாது.

பிரைமரி அக்கவுண்ட் செட்டப் (Primary Account Setup) மற்றும் கியூஆர்கோட் லிங்கிங் (QR Code Linking) போன்ற ஆப்ஷன்கள் இதில் கிடைக்க இருக்கின்றன. இதில் பிரைமரி அக்கவுண்ட் செட்டப் மூலம் பிரைமரியாக ஒரு அக்கவுண்ட்டையும், செகண்டரியாக ஒரு அக்கவுண்ட்டையும் செட் செய்து வைத்து கொள்ள முடியும். அதற்கு தனித்தனியே விவரங்களையும் கொடுத்து கொள்ளலாம். கியூஆர்கோட் லிங்கிங் மூலம் அதை கனெக்ட் செய்து கொள்ளலாம்.

அதாவது, வெப் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது கியூஆர் கோட் ஸ்கேன் செய்து, உங்களது பர்சனல் அக்கவுண்ட்டை ஓப்பன் செய்து பயன்படுத்தி இருப்பீர்கள். இதை போலவே செகண்டரி அக்கவுட்டை கியூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து பயன்படுத்தலாம். அதேபோல டூயல்-ஆப்ஷன் மூலம் ஒரே நேரத்தில் ஒரு டிவைஸ் மூலம் பயன்படுத்தலாம். இதன் மூலம் பிசினஸ் சாட்கள், நேட்டிபிகேஷன்களை தனித்தனியே பராமரிக்க முடியும்.

அதேபோல பேக்கப் எடுக்கவும் இந்த மல்டிபிள் அக்கவுண்ட் அப்டேட் பக்கா உதவியாக இருக்கும். ஆகவே, ஏற்கனவே இருக்கும் வாட்ஸ்அப் பிசினஸ் ஆப் ஸ்விட்ச் செய்து கொள்ளாமலேயே இந்த அப்டேட் மூலம் மல்டிபிள் அக்கவுண்ட்களை பயன்படுத்த முடியும். சொல்லப்போனால், வாட்ஸ்-அப் பிசினஸ் ஆப்-ஐ பயன்படுத்த செகண்டரி மொபைல் நம்பர் தேவைப்படும். அப்போதுதான் குழப்பம் இன்றி சாட், டேட்டாக்களை பகிர முடியும்.

ஆனால், இப்போது வர இருக்கும் மல்டிபிள் அக்கவுண்ட் பீச்சர் மூலம் ஒரே ஆப் மூலம் 2 அக்கவுண்ட்டைகளை ஓப்பன் செய்து பயன்படுத்த முடியும். இது பர்சனல் சாட் செய்ய பயன்படுத்தும் யூசர்களுக்கு தேவைப்படாது. அதுவே, 2 அக்கவுண்ட்கள் தேவைப்படும்போது, இந்த ஆப்ஷன் பக்கா உதவியாக இருக்கும். இருப்பினும், முதலில் ஐஓஎஸ் பிளாட்ஃபார்மில் டெஸ்டிங் செய்யப்பட்டுவதால், ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு தாமதமாக கிடைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Testing Multiple Accounts With Single App To iOS Platform For Business And Personal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X