WhatsApp அவதார்: எந்த வெர்ஷனில் உங்கள மாதிரியே அவதார் உருவாக்கலாம்? புது அப்டேட்.!

|

வாட்ஸ்அப் கடந்த சில வாரங்களாக உலகெங்கிலும் உள்ள தனது பயனர்களுக்காக பல புதிய அம்சங்களை சோதித்து வருகிறது. மெட்டாவிற்கு சொந்தமான நிறுவனம் சமீபத்தில் WhatsApp Call Link என்ற அழைப்பு இணைப்புகளைச் சோதிக்கத் தொடங்கியது.

இந்த அம்சம் பயனர்களை WhatsApp ஆடியோ அல்லது வீடியோ அழைப்பை மேற்கொள்ள ஒரு லிங்க்-ஐ உருவாக்கி மற்ற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.

சில அதிர்ஷ்ட பயனர்களின் வாட்ஸ்அப்பில் அவதார் அம்சம்.!

சில அதிர்ஷ்ட பயனர்களின் வாட்ஸ்அப்பில் அவதார் அம்சம்.!

இந்த அம்சம் விரைவில் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்போது, ​​வாட்ஸ்அப் மெசேஜிங் ஆப்ஸ் பயன்படுத்துபவர்கள் புதிதாக அவர்களை போன்ற அவதாரை உருவாக்கக் கூடிய ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது.

இந்த அம்சம் சில அதிர்ஷ்ட பயனர்களின் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவதார் அம்சத்தை WhatsApp பயனர்கள் எப்படி பயன்படுத்தலாம்?

அவதார் அம்சத்தை WhatsApp பயனர்கள் எப்படி பயன்படுத்தலாம்?

மெட்டாவுக்குச் சொந்தமான நிறுவனம் மற்ற தளங்களிலும் கிடைக்கும் முன் வரும் நாட்களில் பீட்டா பயனர்களுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவதார் அம்சத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். இந்த அம்சம் இப்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக சோதிக்கப்படுகிறது.

அவதார் அம்சத்தை பயன்படுத்தி WhatsApp பயனர்கள் அவர்களை போல் அல்லது அவர்கள் விரும்பும் விதத்தில் அவதார் பொம்பையை உருவாக்கலாம்.

இப்படி செஞ்சா ரூ.8000 விலையில் 32இப்படி செஞ்சா ரூ.8000 விலையில் 32" இன்ச் Smart TV வாங்கலாம்.! இது தான் லாஸ்ட் சான்ஸ்.!

எந்த வெர்ஷனில் இந்த புதிய வாட்ஸ்அப் அவதார் அம்சம் கிடைக்கிறது?

எந்த வெர்ஷனில் இந்த புதிய வாட்ஸ்அப் அவதார் அம்சம் கிடைக்கிறது?

அவதார் போன்ற உருவத்தில் இது உங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு புதிய வழியாகும். மேலும் இந்த அம்சம் ஏற்கனவே Facebook மற்றும் Instagram இல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, ​​மெட்டா அவதார் கிடைப்பதை வாட்ஸ்அப்பிற்கும் எடுத்துச் சென்றுள்ளது.

WABetainfo அறிக்கையின்படி, ஆண்ட்ராய்டுக்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.23.8 மற்றும் 2.22.23.9 உடன், சில அதிர்ஷ்டசாலி பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைத்துள்ளது.

உங்கள் வாட்ஸ்அப் இல் எங்கு இந்த ஆப்ஷனை பார்க்கலாம்?

உங்கள் வாட்ஸ்அப் இல் எங்கு இந்த ஆப்ஷனை பார்க்கலாம்?

வாட்ஸ்அப் செயலியில் அவதார் அம்சத்தை எப்படி அணுகுவது மற்றும் எப்படி இருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

அவதார் ஆப்ஷனை, வாட்ஸ்அப் பயனர்கள் ஆப்ஸின் செட்டிங்ஸ் ஆப்ஷன்களில் காணலாம். சரியாக சொல்ல வேண்டும் என்றால், இது பீட்டா பதிப்பில் தற்போது அக்கௌன்ட் (Account) மற்றும் சாட்ஸ் (Chats) விருப்பங்களுக்கு இடையே இருக்கிறது.

அவதார்களுடன், பயன்பாட்டிற்குள் டிஜிட்டல் வெளிப்பாட்டை அமைப்பதன் மூலம் பயனர்கள் தங்கள் அடையாளத்தைத் தனிப்பயனாக்கலாம்.

4G வேணுமா.! இல்ல 5G வேணுமா? ரூ.6000 முதல் பெஸ்ட் Redmi போன்கள் வாங்கலாம் பாஸ்.!4G வேணுமா.! இல்ல 5G வேணுமா? ரூ.6000 முதல் பெஸ்ட் Redmi போன்கள் வாங்கலாம் பாஸ்.!

வாட்ஸ்அப் அவதாரை ஸ்டிக்கராகவும் அனுப்பலாமா?

வாட்ஸ்அப் அவதாரை ஸ்டிக்கராகவும் அனுப்பலாமா?

இந்த அம்சம் எப்படி செயல்படுகிறது என்பதை விவரிக்கும் ஒரு ஸ்கிரீன்ஷாட் புகைப்படமும் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அவதார் அமைப்பு மூலம் உங்கள் அவதாரை நீங்கள் உருவாக்கிய பின், WhatsApp தானாகவே ஒரு புதிய ஸ்டிக்கர் பேக்கை உருவாக்கும்.

நீங்கள் ஸ்டிக்கர்களைச் சேர்த்தவுடன், குழு அல்லது தனிப்பட்ட அரட்டைகளில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஸ்டிக்கர்களைப் பகிர முடியும்.

இந்த அம்சம் எல்லோருக்கும் எப்போது கிடைக்கும்?

இந்த அம்சம் எல்லோருக்கும் எப்போது கிடைக்கும்?

ஸ்டிக்கர்களைப் பகிரும்போது, ​​எமோஜிகள், GIFகள், ஸ்டிக்கர்கள் மற்றும் அவதார்களுக்கு அடுத்ததாக வாட்ஸ்அப் புதிய டேப்பைச் சேர்க்கும்.

இந்த அம்சம் இப்போது ஆண்ட்ராய்டில் ஒரு சில பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைப்பதால், இந்த அம்சம் இன்னும் ஆரம்ப வெளியீட்டு கட்டத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

அடுத்த சில நாட்களில், அவதார் அம்சம் அதிகமான பீட்டா பயனர்களுக்கு புதுப்பிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp Testing Avatar Feature on Android

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X