Home
News

WhatsApp பயனர்களே உஷார்.! தீயாய் பரவும் பயங்கரமான மோசடி.. வங்கி கணக்கு கூட முடக்கம்.. சேஃப்டி டிப்ஸ் இதோ..

வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களை நோக்கி ஒரு பயங்கரமான மோசடி மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த மோசடி, வாட்ஸ்அப் பயனர்களின் வங்கி கணக்குகளின் பாஸ்வோர்டை திருடுவது முதல், உங்கள் சோஷியல் மீடியா கணக்குகளை மூன்றாம் நபரால் முடக்கம் செய்ய அனுமதிக்கிறது.

என்ன வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் இப்படி ஒரு பயங்கரமான மோசடி நடைகிறதா? அப்படியானால், வாட்ஸ்அப் பாதுகாப்பானது இல்லையா? உங்கள் வங்கி கணக்கில் (Bank account) உள்ள பணத்திற்கு ஆபத்தா? உங்கள் சமூக ஊடக அக்கௌன்ட்களை (Social media account) மற்றவர் முடக்கம் செய்து, உங்களை பிளாக்மெயில் (Blackmail) செய்ய வாய்ப்புள்ளதா? என்று பல கேள்விகளுக்கான பதில் இந்த பதிவில் உள்ளது. பதிவை இறுதி வரை படித்து பயன்பெறவும்.

WhatsApp பயனர்களே உஷார்.! தீயாய் பரவும் பயங்கரமான மோசடி..

இந்த டிஜிட்டல் உலகில், வாட்ஸ்அப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. நண்பர்கள் (Friends), குடும்பத்தினர் (Families), ஆன்லைன் பேமெண்ட் (Online Payment) என்று பல விதமான சேவைகளை ஒரே இடத்தில் செய்ய அனுமதித்ததன் மூலம் வாட்ஸ்அப் உலக ஃபேமஸ் (Famous) ஆனது. அதிக பயனர் எண்ணிக்கையை கொண்ட டிஜிட்டல் பில்ட்ஃபார்ம் ஆகவும் வாட்ஸ்அப் மாறியது. அதேநேரத்தில், மோசடிக்காரர்களால் அதிகம் தாக்கப்படும் தளமாகவும் வாட்ஸ்அப் மாறிவிட்டது.

வாட்ஸ்அப் இல் பரவும் பயங்கரமான மோசடி (Horrible scam spreading on WhatsApp):

அதிக எண்ணிக்கையை கொண்ட மொபைல் ஆப்ஸ் (Mobile Apps) என்பதனால், மோசடிக்காரர்கள் மற்றும் ஹேக்கர்களின் (Hackers) முக்கிய தாக்குதல் தளமாக வாட்ஸ்அப் உருவாகியுள்ளது. தற்போது, வாட்ஸ்அப் தளத்தில் காணப்படும் ஆபாயகரமான மோசடியை (WhatsApp Scam) செய்ய ஹேக்கர்களுக்கு OTP போன்ற விஷயங்கள் தேவைப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியானால், இந்த மோசடி எப்படி நடைபெறுகிறது?

உங்கள் போனிற்கு ஒரே ஒரு வீடியோ கால் அழைப்பை (WhatsApp Video Call) மேற்கொள்வதன் மூலம், உங்கள் போனை ஹேக் (WhatsApp Screen Sharing Hack) செய்துவிடுகிறார்கள் என்ற பகீர் உண்மை தற்போது வெளியாகியுள்ளது. இந்த மோசடி வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷேரிங் ஹேக் (WhatsApp Screen Sharing Scam) என்று அழைக்கப்படுகிறது. மோசடி செய்பவர்கள், உங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு (WhatsApp number) ஒரு வீடியோ கால் அழைப்பை மேற்கொள்கிறார்கள்.

வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷேரிங் ஸ்கேம் (WhatsApp Screen Sharing Scam):

அந்த WhatsApp Video Call அழைப்பை ஏற்ற மறு நிமிடத்தில் இருந்து, உங்கள் போனின் ஸ்க்ரீன் (Mobile Screen) அவர்களுக்கு ஷேர் (Share) செய்யப்படுகிறது. இந்த முறையின் மூலம், உங்கள் போன் டிஸ்பிளேவில் பிரதிபலிக்கும் அணைத்து தகவல்களும் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு செல்கிறது. இத்தகைய முறையை பயன்படுத்தி, மோசடிக்காரர்கள் மற்றும் ஹேக்கர்கள் உங்கள் சாதனத்தில் உள்ள அணைத்து தகவல்களையும் திருடிவிடுகிறார்கள்.

உங்கள் வங்கி அக்கௌன்ட் விபரம் (Bank Account Details), இன்ஸ்டாகிராம் (Instagram), பேஸ்புக் (Facebook), ஸ்னாப்சாட் (Snapchat) என்று நீங்கள் பயன்படுத்தும் அணைத்து ஆப்ஸ்களிலும் புகுந்துவிடுகிறார்கள். இன்னும் சில மோசமான நேரங்களில் இந்த ஆப்ஸ்களின் பாஸ்வோர்டை (Password) மாற்றி உங்களையே உள்நுழைய முடியாத படி முடக்கம் (Blocking) செய்துவிடுகிறார்கள்.

WhatsApp பயனர்களே உஷார்.! தீயாய் பரவும் பயங்கரமான மோசடி..

இதற்கும் மேலாக ஒரு படி, மேலே சென்று, மோசடிக்காரர்கள் சில வாட்ஸ்அப் பயனர்களின் சமூக ஊடகங்களின் அவதூறான தகவலை பதிவிட போவதாக கூறி, பிளாக்மெயில் (WhatsApp Blackmail) செய்து, பணத்தை பறிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தகைய மோசடி, சில காலமாக குறைந்த எண்ணிக்கையிலான வாட்ஸ்அப் பயனர்களுக்கு மட்டுமே அச்சுறுத்தலாக இருந்து வந்த நிலையில், இப்போது இந்த மோசடிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மடமடவென உயர்ந்துள்ளது.

சைபர் கிரைம் போலீசார் கூறிய பாதுகாப்பு நடவடிக்கை (Cyber Crime Police Security and Safety Tips):

இதனால், சைபர் கிரைம் போலீசார் (Cyber Crime Police) இது குறித்த எச்சரிக்கை தகவலை வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். நீங்களும் இந்த மோசடியில் சிக்கி சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளது என்பதனால், சில பாதுகாப்பு நடைமுறைகளை உடனே பின்றுவது சிறப்பானது மற்றும் பாதுகாப்பானது (WhatsApp Safety Tips). முதலில் உங்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளை ஏற்காதீர்கள். அதாவது, அழைப்புகளை அட்டண்ட் செய்யாதீர்கள்.

குறிப்பாக, அதுவொரு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வரும் வீடியோ அழைப்பாக இருந்தால், அந்த அழைப்பை நிராகரிப்பது முற்றிலும் பாதுகாப்பானது. பாதுகாப்பாக இருக்க, முதலில் வாய்ஸ் கால்களை அட்டண்ட் செய்து, பேசும் நபர் உங்களுக்கு தெரிந்தவர் தானா என்பதை உறுதி செய்த பின், வீடியோ அழைப்பிற்கு மாறுவது பாதுகாப்பானது (Safety Tips For WhatsApp Users) என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்களுடன், வாட்ஸ்அப் மூலம் OTP அல்லது வங்கி விபரங்களை பகிர்வதை தவிர்க்கவும். வாட்ஸ்அப் பயன்படுத்தும் எல்லோருக்கும் இந்த செய்தியை சென்றடைய செய்யுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருப்பதுடன், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்த தகவலை தெரியப்படுத்தி பாதுகாப்பாக இருக்கும் படி உடனே எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்துங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp screen share scam alert for Indian users stay safe by following this safety tips
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X