Home
News

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மார்க் ஜுக்கர்பெர்க்.. வாட்ஸ்அப் Status-ல் விளம்பரங்கள்.. இனி எல்லாமே மாறுது..

வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலியில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் மற்றும் புதிய பெய்டு சப்ஸ்கிரப்ஷன் அறிமுகம் செய்ய உள்ளதாக அதன் தாய் நிறுவனம் மெட்டா தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரங்கள்: அதாவது வாட்ஸ்அப்பில் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் தான் அதில் விளம்பரங்கள் அறிமுகப்படுத்த உள்ளது மெட்டா நிறுவனம். அதுவும் இன்ஸ்டாவில் ஸ்டோரிக்கு இடையே வருவது போல, வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ் பார்க்கும்போது விளம்பரங்கள் (WhatsApp status ads) வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் Status-ல் விளம்பரங்கள்.. இதோ முழு விவரம்..

அதேபோல் பயனாளியின் வயது, அவர் வசிக்கும் பகுதி, பயன்படுத்தும் செயலிகள் போன்றவற்றின் அடிப்படையில் விளம்பரங்கள் இருக்குமாம். குறிப்பாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் பயனர்கள் 24 மணி நேரத்தில் மையும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பதிவுகளைப் பகிரலாம்.

குறிப்பாக இந்த ஸ்டேட்டஸ்களுக்கு இடையே விளம்பரங்கள் சேர்க்கப்பட உள்ளது. இதனால் மக்களின் அனுபவம் பெரிய அளவில் பாதிக்கப்படாது என மெட்டா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நிறுவனங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களுக்கு இடையே வரும் விளம்பரங்கள் மூலம் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

அதேசமயம் பர்சனல் மெசேஜிங்-கிற்கு மட்டுமே பயன்படுத்துவோர் இந்த விளம்பரங்களைப் பார்க்க வேண்டியதில்லை என மெட்டா நிறுவனத்தின் ப்ராடெக்ட் பிரிவு துணை தலைவர் ஆலிஸ் நியூட்டன் கூறியுள்ளார். மேலும் வாட்ஸ்அப் தொடர்ந்து தனியுரிமையைப் பாதுகாக்கும் என மெட்டா நிறுவனம் உறுதியளித்துள்ளது.

அதாவது பர்சனல் மெசேஜ், அழைப்புகள், குரூப் சாட் ஆகிய அனைத்தும் வழக்கம் போல் எண்டு-டு-எண்டு என்கிரிப்ஷன் செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படும். இதனால் பயனர்களின் தகவல்கள் எந்த காரணத்திற்காகவும் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சேனல் சப்ஸ்கிரிப்ஷன்: வாட்ஸ்அப் செயலியில் வருமானம் ஈட்டுவதற்கு இரண்டு புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு வசதிகளும் பயனுள்ள வகையில் இருக்கும். இது குறித்த தகவல்களை இப்போது சற்று விரவாகப் பார்க்கலாம்.

அதாவது வணிகங்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்கள் தங்களது வாட்ஸ்அப் சேனல்களை ஸ்பான்சர் முத்திரையுடன் மக்களுக்கு விளம்பரப்படுத்தலாம். குறிப்பாக இதன் மூலம் அதிக புதிய பாலோவர்கள் பெறமுடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதன் மூலம் சிறு வணிகங்கள் பெரு நகரங்களில் விரிவுபடுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் Status-ல் விளம்பரங்கள்.. இதோ முழு விவரம்..

இதுதவிர வாட்ஸ்அப் சேனலில் அதிக சப்ஸ்கிரைபர்களை சேர்த்த பிறகு அவர்களுக்கு பிரத்யே கண்டென்களை கொடுக்க பெய்டு சப்ஸ்கிரிப்ஷன் (paid subscriptions) அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இதன் முக்கிய நோக்கம் கண்டென்ட் கிரயேட்டர்கள் மற்றும் மெட்டா நிறுவனம் பணம் சம்பாதிக்க முடியும்.

அதுவும் சமூகவலைத்தளங்களில் உள்ள பிரபலங்களுக்கு இந்த புதிய வசதி அதிகளவில் வருமானத்தை தேடித்தரும். அதாவது இன்ஸ்டா, பேஸ்புக் போன்ற தளங்களில் பகிரப்படாத ஸ்பெஷல் கன்டென்ட்களை பிரபலங்கள் பெய்டு சப்ஸ்கிரிப்ஷன் வாங்கியவர்களுக்குத் தனியாகப் பகிரலாம். ஆரம்பத்தில் மெட்டா நிறுவனம் இந்த பெய்டு சப்ஸ்கிரிப்ஷன் தொகைக்கு எந்தவிதமான கமிஷன் வசூலிக்காது. ஆனாலும் எதிர்காலத்தில் 10 சதவீதம் வரை கமிஷனை வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது.

வணிகங்கள் மற்றும் கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு பயன்படும் வகையில் தான் இந்த புதிய அம்சங்கள் கொண்டுவரப்படுவதாக மெட்டா கூறியுள்ளது. பின்பு இந்த அம்சங்கள் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp statuses and channels will feature ads and paid subscriptions: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X