Home
News

வாட்ஸ்அப் பயனர்களே உஷார்! டீப்ஃபெக் செய்து ஏமாற்றி WhatsApp-ல் பணம் பறிக்கும் கும்பல்!

வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு புதிய எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது. ஏஐ (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மேசடிக்காரர்கள் எப்படி உங்கள் உறவினர் போலவும், உங்கள் நண்பர் போலவும் உங்களை ஏமாற்றி பணம் பறிக்க பார்க்கிறார்கள் என்று தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஏஐ (AI) என்று அழைக்கப்படும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் அம்சம் உலகளவில் பயன்படுத்த துவங்கிய பிறகு, இணையத்தில் எது உண்மையான புகைப்படம் மற்றும் வீடியோ என்பதையே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மீடியா தகவல்கள் உருமாறி வருகின்றன. குறிப்பாக டீப்ஃபெக் (Deepfake) என்ற தொழில்நுட்பத்துடன் ஒரு மாதிரி புகைப்படத்தை வைத்து, நீங்கள் அந்த முகத்தை வேறு எந்த முகத்துடனும் மாற்றம் செய்யலாம்.

வாட்ஸ்அப் பயனர்களே உஷார்! டீப்ஃபெக் செய்து பணம் பறிக்கும் கும்பல்!

இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சில மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப் பயனர்களிடம் டீப்ஃபெக் செய்யப்பட்ட வீடியோ மற்றும் படங்களை வைத்து, ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள் என்று சமீபத்தில் சில புகார்கள் பதிவாகியுள்ளது. சமீபத்தில், இத்தகைய ஒரு மோசடியில் ஒரு இந்தியர் மாட்டிக்கொண்டு, ரூ.40,000 இழந்திருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ஏமாற்றப்பட்ட நபர், அவர் பணம் வழங்கிய நபர் தன்னுடைய சொந்தக்காரர் தான் என்று நம்பி ஏமாறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், மோசடிக்காரர்கள் சமூக வலைத்தளத்தில் இருந்து, அந்த நபரின் உறவினர் புகைப்படத்தை திருடி, அதை டீப்ஃபெக் செய்துள்ளனர்.

வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட மோசடிக்காரர்கள், சில தந்திரங்களை பயன்படுத்தி, டீப்ஃபெக் செய்யப்பட்ட வீடியோவை வாட்ஸ்அப் பயனர் பார்ப்பது போல செய்திருக்கிறார். ஏமாற்றப்பட்ட நபரின் உறவினர்களை தெரியுமென்றும், அவர்களின் பெயரையும் குறிப்பிட்டு கூறி, அந்த நபரின் நம்பிக்கையை மோசடிக்காரர்கள் பெற்றதாக கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் பயனர்களே உஷார்! டீப்ஃபெக் செய்து பணம் பறிக்கும் கும்பல்!

முதலில், அவர் யார் என்ற விபரங்களை சமூக வலைத்தளத்தில் இருந்து திருடிய மோசடிக்காரர்கள், டீப்ஃபெக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தெரிந்த நபர்கள் போல தொடர்பு கொண்டு உரையாடியுள்ளனர். பிறகு, நேரடியாக விஷயத்திற்கு வந்துள்ளனர். உறவினர் போல உரையாடிய மோசடிக்காரர்கள், அவர்களின் உறவினர் ஒருவர் மருத்துவமனையில் அவசர உதவிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அடுத்தபடியாக, மருத்துவ தேவைக்காக ரூ.40,000 நன்கொடையாக கேட்டிருக்கிறார். இந்த பணத்தை அனுப்ப கோரி, ஒரு வங்கி கணக்கையும் அனுப்பியுள்ளார். இந்தியா திரும்பியதும் இந்த தொகையை மீண்டும் தருவதாக அந்த நபர் கூறியதை தொடர்ந்து வாட்ஸ்அப் பயனர் பணத்தை அனுப்பியுள்ளார். இரண்டு நாட்களில் மீண்டும் அதே மோசடிக்காரர் ரூ.30,000 கேட்ட போது வாட்ஸ்அப் பயனர் சந்தேகமடைந்தார்.

இம்முறை, வாட்ஸ்அப் பயனர் அவருடைய உண்மையான உறவினரை அழைத்திருக்கிறார். ஆனால், அது அவர் இல்லை என்பது உறுதியானது. பிறகு, அவர் டீப்ஃபெக் செய்யப்பட்ட தகவலை வைத்து ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்துகொண்டார். இந்த சம்பவம் முதலில் கேரளாவில் நடந்தேறியுள்ளது. அதற்கு பிறகு இந்தியாவில் உள்ள மற்ற பகுதியிலும், மக்கள் இதே மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆகையால், வாட்ஸ்அப் பயனர்களை மிகவும் கவனத்துடன் இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தாலும், அல்லது தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தாலும், கவனமாக இருக்க வேண்டும். பணம் சார்ந்த விஷயங்களை மறுமுனையில் இருக்கும் நபர் பேச துவங்கினால், இதுவொரு மோசடியாக இருக்கலாம் என்பதை புரிந்துகொண்டு, உஷாராகிக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
WhatsApp scam with deepfake 40000 rupees defrauded Beware of social media posts
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X