Home
News

மறைந்துவிடும் மெசேஜ்களில் இருக்கும் சிக்கல்: வாட்ஸ்அப் சோதனை செய்யும் புது அம்சம்- என்ன தெரியுமா?

மறைந்து போகும் மெசேஜ் அனுப்பும் அம்சத்தில் வாட்ஸ்அப் மாற்றம் செய்வதற்கான பணியில் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறைந்து போகும் மெசேஜ்

மறைந்து போகும் மெசேஜ்

மறைந்து போகும் மெசேஜை நீங்கள் அனுப்பும் போது, அந்த மெசேஜ் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருக்காது. வாட்ஸ்அப் தற்போது புதிய சோதனையில் ஈடுபட்டிருக்கிறது. அது காணாமல் போகும் செய்தியை தக்க வைக்கும் அம்சமாகும். மறைந்து வரும் மெசேஜ் அம்சத்தை பயனுள்ளதாக மாற்றும் புதிய வழிகளை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது. மெசேஜிங் செயலி மறைந்து வரும் மெசேஜ்களை வைத்திருக்கும் திறனை சோதித்து வருகிறது. வாட்ஸ்அப் அம்சம் இந்த வளர்ச்சியில் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.

காணாமல் போகும் மெசேஜை வைத்திருங்கள்

காணாமல் போகும் மெசேஜை வைத்திருங்கள்

டிஸ்அப்பியரிங் அதாவது மறைந்து வரும் மெசேஜ்களை பயனுள்ளதாக மாற்றும் புதிய வழிமுறைகளை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது. மறைந்து போகும் செய்திகளை நீங்கள் அனுப்பும் போது அந்த மெசேஜ் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட சமயங்களில் நீங்கள் அனுப்பப்பட்டிருக்கும் அம்சம் இயக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நீங்கள் அனுப்பும் மெசேஜ் மறைந்துவிடும். இதை தவிர்ககும் விதமாக வாட்ஸ்அப்பில் விரைவில் அறிவிக்கப்படும் இந்த அம்சமானது "காணாமல் போகும் மெசேஜை வைத்திருங்கள்" என அழைக்கப்படும் அம்சம் ஆகும்.

வாட்ஸ்அப் பீட்டா கண்காணிப்பு தளம்

வாட்ஸ்அப் பீட்டா கண்காணிப்பு தளம்

வாட்ஸ்அப் பீட்டா கண்காணிப்பு தளமான Wabetainfo அறிக்கையில் இது தெரிவித்திருக்கிறது. இந்த அம்சங்களை முதலில் கண்டறிந்து கூறியது Wabetainfo ஆகும். டிப்ஸ்டர் பகிர்ந்த ஸ்க்ரீன் ஷாட் படி., மறைந்து போகும் மெசேஜ் ஆக்டிவேட் செய்து அனுப்பி இருக்கும் போது இந்த செய்தியை நீங்கள் அரட்டையில் வைத்திருக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்படும். நீங்கள் இதை இயக்கும் போது மெசேஜ் மறைந்துவிடும் காலம் முடிந்த பிறகும் அது அரட்டைியல் இடம்பெறும். தேவையான மெசேஜ்கள் மறைந்து விடும் அம்சத்தினால் அழிந்து விடுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சோதனை கட்டத்தில் இருப்பதால் இந்த அம்சத்தின் நோக்கம் மாற்றப்படலாம் எனவும் நிராகரிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வாட்ஸ்அப் மற்றொரு அம்சத்தில் செயல்பட்டு வருகிறது

வாட்ஸ்அப் மற்றொரு அம்சத்தில் செயல்பட்டு வருகிறது

அதேபோல் வாட்ஸ்அப் மற்றொரு அம்சத்திலும் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை வெளியிட தயாராகி வருகிறது. வாட்ஸ்அப் புதிய போல் (POLL) அம்சத்தை கொண்டுவர இருக்கிறது. இந்த அம்சம் சோதனையில் இருக்கிறது. WABetaInfo தளத்தின் தகவலும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த அம்சமானது ஐஓஎஸ் பயனர்களுக்கு முதற்கட்டாக அறிமுகப்டுத்தப்பட இருக்கிறது. இந்த அம்சமானது v2.22.6.70 என்ற பீட்டா பதிப்பு எண் உடன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

போல் (POLL) அம்சம்

போல் (POLL) அம்சம்

பேஸ்புக் தளத்தில் முன்னதாக போல் (POLL) அம்சம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து வாட்ஸ்அப்பில் போல் (POLL) அம்சம் குழுக்கள் உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த போல் (POLL) அம்சத்தை இயக்கிய உடன் குழு உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த அம்சமானது பீட்டா சோதனையில் இருக்கிறது. விரைவில் இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட்

வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட்

வாட்ஸ்அப்-ல் வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட் செய்யும் போது இனி இடைநிறுத்தம் செய்து மீண்டும் தொடங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. வாய்ஸ் நோட்களை பதிவு செய்யும் போது அந்த ஆடியோவை இடைநிறுத்தம் செய்து மீண்டும் தொடங்குவதற்கான அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிடுகிறது. இந்த அம்சமானது குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறுது. வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல அம்சங்களை உருவாக்கி வருகிறது. மெசேஜ் ரெக்கார்டிங் செய்யும் போது பயனர்கள் ஆடியோவை இடைநிறுத்தி மீண்டும் தொடங்கும் வகையிலான அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருக்கிறது. வாட்ஸ்அப் பீட்டாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Whatsapp Testing its New way to Handle Whatsapp Disappearing Message
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X