இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.! WhatsApp செய்த அந்த வேலைக்கு மத்திய மந்திரி கண்டனம்.!
இந்தியாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செயலியில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனம் கொடுக்கும் புதிய அப்டேட்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கின்றன.
இந்நிலையில் வாட்ஸ்அப் செயலி பயனர்களின் ஸ்மார்ட்போன் மைக்ரோபோனினை இயக்கியதாக எழுந்த சர்ச்சையில் அரசு விசாரணை நடத்தும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பயனர்கள் தனியுரிமை விவகாரத்தில் இதுபோன்ற செயலை ஒருபோது ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தனியுரிமை மீறப்பட்ட விவகாரத்தை அரசு முழுமையாக ஆய்வு செய்யும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திர ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தனியுரிமை விவகாரத்தில் இது ஏற்றுக் கொள்ள முடியாத விதிமீறல் ஆகும்.
இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து ஆய்வு செய்து விதிமீறல் உறுதியாகும்பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார். சமீபத்தில் தான் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர் அனுமதியின்றி அவர்களது ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை இயக்கியதாக ட்விட்டர் பொறியாளர் ஒருவர் குற்றம்சாட்டி இருந்தார்.
அதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக ஸ்கிரீன்ஷாட்களையும் அந்த ட்விட்டர் பொறியாளர் ஆதாரமாக வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க் யாரையும் நம்பாதீர்கள் என்று ட்விட் செய்திருந்தார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளித்த வாட்ஸ்அப் நிறுவனம், பிக்சல் போன் மற்றும் வாட்ஸ்அப் இடையே குறைபாடு இருப்பதைச் சுட்டிக் காட்டி குற்றச்சாட்டு தெரிவித்த ட்விட்டர் பொறியாளருடன் கடந்த 24 மணி நேரமாகப் பேசி வருகிறோம் என்றும், இது ஆண்ட்ராய்டு பிழையாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக் கூகுளை கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் அனுமதி அளிக்கப்பட்டால் மட்டும் பயனர் அழைப்புகளை மேற்கொள்ளும் போது, வாய்ஸ் நோட் அல்லது வீடியோ பதிவிடும் போது மட்டுமே வாட்ஸ்அப் சம்பந்தப்பட்ட ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை இயக்கும்.
அப்போதுகூட இந்த தகவல் பரிமாற்றங்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு விடும். இதனால் வாட்ஸ்அப் சார்பில் கூட யாராலும் அவற்றை கேட்கவே முடியாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வாட்ஸ்அப் மீதான இந்த குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்பது கூகுளின் தலையீட்டுக்குப் பின்னரே உறுதிசெய்யப்படும்.
அதேபோல் ட்விட்டர் தளத்தில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் மேற்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளதாவும் தெரிகிறது. இதன் மூலம் பயனர்கள் உலகில் யாருடன் வேண்டுமானாலும் மொபைல் எண் இல்லாமல் பேசலாம் என மஸ்க் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து..
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








