Home
News

புது பெயரில் மீண்டும் வருகிறது பழைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் முறை.!

"நான் கேட்டேனா..? மார்க்கு.. நான் உங்கிட்ட எனக்கு அப்டேட் வேணும்னு கேட்டேனா.??"

By Muthuraj

"யாரைக்கேட்டாலும் எனக்கு சுத்தமா பிடிக்கல" என்றுதான் கூறுகிறார்கள்.? அல்லது "இனிமே நான் எப்படி தனிப்பட்ட நபர்களை குறிக்கும் ஸ்டேட்டஸை அப்டேட் செய்வேன்..?" என்று சிலர் வெளிப்படையாகவே கூறி விடுகிறார்கள். இவர்களாவது பரவாயில்லை இன்னும் சில கோபக்கார கூட்டத்தை சேர்ந்தவர்கள் "நான் கேட்டேனா..? மார்க்கு.. நான் உங்கிட்ட எனக்கு அப்டேட் வேணும்னு கேட்டேனா.??" என்று துள்ளுகிறார்கள்.

புது பெயரில் மீண்டும் வருகிறது பழைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் முறை.!

இந்த எல்லா பிரச்சனைக்கும் அடித்தளம் போட்டது - கடைசியாக நிகழ்த்தப்பட்ட வாட்ஸ்ஆப் அப்டேட் தான். சிலர் அவர்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்து பழைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் அம்சத்தை பெற நினைக்கிறார்கள். அது வேலைக்கு ஆகுமா.? மீண்டும் பழைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் முறை வருமா.? எப்போது வரும்.? கிடைக்குமா.? புதிய அப்டேட் மீதான அதிருப்திக்கு, வாட்ஸ்ஆப் என்ன நடவடிக்கை மேற்கொள்கிறது.?

வாய்ப்புள்ளது

வாய்ப்புள்ளது

சில மக்களின்படி பழைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் அம்சம் இன்னமும் இருக்கிறதாம் (கொடுத்து வைத்தவர்கள்). இருப்பினும் அது இப்போது அவுட்-டேட்டட் ஆகிவிட்டது என்பது தான் நிதர்சனம். மீண்டும் இது அப்டேட் செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதில் - வாய்ப்புள்ளது. அதெப்படி.?

வாட்ஸ்ஆப் 'டேக்லைன்ஸ்'

வாட்ஸ்ஆப் 'டேக்லைன்ஸ்'

சமீபத்திய லீக்ஸ் தகவலொன்றின்கீழ் புதிய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் அம்சம் மீது மக்கள் விரக்தி என்ற காரணத்தின் அடிப்படையில் வாட்ஸ்ஆப் 'டேக்லைன்ஸ்' என்ற பெயரில் மீண்டும் பழைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் முறையை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கிறது.

ஸ்க்ரீன்ஷார்ட்கள்

ஸ்க்ரீன்ஷார்ட்கள்

எப்போதும் வாட்ஸ் ஆப் சார்ந்த சரியான லீக்ஸ் தகவல்களை நமக்களிக்கும் வாட்ஸ்ஆப் பி பீட்டா இன்ஃபோ (WABetaInfo) மூலம் ட்விட்டரில் பகிரப்பட்ட சில ஸ்க்ரீன்ஷார்ட்கள் நிறுவனம் ஒரு புதிய அம்சத்தின் வழியாக மீண்டும் பழைய ஸ்டேட்டஸ் நிலைகளை கொண்டு வரும் என்று அறியப்படுகிறது.

முன்பு போலவே

முன்பு போலவே

அதாவது 'டேக்லைன்' என்ற புதிய பெயரின் கீழ் புதிய அம்சமாக அப்டேட் செய்யப்பட்டு, முன்பு போலவே, வாட்ஸ்ஆப் பயனர்கள் தங்களின் ப்ரொபைல் பிக்சரின் கீழ் ஒரு உரை செய்தி மற்றும் ஈமோஜிகளை தோன்ற வைக்க முடியும்.

ஸ்டேட்ஸில் சிறிய வீடியோ

ஸ்டேட்ஸில் சிறிய வீடியோ

வெளியான தகவலின் கீழ் முன் இருந்தஸ்டேட்டஸ் முறையில் எந்த பெரிய மாற்றங்களும் இல்லை என்பது தெரிய வருகிறது. மறுபக்கம் பயனர்கள் தற்காலிக (24 மணி நேரம் நீடிக்கும்) ஸ்டேட்ஸில் ஒரு சிறிய வீடியோ அல்லது ஒரு பிக்சரை பதிவு செய்ய புதிய அம்சம் அனுமதிக்கலாம் என்றும் அறியப்படுகிறது.

பீட்டா பதிப்பு

பீட்டா பதிப்பு

வெளியான ஸ்க்ரீன்ஷார்ட்கள் ஆனது புதிய டேக்லைன் அம்சத்தில் பயனர்களுக்கான வழக்கமான தனியுரிமை அமைப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கின்றன. இந்த டேக்லைன் அம்சமானது ஐபோனின் பீட்டா பதிப்பு 2.17.6.21 மற்றும் விண்டோஸ் தொலைபேசியின் பீட்டா பதிப்பு 2.17.82 ஆகியவைகளில் வாட்ஸ்ஆப் பி பீட்டா இன்ஃபோ (WABetaInfo) மூலம் காணப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு கருவி

ஆண்ட்ராய்டு கருவி

உடன் இந்த புதிய டேக்லைன் அம்சமானது விரைவில் ஆண்ட்ராய்டு கருவிகளிலும் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த அம்சம் இப்போது ஆப்பில் ஹிட்டன் (மறக்கப்பட்டுள்ளது), இறுதியில் இது பயன்பாட்டில் வெளியாக ஒரு வாய்ப்பும் உள்ளது என்றும் வெளியான லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வாட்ஸ்ஆப் பற்றிய இந்த 8 தகவல்கள் தெரியுமா உங்களுக்கு.?

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp 'Tagline' Update May Bring Back Text Statuses. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X