வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் புதிய சேவைக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை.!

உடனடி மெசேஜிங் சேவை வழி பணம் செலுத்தும் சேவையைப் பற்றி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஒரு அறிவிப்பு அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

By Sharath
|

உடனடி மெசேஜிங் சேவை வழி பணம் செலுத்தும் சேவைப் பற்றி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஒரு அறிவிப்பு அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

 வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் புதிய சேவைக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை.!

இந்த அறிவிப்பில் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப் படுத்தவிருக்கும் பண பரிவர்த்தனைக்கான சேவையைத் தொடர தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்தச் சேவையை நடைமுறைப் படுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணங்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் இன்னும் இந்தியாவில் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்கவில்லை என்பதனால் தான் உச்ச நீதிமன்றம் தற்காலிக தடை வழங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனக் கோரி வாட்ஸ்அப் நிறுவனம், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மற்றும், மத்திய நிதி அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்தியாவில் 200 மில்லியன் பயனாளர்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் வாட்ஸ் ஆப் நிறுவனம் நிறுவ வேண்டும் என்றும் தகுந்த குறை தீர்ப்பு அதிகாரியை நியமித்த பின்புதான் வாட்ஸ் ஆப் இன் பண பரிவர்த்தனை சேவையை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கும் என்று நீதிபதி குழு தெளிவாகத் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு பயனருக்கும் வாட்ஸ் ஆப் இல் ஒரு தனி பயனாளர் எண் உள்ளது, ஆனால் பயனாளர்களிடம் இருக்கும் குறைகளை தெரிவிப்பதற்கு ஒரு அலுவலக எண் கூட வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் இல்லை என்பதும், இதனால் தான் இந்தச் சேவைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp Should Set Up Office in India to Run Payments Service Supreme Court : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X