புதிய வாட்ஸ்ஆப் அப்டேட் : இது உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்.!

|

சமீபத்திய வெளியான அறிக்கைகள், வாட்ஸ்ஆப் அதன் புதிய அம்சங்களை மேற்பார்வையிடுவதாக தெரிவித்தன. அதை உறுதி செய்யும் வண்ணம் மிகவும் பிரபலமான செய்தி பயன்பாட்டான வாட்ஸ்ஆப்பில் ஒரு சுவாரசியமான அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.

அதாவது 'பின்னிங்' என்றவொரு அம்சத்தை வாட்ஸ்ஆப் இணைத்துள்ளது. இந்த புதிய பின்னங் அம்சம் என்றால் என்ன.? இதன் பயன்பாடு என்ன.? இதை ஆக்டிவேட் (அதாவது பின்னிங்) மற்றும் டிஆக்டிவேட் (அதாவது அன்பின்) செய்வது எப்படி என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

பின்னிங் (Pinning) அம்சம்

பின்னிங் (Pinning) அம்சம்

ஒரு வாட்ஸ்ஆப் உரையாடலை மேலும் சுவாரஸ்யமானதாக உருவாக்கும் முனைப்பில் வாட்ஸ்ஆப்பில் புதிய பின்னிங் (Pinning) அம்சம் உருட்டப்பட்டுள்ளது.

விருப்பமான சாட்

விருப்பமான சாட்

இந்த புதிய அம்சம் கொண்டு நீங்கள் உங்களுக்கு விருப்பமான சாட்டை பின் செய்து வைத்துக் கொள்ளலாம். இப்படி பின் செய்வதின் மூலம் உங்களுக்கு விருப்பமான சாட் ஆனது உங்களின் வாட்ஸ்ஆப் சாட்டின் மேல் புறத்தில் நிலைத்திருக்கும்.

மெசேஜ்கள் வந்தால்

மெசேஜ்கள் வந்தால்

அதாவது புதிய மெசேஜ்கள் வந்தால் கூட பின் செய்து வைத்த சாட் ஆனது கீழ் இறங்காது. இதுபோல் மொத்தம் மூன்று விருப்பமான சாட்களை நீங்கள் பின் செய்து வைத்துக் கொள்ளலாம். தேவை இல்லாத நேரத்தில் நீங்கள் குறிப்பிட்ட சாட்களை அன்பின் (Unpin) செய்யவும் முடியும்.

பின் செய்ய

பின் செய்ய

குறிப்பிட்ட சாட்டை பின் செய்ய அதை தொடர்ந்து பிரஸ் செய்யவும். பின்னர் வாட்ஸ்ஆப் சாட்டின் மேல்பக்கம் பின் ஐகான் தோன்றும் அதை கிளிக் செய்யவும் நீங்கள் தேர்வு செய்த சாட் பின் ஆகிவிடும்.

அன்பின் செய்ய

அன்பின் செய்ய

அன்பின் செய்ய குறிப்பிட்ட சாட்டை மீண்டும் தொடர்ந்து பிரஸ் செய்யவும். தற்போது மேல் பக்கம் அன்பின் ஐகான் தோன்றும் அதை கிளிக் செய்ய குறிப்பிட்ட சாட் அன்பின் ஆகிவிடும்.

பீட்டா பயனர்களுக்கு

பீட்டா பயனர்களுக்கு

விரைவில் அனைத்து வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு உருட்டப்பட்டுள்ளது.

பீட்டா பதிப்பு

பீட்டா பதிப்பு

அதாவது சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் இந்த புதிய வாட்ஸ்ஆப் அம்சத்தை காணமுடிகிறது. நீங்கள் பீட்டா ஆண்ட்ராய்டு பதிப்பு 2.17.162 அல்லது 2.17.163 கொண்டிருந்தால் நீங்கள் பெரும்பாலும் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த முடியும்.

ஆர்சீவ், டெலிட் மற்றும் ம்யூட்

ஆர்சீவ், டெலிட் மற்றும் ம்யூட்

ஒரு வாட்ஸ்ஆப்பை சாட் அல்லது க்ரூப் சாட்டை ஆர்சீவ், டெலிட் மற்றும் ம்யூட் செய்வது போன்றே இனி பின் செய்யவும் முடியுமென்ற இந்த புதிய வாட்ஸ்ஆப் அப்டேட் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு அம்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்

காத்திருக்க முடியாது என்றால்

காத்திருக்க முடியாது என்றால்

குறிப்பிட்டுள்ளபடி, இந்த அம்சம் வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் மட்டுமே உள்ளது. இந்த அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் காத்திருக்க முடியாது என்றால், உங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசியிலிருந்து கூகுள் ப்ளே சென்று வாட்ஸ்ஆப் பீட்டாவிற்கு பதிவுபெறவும்.

Best Mobiles in India

English summary
WhatsApp's New Update Allows You to Pin Your Favourite Chats to the Top. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X