WhatsApp சைலண்டா அறிமுகம் செய்த அம்சம்.. இனி கூகுள் மீட், ஜூம் மீட் எல்லாம் தேவையில்ல போல!
சமூகவலைதளங்களில் பிரதான பயன்பாடாக வாட்ஸ்அப் இருக்கிறது. இந்த தளமானது பயனர்கள் தேவை அறிந்து அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேசமயத்தில் வாட்ஸ்அப் தங்களது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் இல் சைலண்டாக ஒரு புது அம்சம் பரந்த அளவிலான பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.

காலிங் லிங்க் அம்சம்
வாட்ஸ்அப் கால் இணைப்புகள் அம்சத்தை அறிமுகம் செய்யப் போவதாக மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த மாதம் அறிவித்திருந்தார். இந்த புதிய அம்சமானது பயனர்களை புதிய அழைப்பிற்கு அழைக்கவோ அல்லது முன்னதாகவே உள்ள அழைப்பில் சேரவோ அனுமதிக்கும்.
வாட்ஸ் அப் தற்போது இந்த அம்சத்தை பரந்த அளவிலான பயனருக்கு வெளியிடத் தொடங்கி இருக்கிறது. வாட்ஸ்அப் இன் சமீபத்திய அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அம்சத்தின் பயன் என்னவென்று பார்க்கலாம்.

32 பேர், 90 நாட்கள் வேலிடிட்டி
வாட்ஸ்அப் காலிங் இணைப்புகள் மூலம் ஒரே நேரத்தில் 32 பேர் வரை அழைப்பில் சேர அனுமதிக்கும். அதேபோல் இந்த இணைப்புகள் ஆனது 90 நாட்கள் வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

பரந்த அளவிலான பயனர்களுக்கு கிடைக்கிறது
இதுகுறித்த ஆண்ட்ராய்டு போலீஸ் அறிக்கையின்படி, வாட்ஸ்அப் அழைப்பு இணைப்பு அம்சமானது பெரிய அளவில் வெளியிடத் தொடங்கப்பட்டு இருக்கிறது. காலிங் இணைப்பு மேற்கொள்வதற்கான விருப்பம் கூகுள் மீட், ஜூம் மீட் போன்று இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பதிப்பின் ஒருசில பயனர்கள் கணக்கில் இந்த அம்சம் பார்க்க முடிவதாக கூறப்படுகிறது.

வீடியோ காலிங்கா அல்லது வாய்ஸ் காலிங்கா?
காலிங் பயன்பாட்டில் "அழைப்பு இணைப்பு உருவாக்கு" என்ற விருப்பம் காட்டப்படுகிறது. இதை கிளிக் செய்தால் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும் தனித்துவமான அழைப்பு இணைப்பு உருவாக்கப்படும்.
இதில் வீடியோ காலிங்கா அல்லது வாய்ஸ் காலிங்கா என்ற தேர்வு விருப்பமும் காட்டப்படுகிறது. இதன்மூலம் உங்களுக்கு எந்த காலிங் அம்ச லிங்க் தேவையோ அதை உருவாக்கிக் கொள்ளலாம்.
நீங்கள் உருவாக்கப்படும் காலிங் லிங்க்கை வாட்ஸ்அப் சேட்டிங் மூலமாகவும் பகிரலாம் அல்லது பிற தளங்கள் மூலமாகவும் இணைப்பை நகலெடுத்து பகிரலாம். வாட்ஸ்அப் இன் டெஸ்க்டாப் பதிப்பில் இந்த அம்சம் இல்லை என கூறப்படுகிறது.

பலருக்கும் தற்போதே கிடைக்கிறது
இந்த அம்சத்தை மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த மாதம் அறிவித்திருந்தார். நிறுவனம் வாட்ஸ்அப்பில் 32 உறுப்பினர்களைக் கொண்ட க்ரூப் காலிங் அம்சத்தை சோதிக்கத் தொடங்கி இருக்கிறது. க்ரூப் காலிங் அம்சத்துக்கான லிங்க்கையும் இனி உருவாக்க முடியும். இந்த அம்சம் தற்போது பரந்த அளவிலான பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.

வாட்ஸ்அப் எடுக்கும் நடவடிக்கை
மறுபுறம் வாட்ஸ்அப் மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களின் கணக்கை தடை செய்து அதன் எண்ணிக்கையை மாதாந்திர இணக்க அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. வாட்ஸ்அப் இல் உங்களது கணக்கும் தடை செய்யப்படாமல் இருக்க குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றுவது என்பது கட்டாயம்.

போலி செய்திகளை எளிதில் பரப்பும் தளமாக வாட்ஸ்அப்
மெட்டாவிற்கு சொந்தமான செய்தி பகிர்வு தளமான வாட்ஸ்அப் ஸ்கேமர்கள் மற்றும் ஹேக்கர்களால் அடிக்கடி குறிவைக்கப்படுகிறது. அதேபோல் போலி செய்திகளை எளிதில் பரப்பும் தளமாகவும் புகார் அளிக்கப்படுகிறது.
தீங்கிழைக்கும் செயல்களை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் அடிக்கடி பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் தனியுரிமை சேவைகளை வெளியிடுகிறது. வாட்ஸ்அப் கணக்கில் பயனர் ஸ்பேமில் ஈடுபட்டாலோ, மோசடி அல்லது சேவை விதிமுறைகளில் ஈடுபட்டாலோ நிறுவனம் பயனர் கணக்கை உடனடியாக தடுக்கிறது.

இதை செய்யாமல் இருப்பது நல்லது
ஸ்பேம் செய்திகளை அனுப்புவதாக புகார்கள் பெற்றாலோ அல்லது நிறுவனம் வகுத்துள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறினாலோ வாட்ஸ்அப் பயனர்களின் கணக்கை தடை செய்கிறது. உங்களுக்கு வரும் ஆதாரமற்ற தகவலை பகிராமல் இருப்பது நல்லது. தெரியாத தொடர்புகளுக்கு எந்தவொரு தேவையற்ற மெசேஜையும் அனுப்ப வேண்டாம். நிறுவனம் வகுத்துள்ள நடைமுறைகளை மீறும் எந்த ஒரு கணக்கையும் வாட்ஸ்அப் உடனடியாக தடை செய்யும். ஸ்பேம் மெசேஜ்களை பகிரும் கணக்குகள் மீதும் வாட்ஸ்அப் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.


Click it and Unblock the Notifications