வாட்ஸ்அப் அறிமுகம் செய்த வேற லெவல் 6 அம்சங்கள்: கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க மக்களே..
வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்காகப் புத்தம் புதிய பல அம்சங்களை அதன் பிளாட்ஃபார்மில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் தொடர்ந்து வாட்ஸ்அப் புதுப்பித்தலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டில், பணத்தை மாற்றுவதற்கான ஏற்பாடு உட்பட சில குறிப்பிடத்தக்க அம்சங்களை நிறுவனம் அதன் தளத்தில் சேர்த்தது. வாட்ஸ்அப் ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய குறுஞ்செய்தி பயன்பாடாகும். ஆனால், அது வரும் அம்சங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியாது. அதை இப்போது தெரிந்துகொள்ளலாமா?

இந்த புதிய அம்சங்கள் எல்லாம் தெரிந்துகொண்டால் பயனர் அனுபவம் மேம்படும்
நீங்கள் ஒரு வாட்ஸ்அப் பயனர் என்றால், இப்போது உங்களுக்குப் பயன்படுத்தக் கிடைக்கும் ஆறு அற்புதமான வாட்ஸ்அப் அம்சங்களைப் பற்றி தெரிந்துகொள்வது இன்னும் உங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும். வாட்ஸ்அப் வழங்கும் புதிய 6 அம்சங்களைப் பற்றி நாம் இங்கே பார்க்கப் போகிறோம். இதில் உங்களுக்கு எந்த அம்சம் உண்மையிலேயே அதிக பயனை வழங்கியது மற்றும் உங்கள் பயனர் அனுபவத்தை இதில் உள்ள எந்த அம்சம் சுலபமாக்கியது என்று எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். சரி, இப்போது வாட்ஸ்அப் இல் கிடைக்கும் முதல் அம்சத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

1. லேப்டாப்பில் இருந்து அழைப்புகளைப் பெறுவதற்கான அம்சம்
வாட்ஸ்அப் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள இந்த அம்சம் உண்மையில் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கும், லேப்டாப்பில் அதிக நேரம் செலவழிக்கும் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் லேப்டாப் அல்லது கணினியில் Windows / Mac இல் இயங்கும் வாட்ஸ்அப்பை நீங்கள் நிறுவி இருந்தால் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் இனி
உங்களின் மடிக்கணினிகளில் இருந்தே நீங்கள் நேரடியாக வாட்ஸ்அப் அழைப்புகளை பயன்படுத்தலாம்.

வாட்ஸ்அப் குரல் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பு
வாட்ஸ்அப் அழைப்புகள் என்று இங்கு பொதுவாக குறிப்பிடப்பட்டது, உங்களிடைய வாட்ஸ்அப் குரல் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பு இரண்டையும் தான். இனி உங்கள் போன் அருகில் இல்லாவிட்டாலும் லேப்டாப் மூலம் வாய்ஸ் கால்ஸ் அழைப்பு மற்றும் வீடியோ கால்ஸ் அழிப்புகளில் கலந்துகொள்ளும் வசதியை வாட்ஸ்அப் சேர்த்துள்ளது. இந்த அம்சம் அழைப்புகளைப் பெற தொலைபேசியைப் தேடுவதில் இருந்து விடுவிக்கிறது.

2. வாட்ஸ்அப் பே மூலம் பணம் அனுப்பும் மற்றும் பெறும் அம்சம்
யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் சிஸ்டத்தின் (யுபிஐ ) அடிப்படையில் பயனர்கள் பணத்தை அனுப்பவும் பெறவும் WhatsApp பேமெண்ட் அனுமதிக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கும் இந்த ஆண்டு இந்த அம்சம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டுக்கு அரட்டைகளை மாற்றுவதற்கான அம்சம்
2021 இல் வெளியிடப்பட்ட மிகவும் பயனுள்ள அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த அம்சத்துடன் பயனர்கள் ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு உரையாடல்களைத் தடையின்றி நகர்த்தலாம், ஆனால் இந்தப் பரிமாற்றத்தை முடிக்க உங்களுக்கு USB-C கேபிள் தேவை. இந்த ஏற்பாடு 'செட்டிங்ஸ்' என்பதன் கீழ் உள்ளது.

4. டிஸ்அப்பியரிங் வரும் மீடியா கோப்புகள்
தங்கள் மீடியாவை இரண்டு முறை பார்க்க விரும்பாதவர்கள் மீடியா கோப்புகளை 'View only once' என அனுப்பலாம். படங்கள்/வீடியோக்களை 'ஒருமுறை மட்டும் பார்க்கவும்' என அனுப்ப, மீடியா கோப்பை அனுப்பும் முன் '1' ஐகானைத் தட்டவும். உங்கள் மெசேஜ்ஜை பெரும் ரிசீவர் ஒரு முறை மட்டுமே இந்த மீடியா பைல்களை பார்க்க முடியும். மெசேஜ்ஜை பார்த்த பிறகு படம் தானாகவே மறைந்துவிடும்.

5. பகிரும் போது வீடியோக்களை மியூட் செய்யும் அம்சம்
நீங்கள் சத்தமில்லாத பின்னணியில் இருந்து வீடியோவைப் பதிவுசெய்யும்போது, பின்னணி சத்தம் விரும்பிய பெறுநரால் கேட்கப்படுவதை நீங்கள் விரும்பாதபோது, WhatsApp இன் முடக்கு வீடியோ அம்சம் கைக்கு வரும். வாட்ஸ்அப் அரட்டைகளில் வீடியோக்களைப் பகிர்வதற்கு முன் அவற்றை முடக்கலாம்.

6.பல சாதன அம்சத்தைப் பயன்படுத்தும் அம்சம்
உங்கள் லேப்டாப், பிசி அல்லது டேப்லெட்டில் ஒரே நேரத்தில் WhatsApp ஐப் பயன்படுத்தலாம். இந்த மல்டி டிவைஸ் அம்சம் பல சாதனங்களில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.

வாட்ஸ்அப் வணிகத்தில் முகநூல் போன்ற கவர் பக்கம்
கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட சில முக்கிய அம்சங்களைப் பார்த்தோம், இந்த மெட்டாவுக்குச் சொந்தமான உடனடி செய்தியிடல் பயன்பாட்டில் வரவிருக்கும் சமீபத்திய அம்சத்தையும் கவனத்தில் கொள்வோம். வாட்ஸ்அப் டெவலப்மென்ட் டிராக்கரான WABetaInfo இன் படி, உங்கள் சுயவிவரத்திற்கு புதிய Facebook போன்ற அட்டைப் படத்தைச் சேர்க்கும் வசதியை அப்ளிகேஷன் விரைவில் கொண்டிருக்கும். இது முதன்மையாக WhatsApp வணிக கணக்குகளுக்கானதாக இருக்கும். தனிப்பட்ட WhatsApp கணக்கில் இந்த அம்சம் உள்ளதா என்பது தெரியவில்லை.

புதிய வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் என்ன உள்ளது?
சமீபத்தில் வெளியான தகவலின் படி, வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.22.5.4 என்ற வாட்ஸ்அப் அப்டேட்டில் இந்த சோதனை அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளதாக WABetaInfo அறிக்கை தெரிவிக்கிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த புதிய குரல் அழைப்பு இடைமுகத்தைக் வழங்குகிறது என்று WABetaInfo அறிக்கை தெரிவிக்கிறது. புதிய இடைமுகம் பயன்பாட்டை மிகவும் அழகியல் மற்றும் செயல்பாட்டில் எளிதாக்குவதற்கு உதவுகிறது என்று WABetaInfo கூறியுள்ளது.

புதிய வாட்ஸ்அப் அழைப்பு இடைமுகம் சோதனையா?
ஒட்டுமொத்தமாக, WABetaInfo பகிர்ந்த படத்திலிருந்து, இடைமுகம் நவீனமாகவும் நேர்த்தியாகவும் மாற்றப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இந்த புதிய அம்சத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் மேற்கொள்ளும் குரல் அழைப்புகளுக்கான அலைவடிவங்களை அறிமுகம் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. குழு குரல் அழைப்பில் யார் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காக, வாட்ஸ்அப் அலைவடிவங்களை இப்போது கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications