WhatsApp ஸ்டேட்டஸ் அப்டேட்: ஒன்னு ரெண்டு இல்ல மொத்தமும் புதுசு! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
WhatsApp Status இல் புது அப்டேட் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இல் வாய்ஸ் நோட், இமோஜி ரியாக்ஷன் மற்றும் ஸ்டேட்டஸ் இல் லிங்க் ப்ரவியூக்கள் உள்ளிட்டவைகள் வைத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.
WhatsApp ஸ்டேட்டஸ் அப்டேட்
கூடுதலாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இல் புதிய தனியுரிமை விருப்பமும் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி நீங்கள் வாட்ஸ்அப் அப்டேட்களை யார் பார்க்கலாம் என்பதை தேர்வு செய்ய பயனர்களை அனுமதிக்கிறது. 30 வினாடிகள் வரை வாய்ஸ் நோட் ஆக பகிரும் திறனையும் அப்டேட் மூலம் கிடைக்கிறது. அதேபோல் வாட்ஸ்அப் பயனர்கள் தற்போது இமோஜியை பயன்படுத்தி ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கு பதிலளிக்கவும் முடியும்.

30 வினாடி வாய்ஸ் நோட்கள்
வாட்ஸ்அப் அறிவித்துள்ள மற்றொரு அம்சம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இல் 30 வினாடிகள் வரை வாய்ஸ் நோட்களை பதிவு செய்து வைக்கலாம். நீங்கள் ஸ்டேட்டஸை ஸ்வைப் செய்தால் எட்டு இமோஜிகள் காட்டப்படும் அதில் ஒன்றை கிளிக் செய்து பதிலளிக்கலாம். வாட்ஸ்அப் புது ஸ்டேட்டஸ் ரிங் அம்சத்தையும் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி நீங்கள் புதிதாக ஸ்டேட்ஸ் வைத்தால் உங்கள் ப்ரொஃபைல் படத்தை சுற்றி ஒரு ரிங் காட்டப்படும். அதை கிளிக் செய்தால் உங்கள் ஸ்டேட்டஸ் காண்பிக்கப்படும்.
விரைவில் வர இருக்கும் பிற புது அம்சங்கள்
பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலான புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டு இருக்கிறது. டெக்ஸ் எடிட்டர், புதிய எழுத்து முறைகள் (New Fonts) உள்ளிட்ட பல புதிய அம்சங்களை நிறுவனம் விரைவில் கொண்டு வர இருக்கிறது.
மெசேஜ் எண்ணிக்கை வரம்பு
டெக்ஸ்ட் மெசேஜ் எண்ணிக்கை வரம்பு அதிகரிப்பு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான சமீபத்திய பீட்டா அப்டேட்டில், வாட்ஸ்அப் குரூப் இல் அனுப்பப்படும் விளக்கங்களுக்கான (Descriptions) எழுத்து வரம்பை நிறுவனம் அதிகரித்து இருக்கிறது. முன்னதாக இந்த எழுத்து வரம்பு 25 ஆக இருந்த நிலையில் இதன் வரம்பு 100 ஆக அதிகரிக்கப்பட இருக்கிறது. அதேபோல் குரூப் இல் அனுப்பப்படும் மெசேஜ் எழுத்துக்களின் எண்ணிக்கை 512 ஆக இருந்த நிலையில் தற்போது இது 2048 ஆக அதிகரிக்கப்பட இருக்கிறது.

டிராயிங் டூல் மற்றும் எழுத்து சீரமைப்பு அம்சம்
வாட்ஸ்அப் நிறுவனம் டெக்ஸ்ட் எடிட்டர் என்ற அம்சத்தையும் அதனுடன் வரைதல் கருவி (Drawing tool) என்ற அம்சங்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய வகையில் டெக்ஸ்ட் மெசேஜ்கள் அனுப்பலாம் கீபோர்ட் இன் மேலே உள்ள ஃபான்ட் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் வெவ்வேறு வகையில் டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பும் விருப்பங்கள் கொண்டு வரப்பட இருக்கிறது. அதே போல் டைப் செய்த எழுத்துக்களை இடது, மையம், வலது என்ற பகுதியில் சீரமைத்து (Alignment) செய்து கொள்ளலாம். மேலும் டெக்ஸ்ட் பேக் கிரவுண்ட் கலர்களையும் மாற்றிக் கொள்ளலாம்.
New Fonts
கூடுதலாக புதிய எழுத்து முறைகள் (New Fonts) அம்சத்தையும் நிறுவனம் கொண்டு வர இருக்கிறது. அதன்படி நீங்கள் உங்கள் மெசேஜ்களை புதிய வடிவமைப்பில் வரும் காலங்களில் அனுப்பலாம். மேலும் பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF களில் உங்களுக்கு விருப்பமான டெக்ஸ்ட்களை இணைத்து கொள்ளலாம்.
அசல் தரத்தில் புகைப்படங்கள்
பயனர்களை அசல் தரத்தில் புகைப்படங்களை பகிர வாட்ஸ்அப் விரைவில் அனுமதிக்க இருக்கிறது. அதாவது, நீங்கள் இனி புகைப்படத்தை அனுப்புவதற்கு முன் அதன் தரத்தை தேர்ந்தெடுக்க வாட்ஸ்அப் விரைவில் உங்களை அனுமதிக்க இருக்கிறது. இதுகுறித்த WABetaInfo தகவலின்படி, வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டுக்கான சமீபத்திய பீட்டா அப்டேட் 2.23.2.11 இல் ஒரு புகைப்படத்தை அனுப்பும் முன் அதன் தரத்தை தேர்ந்தெடுக்க பயனர்களை அனுமதிக்கிறது. இந்த அம்சமானது பயனர்களை உயர் தெளிவுத்திறன் அல்லது அசல் தரத்தில் புகைப்படங்களை அனுப்ப அனுமதிக்கிறது.

3 தரத்தில் புகைப்படங்கள்
வாட்ஸ்அப் நிறுவனம் முன்னதாக இது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டது. சில தினத்திற்கு முன்பு வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.21.15.7 இல் 3 புகைப்பட தர விருப்பங்களை சோதனை செய்தது. அது ஆட்டோமேட்டிக், சிறந்த தரம் மற்றும் டேட்டா சேவர் பயன்முறை ஆகும். இதில் சிறந்த தரம் என்ற விருப்பத்தை தேர்வு செய்தால் புகைப்படம் ஏறத்தாழ அசல் தரத்தில் அனுப்பப்படும், டேட்டா சேவர் விருப்பத்தை தேர்வு செய்தால் புகைப்படம் அடிமட்ட தரத்தில் அனுப்பப்படும். இந்த அம்சத்தையே மேம்படுத்தி தற்போது வாட்ஸ்அப் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








